மிருகத்தின் முத்திரையம் தேவனுடைய முத்திடையும் #1 Long Beach, California, USA 61-0216 1நாம் இப்பொழுது சிறிது நேரம் ஜெபத்திற்காக நின்றவண்ணமாயிருப்போம். எங்களுடைய பரலோகப் பிதாவே, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் ஒன்றாகக் கூடிவரும்படி கிடைத்த சிலாக்கியத்திற்காக உண்மையாகவே நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இப்பொழுது, ஓ, கர்த்தாவே, எங்களுக்கு முன்பாக இருக்கும் உம்முடைய வார்த்தையை நாங்கள் அமைதியாகவும், பயபக்தியாகவும் கையாளுகிறோம், ஏனெனில் அது தேவனுடைய வார்த்தையாக உள்ளது. அது அவ்வாறு தான் உள்ளது - இன்றிரவு உமக்குச் சித்தமாயிருக்கிறபடி, ஒரு மகத்தான பாடத்தைக் குறித்து விரிவாக எடுத்துரைக்க நான் முயற்சிக்கிறேன். பிதாவே, சபைக்கு அனுகூலமாகவும், தேவனுடைய இராஜ்ஜியத்திற்குத் தகுதியானதாகவும் உடைய காரியங்களைப் பேசும்படிக்கு பரிசுத்த ஆவியானவர் எனக்கு வார்த்தைகளை அருளும்படியாக ஜெபிக்கிறேன். இதை அருளும், கர்த்தாவே. நீர் எங்களுடைய பிதாவாக இருக்கிறீர், நாங்கள் எங்களுடைய முழு இருதயத்தோடும் உம்மை நேசிக்கிறோம். மேலும் நீர் எங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று நாங்கள் இப்பொழுது ஜெபிக்கிறோம். இன்றிரவு, நான் செய்யப்போகிறேன் என்று எண்ணுகிறபடி, வெறுமனே கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தின் ஒரு துளியை ஒரு - ஒரு குடிக்கும் பாத்திரத்தில் (glass) வைத்து, அதை என்னுடைய கரங்களில் வைத்திருப்பேனானால், நான் எவ்வளவாய் அதை என்னுடைய இருதயத்தோடு பதித்து வைத்திருப்பேன். மேலும் - அப்படியே ஓ, நான் அநேகமாக மூச்சுவிடுவதற்கும் பயந்திருப்பேன். ஆனால், அப்படியானால், பிதாவே, உம்முடைய பார்வையில், உம்முடைய இரத்தத்தால் கிரயத்துக்கு வாங்கப்பட்ட உம்முடைய மகத்தான சபையை என்னுடைய கரங்களில் கொடுத்திருக்கிறீர், நீர் அதை இரட்சிக்கும்படியாக உம்முடைய இரத்தத்தைக் கொடுத்தீர். இப்பொழுதும், கர்த்தாவே, பரிசுத்த ஆவியானவர் கண்காணிகளாக வைத்த தேவனுடைய மந்தையை நாங்கள் போஷிக்கும்படி எங்களுக்கு உதவி செய்யும். நாங்கள் இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். நீங்கள் உட்காரலாம். 2கர்த்தராகிய இயேசு தம்முடைய ஆசீர்வாதங்களை நம்மேல் அனுப்பும்படிக்கு நாங்கள் அவரையே நம்பியிருக்கிறோம். நான் ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு அறையில் இருந்த போது, ஏதோவொன்று என்னை அப்படியே அசைத்தது. எத்தனை பேருக்கு ரெய்மண்ட் ரிச்சி அவர்களைத் தெரியும்? அவர் அங்கே பின்னால் அறையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்; நான் இப்பொழுது தான் அவருக்காக ஜெபித்தேன். அவர் அளவுக்கு மீறி வேலை செய்த காரணத்தால், நிலைகுலைந்து போனவராய், பக்கவாதத்தால் (தாக்கப்பட்டு) பயங்கரமான நிலையில் இருக்கிறார். அவர் ஒரு அருமையான சகோதரன். அந்த நேரம்... கர்த்தருடைய தூதனானவர் ஆயிரக்கணக்கான ஜனங்கள் முன்பாக இறங்கி வந்த அந்த இரவில், சகோதரன் ரெய்மண்ட சரியாக மேடையில் நின்றிருந்தார். அப்போது நான் சொன்னேன் - என்னுடைய ஊழியத்தைக் குறித்து டாக்டர் பெஸ்ட் அவர்கள் டாக்டர் போஸ்வர்த் அவர்களோடு விவாதித்துக் கொண்டிருந்த போது, நான், 'நான் ஒரு சுகமளிப்பவன் என்று உரிமை கோருவதில்லை' என்றேன். நான் சொன்னேன்... அவர், 'அதை ஒரு கூட்டம் பரிசுத்த உருளையர்கள் விசுவாசிப்பார்களேயன்றி வேறு யாரும் விசுவாசிக்கமாட்டார்கள்' என்றார். நான், 'இந்த பாப்டிஸ்ட் சபைகளின் அங்கத்தினர்களா யிருந்து, கர்த்தர் மூலமாக சுகமாக்கப்பட்டதாகக் கூறவும், அதை நிரூபிக்கவும் கூடிய எத்தனை பாப்டிஸ்டுகள் இங்கேயிருக்கிறீர்கள், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள்' என்றேன். ஓ, ஏறக்குறைய முந்நூறு அல்லது அதற்கும் அதிகமான ஜனங்கள் எழுந்து நின்றனர் என்று ஊகிக்கிறேன். நான், 'அவர்களைக் குறித்து என்ன?' என்றேன். பாருங்கள்? எனவே அப்பொழுது அவர்... நான், 'ஜனங்கள் தெய்வீக சுகமளித்தலை விசுவாசிக்கின்றனர். நான் - நான் ஒரு தெய்வீக சுகமளிப்பவன் அல்ல; நான் ஒருபோதும் அதை உரிமைகோரவில்லை. என்னுடைய புத்தகம் அநேக வித்தியாசமான மொழிகளில் வெளிவந்துள்ளது. நான் ஒருபோதும் ஒரு சுகமளிப்பவன் என்று உரிமை கோரவேயில்லை. நான் - நான் தேவனுடைய ஊழியக்காரன் என்று மாத்திரமே உரிமைகோருகிறேன்' என்றேன். மேலும் நான், 'இப்பொழுது, தேவன் எனக்குக் கொடுத்த பகுத்தறியும் வரமானது, தேவனுடைய வரமாக இருக்குமானால், இப்பொழுது, அதன் பேரில் கேள்வி இருக்குமானால், தேவன் தாமே தமக்காகப் பேசுவார்' என்றேன். ஏறக்குறைய அச்சமயத்தில், இதோ தேவன் இறங்கி வந்தார். இவ்விதமாக கீழிறங்கி வந்தார். அப்போது தான் அவர்கள் அதைப் புகைப்படம் எடுத்தனர். 3அவர் என்னிடம் கூறினார், அவர் அங்கே பின்பக்கமாக முழங்கால்படியிட்டு, நான் அவருக்காக ஜெபித்த பிறகு, அவருடைய கரத்தை என்னைச் சுற்றிலும் போட்டுக்கொண்டு,'நான் உமக்காக ஒரு செய்தியை பெற்றிருக்கிறேன்' என்றார். 'என்ன?' அவர், 'மிகக் கடினமாகவும், நீண்ட நேரம் பிரசங்கம் செய்வதையும் நிறுத்தி விடும். சரியாக எனக்கு நேர்ந்தது போல, உமக்கும் ஆகப் போகிறது' என்றார். நான் எப்படியாயினும் ஒரு சமயம் ஏறக்குறைய அதைத்தான் செய்தேன். 'சகோதரன் பிரன்ஹாமே, அந்த தரிசனங்களும் காரியங்களும் உம்மேல் கிரியை செய்யும் விதத்தை நான் காண்கிறேன். நான் அப்படியே தொடர்ந்து போய்க் கொண்டிருந்தேன். அப்போது நான் உடைந்து போன ஒரு நிலைக்கு உள்ளானேன்' என்றார். பிறகு அவர் கடல் கடந்து பயணம் செய்யத் தொடங்கினார், அப்போது அவருக்கு இன்னொன்று நேர்ந்தது. மேலும் அங்கே அவர்... தேவன் அவரைத் தொடவில்லையென்றால், அவருடைய வாழ்க்கை முடிந்து விடும். எனவே அவர், 'இனிமேல் உம்மால் அதைச் செய்ய முடியாது. 'இது, அது, அல்லது இது அல்லது அது, அல்லது அதைப் போன்ற மற்றவைகள்' என்று கூறுகிற சிலர் அங்கே இருப்பார்கள்' என்றார். ஆனால், 'அது எந்த நலமான காரியத்தையும் செய்யாது. நீர் உம்முடைய ஊழியத்தைச் செய்யும் அவ்வளவு காலமும் தேவன் உம்மிடம் அனுப்பியிருக்கிற ஜனங்களிடம் காண்பிக்கிறீர், அப்போது அது அதை உறுதிப்படுத்துகிறது, அதை அப்படியே அதோடு போகும்படி விட்டுவிடும். அவர்கள் அவ்வாறு செய்யவில்லையென்றால், அவர்கள் அவ்வாறு செய்ய வில்லையென்றால்...' என்றார். சொன்னார்... அங்கே உள்ளே வைத்து என்னுடைய கரங்களை அவருடைய கரங்களால் (பிடித்துக் கொண்டு), அவர் எனக்கு உறுதியளித்து, 'சகோதரன் பிரன்ஹாமே, இனிமேலும் அதைச் செய்ய வேண்டாம். அதை உம்மிடம் சொல்லும்படிக்கு கர்த்தரால் எச்சரிக்கப்பட்டேன் என்பதை ஞாபகம் கொள்ளுங் கள், மறுடியும் நீர் அதைச் செய்யத் தொடங்கினால், நான் இருக்கிற அதே வரிசைக்கு நீர் மாறப் போகிறீர் (பாருங்கள்?)' என்றார். நான், 'சரி, சகோதரனே' என்றேன். நான் அதைக் குறித்து என்னுடைய மனைவியிடம் சொல்லவில்லை. அவள் - அவள் பில்லியை வைத்திருந்தாள், அவர்கள் எல்லா விடங்களிலும் இருந்தனர், லியோவும் ஜீனும் அவர்கள் அனைவரும் நான் மிக கொஞ்சமாக களைப்பாயிருப்பதைக் கண்டாலும், நல்லது நான் மேடையிலிருந்து போக விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் என்னை நிச்சயமாக மேடையிருந்து அழைத்துக்கொண்டு போய் விடுகிறார்கள். நான் அவ்விதமாக மேடையில் தள்ளாடுகிறதை அவள் அறிந்து, ஏன், அவள் தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள். எனவே நாம்... நீங்கள் அப்படியே காரியங்களை அதிகமாகச் செய்யலாம் என்று உங்களுக்குத் தெரியும், உங்களால் இனி மேலும் அதைச் செய்ய முடியாது; அவ்வளவு தான். 4ஒருசமயம் பால்ராடார் அவர்களை நான் நினைவு கூருகிறேன்... எத்தனை பேர் எப்பொழுதாவது அவரைக் குறித்து அறிந்து வைத்திருக்கிறீர்கள்? நிச்சயமாக, பால்ராடார் தேவனுடைய ஒரு மகத்தான மனிதராக இருந்தார். அவர் ஒரு சமயம் சிறு கதையொன்றை கூறினார், அவர் வேறொரு மனிதரோடு ஒரு இரயில் வண்டியில் போய்க் கொண்டிருந்ததாகக் கூறினார், மேலும் அவர் கூறியதாவது: இந்த மனிதர் அவரிடம் திரும்பி வர முயற்சித்தாராம், ஏனெனில் அவர் அந்த இரவில் இரயிலிலிருந்த ஒரு உறங்கும் பெட்டியில் (pullman) உறங்கினாராம். அடுத்த நாள் காலையில் காலை உணவின் போது, ஒரு ஊழியக்கார குழு எங்கோ நடக்கும் ஒரு கன்வென்ஷன் கூட்டத்துக்காக போய்க் கொண்டிருந்தனராம். எனவே இம்மனிதன் சரியாக பால் அவர்களுக்கு அடுத்ததாக உட்கார்ந்தவாறு, 'நல்லது, தேவனுக்குத் துதி உண்டாவதாக' என்றாராம். 'நான் கடந்த இரவில் சாய்விருக்கைகள் இருந்த ஒரு இரயில் பெட்டியில் இருந்ததால், கர்த்தருக்காக கொஞ்சம் பணத்தை சேமித்தேன்' என்றார். பால் அவர்களோ, 'தேவனுக்குத் துதி உண்டாவதாக, உறங்குவதற்கான இரயில் பெட்டியில் பயணம் செய்ததால், கர்த்தருடைய மனிதனைக் காப்பாற்றினேன்' என்றார். எனவே இப்பொழுது, அவர் (தேவன்) யாரிடத்தில் அதிகமாக - அதிகமாக அக்கறை கொள்வார், அவருடைய பணத்திலா அல்லது அவருடைய மனிதனிடமா? எப்போதுமே அவருடைய மனிதனிடத்தில் தான் அவர் அக்கறை கொள்கிறார். நாம் அதற்காக மிகவும் மகிழ்ச்சி யாயிருக்கிறோம். 5மேலும் இப்பொழுது, கடந்த இரவு எனக்கு ஒரு மகிமையான தருணம் உண்டாயிருந்தது என்பதை நானே எண்ணிப்பார்த்தேன். நான் சற்று அதை விட்டு விலகிச்செல்கையில், ஜனங்கள் கவர்ந்து இழுக்கப்பட்டார்கள், பரிசுத்த ஆவியானவர், அவர் ஜனங்கள் மத்தியில் விழுந்து, கூட்டத்தில் பகுத்தறிதலைக் கொடுக்கத் தொடங்கினார். அது எவ்வளவு மகிமையாயிருந்தது. பாருங்கள், அது எனக்கும் மகிமையாயிருந்தது, அது ஜெபிக்கும்படியாக கூட்டத்திற்கு வந்திருந்த யாவருக்கும் அப்படியே செய்கிறது. பாருங்கள், பாருங்கள்? இப்பொழுது, நான், 'இங்கிருக்கும் எத்தனை பேர்...' என்றேன். இப்பொழுது, தேவன் அதைச் செய்வார் என்று வாக்குத்தத்தம் பண்ணியுள்ளார். இப்பொழுது, அது அவருடைய வார்த்தையாக உள்ளது, இல்லையா? இப்பொழுது, தேவன் தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்கிறார், இல்லையா? பிறகு நான், 'இப்பொழுது, இங்கே எத்தனை பேர் விசுவாசிகளாயிருக்கிறீர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள்' என்றேன். யாவரும் தங்களுடைய கரங்களை உயர்த்தினார்கள். நான், 'இப்பொழுது, உங்கள் கரங்களை ஒருவர் மற்றவர் மேல் வையுங்கள். இப்பொழுது, வேதாகமம், 'விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்' என்று கூறுகிறது' என்றேன். அப்போது நாங்கள் தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக ஒன்றாக சேர்ந்திணைந்த கரமாக ஒருமிக்க ஒவ்வொருவருக்காகவும் ஜெபித்தோம். ஓ, என்னே, எனக்கு அது அப்படியே பரிபூரணமாக இருக்கிறது. பாருங்கள்? 6இன்று கொஞ்சம் பெட்ரோல் நிறைப்பதற்காக இங்கு எங்கேயோவுள்ள ஒரு பெட்ரோல் விற்கும் இடத்தில் இருந்தேன். ஒரு சிறு ஆள் வெளியே வந்து என்னைப் பார்த்து, 'நீர் சகோதரன் பிரன்ஹாம் தானே?' என்று கேட்டார். நான், 'ஆம்' என்றேன். அது இங்கிருந்து சற்று ஏறக்குறைய ஒரு மைல் தூரம் இருக்கும். அவர் சொன்னார், 'நான் சகோதரன் ராபர்ட்ஸ், நீர் அங்கேயிருக்கும் அசெம்பிளிஸ் ஆஃப் காட் சபையில் இருந்தது முதற்கொண்டு என்னுடைய தாயார் இருதயக் கோளாறிலிருந்து நிச்சயமாகவே சுகமடைந்து விட்டார்கள். அவர்களுக்கு மோசமான சளிப்பிரச்சனை இருக்கிறது, அவர்கள் அழைக்கப்பட்ட நேர முதற்கொண்டு ஒரு துளி இருதயக் கோளாறும் அவர்களுக்கு இல்லாதிருக்கிறது, அது என்னவாக இருந்ததோ அது ஒன்றுமேயில்லை (பாருங்கள்?). அவர்களுக்கு மோசமான சளிப்பிரச்சனை இருக்கிறது. நான் உம்மை இங்கே சந்தித்து நீர் அவர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருப்பதை அவர்கள் அறிந்து கொள்வார்களானால், அவர்கள் இன்றிரவு கூட்டத்திற்கு வருவார்கள்' என்றார். 'அவர்களால் கூடுமானால், ஞாயிறு இரவில் கலந்து கொள்ள முயற்சி செய்ய விரும்புகிறார்கள்' என்றார். அவர்கள் அநேகமாக வேறொரு சபையைச் சேர்ந்தவர்கள், ஆனால் அவர்கள் இங்கே சுகமாக்கப்பட்டார்கள். எனவே நாம் அதற்காக மகிழ்ச்சியாயிருக்கிறோம். 7வித்தியாசமான நபர்களிடமிருந்து எல்லா நேரமும் சாட்சிகள் வந்த வண்ணம் உள்ளதைக் காண்கிறேன். நாம் இங்கே முற்காலத்தில், 1946-ம் ஆண்டிலும் 1947-ம் ஆண்டிலும் இருந்த போது சுகமடைந்த ஜனங்களை நான் சந்திக்கிறேன், அங்கே முற்காலத்தில் சுகமடைந்தவர்கள், அது முதற்கொண்டு ஒரு துளி கோளாறும் இல்லாமல் இன்னும் ஜீவித்துக் கொண்டிருக்கின்றனர். எங்கோ ஓரிடத்தில் ஒரு சீமாட்டி இருந்தாள்; எனக்கு அவளுடைய கடிதம் கிடைத்தது என்று நான் இன்று நம்புகிறேன். அவள் இன்றிரவு இங்கே சபையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள் என்று நினைக்கிறேன். அவள் வருகிறாள்... நான் இங்கு எங்கோ ஓரிடத்தில் 1946-ம் ஆண்டிலோ அல்லது 1947-ம் ஆண்டிலோ இருந்த போது, அவள் ஒரு புற்று நோயிலிருந்து இங்கே சுகமடைந்தாள். அதன்பிறகு அவளுக்கு ஒரு பெரிய கட்டி உண்டானது. அந்தக் கட்டி மிகவும் பெரிதாயிருந்தது, அவள் போகும் எல்லாவிடங்களிலும் அவர்கள் அவளை இவ்விதமாக பொதிந்து வைக்க வேண்டியிருந்தது. அது அறுவை சிகிச்சை செய்வதற்கு மிகவும் பெரிதாயிருந்தது. எனவே அவர்கள் அவளை ஜெபர்ஸன்வில்லுக்கு கொண்டு வந்தனர். நான் ஒரு இரவுக்காக அங்கே அந்த சிறு கூடாரத்தில் இருந்தேன், ஏதோவொரு மனிதன் அவளை ஒரு மூலையில் உட்கார வைத்தான், மேலும் சொன்னான் - நான்... ஒரு சில வாரங்களுக்கு முன்பு அவள் கடந்து வந்து, என்ன சம்பவித்தது என்று என்னிடம் காண்பித்தாள். சபையின் சில டீக்கன்மார்களும் தர்மகர்த்தாக்களும்... அளவுக்கு அவள் மிகவும் பெரிதாக இருந்தாள். அவள் ஜெபிக்கப்பட விரும்பினாள், நான் அந்தக் கூடாரத்தில் சிலசமயங்களில் இருக்கும் போது, ஞாயிறு காலையில் ஒருவேளை அங்கே நின்று கொண்டு ஜனங்களுக்காக ஜெபிப்பதைத் தவிர வெறெந்த நேரத்திலும் ஜெபிப்பதில்லை. அடிக்கடி நான் அங்கே ஜெபிப்பதில்லை. அவர்கள் அவளை பொதிந்து, தரையில் நான் வெளியே போகும் இடத்துக்குப் பின்புறத்தில் உட்கார வைத்தனர். நான் கடந்து சென்ற போது, பரிசுத்த ஆவியானவர் பக்கவாட்டில் நோக்கிப் பார்க்க நேர்ந்தது, அதன் காரணமாக நான் பக்கவாட்டில் நோக்கி அவளைப் பார்த்தேன். அதைக் குறித்து அவளிடம் பேசி, அவள் மேல் கரங்களை வைத்தேன். அவள் மற்ற எந்த நபரையும் போல அவ்வளவு ஆரோக்கியமானவளாயிருக்கிறாள். 8அவளுடைய கடிதம் எனக்குக் கிடைத்தது. அந்த சீமாட்டி இன்றிரவு இங்கே இருப்பாளானால், அவளுடைய கரமானது உயர்த்தப்படுமா என்று வியப்படைகிறேன். அவள் அன்றொரு இரவு சபையில் இருந்தாள். அவளும் அவளுடைய கணவனும் இங்கிருந்தனர். சமீபத்தில் அவர் - அவர் ஒரு இழு வண்டியில் (trailer) வந்து, என் வீட்டிற்கு வெளியே நிறுத்தி, என்னிடம் பேசிக் கொண்டிருந்தார் என்று நம்புகிறேன். அவள் கேள்விப்பட்டிருந்தாள் - அவள் சகோதரன் மெர்ஸியருடைய தாயாரின் சிநேகிதியா யிருந்ததாகவோ அல்லது அதைப் போன்ற ஏதோவொன்றைக் கூறினாள் என்று நம்புகிறேன்; அவள் அந்தக் கடிதத்தில் என்னிடம் கூறிக்கொண்டிருந்தாள். அவள் ஒருவேளை இங்கிருக்கலாம் என்று எண்ணினேன். அந்தக் கடிதம் கடந்த வாரத்தில் எழுதப்பட்டது. ஆனால் நான்... என்ன? கட்டிடத்தின் வலது பக்கத்தில் சகோதரன் மெர்ஸியருடைய ஜனங்கள் இருக்கிறார்கள், அல்லது சகோதரன் கோட் கூறினார். வீட்டில் பெரிய கட்டியோடு இருந்து சுகமாக்கப்பட்ட சீமாட்டி கட்டிடத்தின் வலது பக்கத்தில் இருக்கிறாள். அவள் கட்டிடத்தின் வலது பக்கத்தில் எங்காவது இருப்பாளானால், மிகவும் பெரியவளாகவும், பொதிந்து வைக்கப்பட வேண்டியவளாகவும் அவள் இருந்த போது உண்மையாகவே - உண்மையாகவே சுகமாக்கப்பட்டிருக்க, யாராவது ஒருவருக்கு தேவனால் என்ன செய்ய கூடும் என்பதை ஜனங்கள் காணும்படி நீ ஏன் இங்கே வரக்கூடாது? அது... அங்கே பின்னால் இல்லையா? நல்லது ல்ங்ழ் - அவர்கள் நிச்சயமாக சற்று நகர்ந்து வர வேண்டும். அவர்கள் சிறிது நேரத்திற்கு முன்பு அங்கே உட்கார்ந்திருந்ததாக சகோதரன் கோட் சொன்னார். நீங்கள் அவர்களைக் கவனிப்பீர்களானால், அவள் சாட்சி கூறும்படி நான் விரும்புகிறேன். எவ்வளவு உறுதியாக இருக்க முடியுமோ அவ்வளவு உறுதியாக நான் இருக்கிறேன். அவள் ஒரு கட்டியோடு ஏறக்குறைய இவ்விதமாக வெளியே இருந்தாள். எப்படியாக கர்த்தர்... நாம் அப்படியே... இப்பொழுது, கவனியுங்கள், இப்பொழுது தேவனைக்குறித்து நான் என்ன கூறினேன்? அவர் கொண்டிருப்பார்... வேறு யாராவது அவ்வளவு பெரிய கட்டியை உடையவர்களாயிருந்து, அவள் நடந்து கொண்டது போல அதேவிதமாக அவர்களும் நடந்து கொண்டால், தேவன் அவளுக்கு செய்த அதே விதமாகவே உங்களுக்கும் செய்ய வேண்டியவராயிருக்கிறார். அவர் அவ்வாறு செய்யவில்லை யென்றால், அவர் அவளைச் சுகமாக்கின போது அவர் (தவறு) செய்தார் - அவர் தவறு செய்தவராவார். பாருங்கள்? தேவனால் ஒரு தவறும் செய்ய முடியாது. எனவே அவர் ஒருவருக்கு எதைச் செய்கிறாரோ, அதையே அவர் வேறொருவருக்கும் செய்ய வேண்டியவராயிருக்கிறார். இப்பொழுது, தேவையானது ஒன்று மாத்திரமே. நீங்கள் அப்படியே அதே எளிய விசுவாசத்தை உரியவர்களாக இருந்தால், அவ்வளவு தான் தேவையானது. 9இங்கு மேலே யூரெகா என்று அழைக்கப்படுகிற ஓ ரி ட த் தி ல் ஒ ரு சி று ù ப ண் இ ரு ந் தா ள் ; அ து கலிபோர்னியாவிலுள்ள யூரெகா என்று நம்புகிறேன். நான் பல வருடங்களுக்கு முன்பிருந்தே வருகிறேன், நான் ஒருபோதும் (அதைப்போன்று) யாரையும் கண்டதில்லை; அவளைப் படுக்கையிலிருந்து அசைக்கக்கூட அவர்களால் முடியவில்லை. நல்லது, அவளுடைய சிறிய தலை வீங்கியிருந்தது... உங்களுக்கு விருப்பமானால், என் சகோதரிகளே, இதை மன்னியுங்கள். அந்த ஸ்திரீயினுடைய மார்பகம் இவ்விதமாக துருத்தி நின்றிருந்தது (நீங்கள் பாருங்கள்?), அவ்விடத்திலிருந்து இந்தக் கட்டியோடு அவள் வீங்கிப் போய் காணப்பட்டாள். அவளுடைய கணவன் ஒரு வாடகை வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தான். நான், 'சகோதரனே, நான் எப்படியென்று... பார்க்கவில்லை' என்றேன். நான் அதைப் பார்த்த போது, என்னுடைய விசுவாசம் கூட தானே குன்றிப் போய் விட்டது. நான், 'நீங்கள் மருத்துவரைப் பார்த்தீர்களா?' என்று கேட்டேன். 'மருத்துவர்களைக் கொண்டிருப்பதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை' என்றார். நல்லது, சரி. 'அவள் மரித்துப் போவாளானால், அவள் மரிக்கிறாள். ஆனால் நாங்கள் தேவனை நம்பியுள்ளோம்' என்றார். நான், 'சரி, அதுவே உண்மையான விசுவாசம்' என்றேன். 'சகோதரன் பிரன்ஹாமே, நீர் செய்ய வேண்டுமென்று நான் விரும்பும் ஒரே காரியம் என்னவெனில், அங்கே உள்ளே சென்று உம்முடைய கரங்களை என்னுடைய மனைவியின் மீது வைத்து, அவளுக்காக ஜெபிப்பது தான், அப்போது அவள் சுகமடைவாள்' என்றார். ஓ, என்னே. நான் -நான் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று, அவருக்கு என்னைக் காட்டிலும் கொஞ்சம் அதிகமான விசுவாசம் இருந்தது. அது சரியே. நான் அப்படியே கிரியையில் ஈடுபடத் தொடங்கினேன்; எனக்கு ஏறக்குறைய ஒரு வருடமே ஆகியிருந்தது. நான் இதுவரையிலும் அவ்விதமாக செய்யப்பட்டது போன்ற எதையும் கண்டதேயில்லை. நான் சென்று அந்த ஸ்திரீயின் மேல் கரங்களை வைத்தேன், என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இப்பொழுது, அவளுடைய கதையை ஒரு கடிதத்தில் இப்படியாக எழுதியிருந்தாள். அவள் ஒருவேளை இப்பொழுது இங்கிருக்கலாம். அவளுடைய பக்கவாட்டில் உடைப்பு ஏற்பட்டு காலன் கணக்கில் தண்ணீர் அவளிடமிருந்து பாய்ந்தது. அது சரியாக சுகமாகி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியது. அவள் கீழ்ப்படிந்தாள் - அவளுடைய எடை ஏறக்குறைய நூறு சொச்சம் பவுண்டுகள் குறைந்தது, 105, 110 பவுண்டுகள் எடை குறைந்தது. அவள் தன்னுடைய சொந்த வேலையை மாத்திரமல்ல, ஆனால் அண்டை வீட்டுக் காரர்களின் எல்லா வேலைகளையும் (கூடச்) செய்கிறாள். எனவே... தெருவில் மேலும் கீழும் சென்று, மேலே சென்று குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதையும், அக்குழந்தைகளைக் கழுவுவதையும், மேலும் அந்தவிதமான காரியங்களையும் செய்கிறாள். அப்படியே சென்று... 10இப்பொழுது, அதே நபரோ, வேறொரு நபரோ அந்த அதே அடிப்படையில் அணுகினால், அவர் அதே காரியத்தைச் செய்ய வேண்டும். அல்லது, அதே காரியங்களைச் செய்யவில்லையென்றால், அப்போது அவர் தவறு செய்தார். அவர் அந்த-அந்த ஸ்திரீயைச் சுகப்படுத்திய போது, அந்த விதமாக அவளைச் சுகப்படுத்திய போது, அவர் தவறு செய்தார், அவர்-அவர் அவளைச் சுகப்படுத்தின போது அவர் தவறு செய்தார், அவர் - அவர் அதைச் செய்திருந்தால் - அவர் சுகப்படுத்தவில்லையென்றால்... அவர் -அவர் அவளைச் சுகப்படுத்தி, நீங்கள் அவள் விசுவாசித்த அதே விசுவாசத் தேவைகளைச் சந்தித்திருந்தும், அவர் உங்களைச் சுகப்படுத்தவில்லையெனில், அவர் முதலாவது நபரைச் சுகப்படுத்தின போது, தவறாக அதைச் செய்தார். அது, 'நீ விசுவாசித்தால் என்னால் கூடும்' என்ற ஒரு காரியத்தின் அடிப்படையில் மாத்திரமே. அவ்வளவு தான். எனவே, பாருங்கள், அப்படியானால் அதெல்லாமும் இளைப்பாறிக் கொண்டிருக்கிறது, அது எவ்வளவு சிரமமாக இருக்கிறது என்றோ அல்லது நாம் அதனால் எவ்வளவு பாதிக்கப்படுகிறோம் என்பதோ காரியமில்லை, அது அதுவல்ல; அது இளைப்பாறுவதும் விசுவாசிப்பதுமாயுள்ளது. பாருங்கள், நான்... சகோதரன் ராய் அவர்களே, நான் மீண்டும் அங்கு போகிறேன். பாருங்கள்? 11நீர் எனக்காக அந்த வேதவாக்கியத்தை வாசித்தீரா? நான், 'மிருகத்தின் முத்திரையும்' 'தேவனுடைய முத்திரையும்'என்ற பாடத்தின் பேரில் பேசும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறேன், அல்லது சரியாகச் சென்னால் அதைப் பேசுவதாக நானே கூறியிருக்கிறேன். இப்பொழுது, இது ஒரு மகத்தான பாடமாகும். ஒருக்கால் அதை நம்மால் இன்றிரவு முடிக்க முடியாமல் இருக்கும் என்று நினைக்கிறேன், அது ஒருவேளை நாளை இரவு மட்டுமாக நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். இப்பொழுது (தனிப்பட்ட) பேட்டிகளைப் பெற்றுக் கொண்டவர்கள், நாம் காலையில் 8 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டும் என்று திரு. மெர்ஸியர் கூறினார் என்று நம்புகிறேன். இப்பொழுது, ஜனங்கள் தரிசனங்களையும் காரியங்களையும் காண விரும்பும் இடமாகிய தனிப்பட்ட பேட்டிகளை நான் கொண்டிருக்கிறேன். இங்கேயிருக்கும் நீங்கள் அனைவரும் அங்கு நடக்கும் அந்தத் தனிப்பட்ட பேட்டிகளைப் பெற்றிருக்க மாட்டீர்கள் (பாருங்கள்?). மேலும் அது நாள் முழுவதும் நடக்கும். பாருங்கள்? அப்படியானால் இந்தத் தனிப்பட்ட பேட்டிகளில்... எனவே இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், நான் - காலையில் முதலாவது வருபவர் எப்பொழுது - அது எட்டு மணிக்குத் தொடங்குகிறது. இப்பொழுது, அவர் ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு தான் கூறினார். 12இப்பொழுது, மிருகத்தின் முத்திரையும், தேவனுடைய முத்திரையும் என்ற இந்த மகத்தான பாடத்தின் பேரில் (பேசப்போகிறோம்.) நாம் அதைக் குறித்து அதிகமாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். அது... மிருகத்தின் முத்திரையும் தேவனுடைய முத்திரையும் என்பதைக் குறித்த வரைபடங்கள் இங்கே இந்த மேடை முழுவதும் வந்து இருப்பதை நான் கண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு அது மிகவும் எளிமை யாக உள்ளது, வார்த்தையில் அதை நோக்குவதும் அதைக் காணுவதும் நான் எண்ணிப்பார்க்காத அளவுக்கு அப்படிப் பட்ட ஒரு - ஒரு எளிமையான காரியமாக உள்ளது... நல்லது, நான் விரும்பிய வெவ்வேறான வேதவாக்கியங்களை ஏறக்குறைய மூன்று அல்லது நான்கு பக்கங்கள் இங்கே எழுதி வைத்திருக்கிறேன். இன்றிரவு உங்களுக்காக அதை குறிப்பிட விரும்புகிறேன். இந்த பிற்பகல் வேளையில் நான் அதன் பேரில் சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில், நான் இங்கே வேதவாக்கியங் களை வெவ்வேறு பக்கங்களில் எழுதி வைத்தேன், எனவே நான் அதைக் கண்டுகொள்ள முடிந்தது, நீங்கள் விரும்பினால் அதை எழுதிக் கொள்ள முடியும். இப்பொழுது, இது ஒரு மகத்தான பாடமாகும், இது ஒரு - நான் போதிக்க வேண்டிய அத்தியாவசிய பாடங்களில் இதுவும் ஒன்று என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது, நாம் சுவிசேஷ செய்திகளை கொண்டிருந்தோம்; நமக்கு தெய்வீக சுகமளித்தல்கள் இருந்தன. இப்பொழுது, இது கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, அவருடைய இரண்டாம் வருகை போல, அது தொடர்பான செய்தியாக இருக்க வேண்டும். 13சகோதரன் ஸ்மித், அது உம்முடைய மனைவியா? நல்லது நான்... சகோதரி ஸ்மித், எப்படி இருக்கிறீர்கள்? நான் - நான்... அவர் - அவர் ஒரு அருமையான மனிதர் என்பதில் வியப்பொன்றுமில்லை. நீங்கள் அப்படிப்பட்ட அருமையாகவும் தெய்வபக்தியாகவும் தோற்றமளிக்கிற ஒரு மனைவியாக, சிறு சீமாட்டியாக இருக்கிறீர்கள். நான் - நான் இதற்கு முன்பு ஒருவேளை உங்களை சந்தித்திருக்கலாம். ஒவ்வொரு நல்ல மனிதனுக்குப் பின்பாகவும் ஒரு நல்ல மனைவி இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அது - அது மிகவும் அருமையானது. எனக்குத் தெரியும், என்னுடைய மனைவி... பிரன்ஹாம் குடும்பத்திற்கு ஏதாவது கௌரவம் கிடைக்க வேண்டுமானால், அதை அவளுக்குக் கொடுங்கள், ஏனெனில் அவள்... ஆனால் அவள் என்னைக் காட்டிலும் பத்து வயது இளையவளாகவும், பனிவெண்ணிற தலையைக் கொண்டவளாகவும் இருக்கிறாள், அவள் அப்படியே இருக்கிறாள், ஏனெனில் அவள் எனக்கும் பொது ஜனங்களுக்கும் இடையே நின்றாள், அவளில்லாமல் நான் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியவில்லை. தேவன் நிச்சயமாகவே எனக்கு ஒரு அற்புதமான மனைவியைக் கொடுத்துள்ளார். சகோதரன் ஸ்மித், அவர்கள் அற்புத மானவர்கள். அப்படியே... ஏன், அவர் சிறந்த எதையாவது ஒரு மனிதனுக்குக் கொடுக்கக்கூடுமானால், அவர் கொடுத்திருப்பார். அது சரியே. சரி. அது சரிதான். அது உண்மை. 'மனைவியைக் கண்டடைகிறவன் நன்மை யானதைக் கண்டடைகிறான்' என்று நாம் எக்காலத்திலும் கொண்டிருந்ததிலேயே ஞானமுள்ள மனிதன் கூறுகிறான். இரட்சிப்புக்குப் புறம்பே ஒரு மனிதன் கொண்டிருக்கக்கூடிய மிகச்சிறந்த காரியம் ஒரு மனைவிதான் என்று நான் - நான் எண்ணுகிறேன். அது சரியே. அது சரியே; அவள் இருதயத்திற்கு மிகவும் ஏற்றவள். 14இப்பொழுது, பேசுவதற்கு ஆதாராமாக வேத வாக்கியத்தை எடுத்துக்கொள்ளப் போகிறேன்... முதலாவதாக மிருகத்தின் முத்திரையைக் குறித்து நான் என்ன நினைக்கிறேன் என்றும் மிருகத்தின் முத்திரையைக் குறித்து வேதவாக்கியத்தில் என்ன ஆதாரம் உள்ளது என்று நான் எண்ணுவதையும் உங்களிடம் கூறப்போகிறேன். அதன்பிறகு தேவனுடைய முத்திரையைக் குறித்து வேதவாக்கியம் என்ன ஆதாரப்படுத்துகிறது என்பதைக் குறித்து நான் எண்ணுவதை உங்களிடம் கூறப்போகிறேன். இப்பொழுது, இந்த இரண்டு மகத்தான காரியங்களும், சீக்கிரமாக மகத்தான, மகத்தான ஆளுகை செய்யும் இரண்டு வல்லமைகளுக்குள் முடிந்து கொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியும்; உலகமானது சரியாக இப்பொழுதே மிருகத்தின் முத்திரையையோ அல்லது தேவனுடைய முத்திரையையோ ஆகிய இந்த இரண்டு காரியங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. அவைகளில் சில காரியங்கள் எதிர்காலத்தில் நிகழவிருக்கின்றன; அது ஏற்கனவே கடந்து போய் விட்டன என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் அதற்கு இரண்டு பதில்கள் இருக்கின்றன என்று நான் நம்புகிறேன். அதாவது தேவனுடைய முத்திரை என்பது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமாக இருக்கிறது; மிருகத்தின் முத்திரை என்பது அதைப் புறக்கணிப்பதாக உள்ளது. இப்பொழுது, இரண்டு காரியங்கள் மாத்திரமே உள்ளன. நாம் இப்பொழுது இதை ஆராய்ந்து கொண்டிருக்கையில், ஏன், வேதவாக்கியத்தை நான் உங்களுக்குக் கொடுக்கப் போகிறேன். இப்பொழுது, ஞாபகத்தில் வைக்க வேண்டிய அவைகளில் ஒரு காரியம் என்னவெனில், கடைசி நாட்களில் பூமியில் இருக்கிற ஜனங்கள் அனைவரும் தேவனுடைய முத்திரையினால் முத்திரையிடப்படப்போகிறார்கள் அல்லது மிருகத்தின் முத்திரையினால் அடையாளமிடப்படப் போகிறார்கள். அவன் எல்லாரும், தரித்திரர், பெரும் புகழ் வாய்ந்தவர்கள், அடிமைகள், சுயாதீனர், பூமியின் மேலிருக்கிற யாவரும் - அந்த முத்திரையைக் கொண்டிராதவர்கள் - இந்த முத்திரையைப் பெறும்படிச் செய்தான். உலகத் தோற்றமுதல் ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்ட போது, ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவபுஸ்தகத்தில் பெயர்கள் எழுதப்பட்ட போது, உலகத்தோற்றமுதல் ஆட்டுக்குட்டி யானவருடைய ஜீவபுஸ்தகத்தில் அவர்களுடைய பெயர்கள் எழுதப்பட்டிருக்கவில்லை. 15இப்பொழுது, அந்த இரண்டு மகத்தான காரியங்கள். இப்பொழுது, முதலாவது நாம் 'தேவனுடைய முத்திரை' என்பதின் பேரில் தொடங்கப் போகிறோம். இப்பொழுது, ஒரு முத்திரை என்பது என்ன? வேதாகமத்தில் ஒரு முத்திரை என்று வருகிற முதலாவது இடம் என்னவெனில், முற்காலங்களில் ஜனங்கள் இப்பொழுது கல்வி கற்றிருப்பது போல அவர்கள் கல்வி கற்பதற்கு முன்பு, அவர்கள் வழக்கமாக இன்று நம்முடைய பெயரை நாம் பயன்படுத்துவது போல தங்களுடைய கையொப்பத்தை இடுவதற்காக தங்களுடைய முத்திரையை பயன்படுத்தினர். சில சமயங்களில் ரோமர்களும், முற்காலத்து யூதர்களும், முற்கால கிழக்கத்திய தேசங்களும் - அவர்கள் ஒரு மோதிரத்தில் தங்களுடைய முத்திரையை வைத்து, அதைக்கொண்டு ஏதோவொன்றின் மீது முத்திரை இடுவார்கள். அவர்களால் தங்களுடைய பெயரை கையொப்பமிட கூடாமல் போனால், அந்த முத்திரையை (பயன்படுத்துவார்கள்). ஒரு முத்திரை என்பது உண்மையான வாக்கு மூலமாக (bona fide statement) இருந்தது, அது இந்த முத்திரையைக் கொண்டு முத்திரையிடப்பட்டது. இதைத் திருட்டுத்தனமாக நகலாக்க முயற்சிப்பது, இப்பொழுது, ஒரு காசோலையை கள்ளத்தனமாகத் தயாரித்து, அதில் யாரோ ஒருவருடைய பெயரை இட முயற்சிப்பது போன்று அபராதத்திற்குரிய முக்கிய (குற்றமாக) இருந்தது. இந்த முத்திரையை திருட்டுத்தனமாக நகலாக்க முயற்சிப்பது ஒரு - ஒரு பெரும் அபராதத்திற்கு காரணமாகியது. வழக்கமாக அந்த மனிதன் அதை அணிந்து கொள்வான், அவன் தன்னுடைய முத்திரையைக் கொண்டிருந்தான், அதைத் தன்னுடைய மணிக்கட்டின் பின்புறம் அணிந்து கொள்வான், அல்லது - அல்லது அவனுடைய மோதிரத்தில் அணிந்திருப்பான். அவனுடைய பெயரை கையொப்ப மிடுவதற்குப் பதிலாக அவன் அதை முத்திரையிடுவான். அவன் அதை முத்திரையிட்டிருக்கிறான் என்பதை காண்பிக்கும்படியாக அது இருந்தது - அவ்வாறு தான் அது இருந்தது. 16இப்பொழுது. இப்பொழுது, கடைசி நாட்களில், பரிசுத்த மத்தேயு 24-ம் அதிகாரம், 24-ம் வசனத்தின்படி, இந்த இரண்டு ஆவிகளும் இருக்கும் என்றும், இந்த - அதில் ஒன்று தேவனால் முத்திரையிடப்படும் என்றும், மற்றது மிருகத்தால், அந்திக்கிறிஸ்துவால் முத்திரையிடப்படும் என்றும், கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் அளவுக்கு அவையிரண்டும் ஒன்றாக மிகவும் நெருங்கியிருக்கும் என்றும் இயேசு கூறினார். பாருங்கள்? இப்பொழுது, அவைகள் அந்த அளவுக்கு மிகவும் ஒன்று போலவே இருக்கப் போகின்றன. இப்பொழுது, சில ஜனங்கள், 'நல்லது, கம்யூனிஸம் தான் மிருகத்தின் முத்திரை' என்று கூறுகிறார்கள். நீங்கள் தவறாக இருக்கிறீர்கள். கம்யூனிஸம் மிருகத்தின் முத்திரை அல்ல, இன்னும் அது இருக்கிறது, ஆனால் அது முக்கிய தலைமையானது அல்ல. மிருகத்தின் முத்திரையானது மதரீதியான தன்மை கொண்டதாகும், அது மிகவும் பக்தியுள்ளதாக இருந்து, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் அளவுக்கு மிகவும் தந்திரமாகவும், சூழ்ச்சிவாய்ந்ததாகவும் இருக்கும். கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் அளவுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். நிச்சயமாக, அவர்கள்... சமீபத்தில் பில்லி கிரஹாம் கூறினார்; ஒரு சில ஞாயிற்றுக் கிழமைகளுக்கு முன்பு, இங்கே வந்து அவர் பேசுவதை என்னுடைய ரேடியோவில் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் பிரசங்கித்துக் கொண்டிருந்தார்; அவர், 'நீங்கள் சிகரெட்டு களைக் குறித்தும் வைஸ்ராய் சிகரெட்டுகளைக் (viceroy) குறித்தும் அதிகமாகக் கேள்விப்படுகிறீர்கள்' என்றார், அல்லது அது எப்பொழுதும் என்னவாக இருந்ததோ அது, 'இந்த முனையில் உள்ள நுனியையும் (tipa), இதன் முனையில் உள்ள நெருப்பையும், அந்த விதமான ஒவ்வொன்றையும் குறித்து அதிகம் கேள்விப்படுகிறோம். அவைகளைப் புகைக்கிற ஒரு மனிதன் ஒரு முட்டாளே' என்றார். அவர் ஏறக்குறைய சரியாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். பிசாசு தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் அளவுக்கு அவர்கள் இவ்விதமான காரியங்களை மிகவும் அதிகமாக விளம்பரம் செய்கிறார்கள் என்றும் கூட சொன்னார். இப்பொழுது, அதை அந்தவிதமாக சகோதரன் கிரஹாம் குறிப்பிட்டதை நான் - நான் நம்புவதில்லை, ஏனெனில் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் வஞ்சிக்கப்பட மாட்டார்கள். இல்லை, ஐயா, அவர்கள் வஞ்சிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் தேவனால் முன்குறிக்கப்பட்டவர்கள், அவர்கள் வஞ்சிக்கப்பட மாட்டார்கள். ஆனால் அது இவ்விதமாக மிகவும் நெருக்கமாக இருக்கும் என்று இயேசு சொன்னார். எனவே ஒன்று போலவே நெருக்காக இருக்கும். இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர் களும் வஞ்சிக்கப்படக்கூடிய விதத்தில் அது மிகவும் நெருக்கமாக இருக்கும். 17இப்பொழுது, நாம் அவைகள் எங்கிருந்து வருகின்றன என்று காண விரும்புகிறோம். இவை எல்லாம் எங்கிருந்து தொடங்கின? நான் உங்களுக்கு கூறினபடி, ஒவ்வொரு கோட்பாடும், ஒவ்வொரு மார்க்கமும், நாம் கொண்டிருக்கிற ஒவ்வொன்றும் ஆதியாகமத்தில் தான் தொடங்கின. அசெம்பிளிஸ் ஆஃப் காட் (The Assemblies Of God) ஆதியாகமத்தில் தொடங்கியது. பாப்டிஸ்ட் ஆதியாகமத்தில் தான் தொடங்கியது. என்னால் அதை நிரூபிக்க முடியும். ஆம், ஐயா. நாம் கொண்டிருக்கிற ஒவ்வொரு கோட்பாடும் கூட ஆதியாகமத்தில்தான் தொடங்கியது என்பதை என்னால் நிரூபிக்க முடியும். அது சரியே. அப்படியே ஆதியாகமத்தில் தேடுங்கள், அப்படியானால் அதில் மீதியானவற்றைப் பெற்றுக் கொள்வீர்கள், அது எந்தவிதமான வித்து என்றும் அது எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பதையும் நீங்கள் பார்க்கலாம். பாருங்கள்? சற்று அதைக் கவனியுங்கள், அது அப்படியே திராட்சைக் கொடியாக இருக்கும், அது சரியாக வேதாகமத்தினூடாகப் போகும் விதத்தில் இருக்கும். அது அப்படியே சரியாக உள்ளது. அவைகள் இரண்டுமே ஆதியாகமத்தில் தான் தொடங்குகிறது. மூல அத்தியாயமான ஆதியாகமத்தில் நாம் அதைக் கண்டு கொள்கிறோம். 18இப்பொழுது, மனிதனுக்கு அடையாளமிடுவது முதலில் ஆதியாகமத்தில் தான் தொடங்கியது என்பதை நாம் கண்டு கொள்கிறோம், ஆதியாகமம் 4:15. தேவன் காயீனுக்கு அடையாளமிட்டார். எந்நேரத்திலாவது அங்கே தான் முதலில் மிருகத்தின் முத்திரை போடப்பட்டது, அது காயீனின் மேல் போடப்பட்டது; அவன் தான் அதன் தொடக்கமாக இருக்கிறான். இப்பொழுது, நீங்கள், 'காயீன் மிருகத்தின் முத்திரையைக் கொண்டிருந்தானா?' என்று கேட்கலாம். சரி, கவனிப்போம். இப்பொழுது, அவர், 'உன் வித்து சர்ப்பத்தின் தலையை நசுக்கும், அவனுடைய தலை உன்னுடைய குதிங்காலை நசுக்கும்' என்றார். காயீனுடைய வம்சத்தைக் கவனியுங்கள். காயீன் வருகையில், (அவர்கள்) விஞ்ஞானிகளாகவும், புத்திசாலிகளாகவும், பெரிய மனிதர்களாகவும் ஆனார்கள், தொடர்ந்து அவ்விதமாக கீழே வருகையில் அவர்கள் அப்படியாக ஆனார்கள். ஆனால் சேத்தின் சந்ததி வந்த ú பா து , அ வ ர் க ள் வி வ சா யி க ளா க வு ம் , ஆ டு மேய்ப்பவர்களாகவும், உழவர்களாகவும் ஆனார்கள். எனவே நீங்கள் பாருங்கள், அங்கே இருக்கிறது... இப்பொழுது, கவனியுங்கள், வேதாகமம், 'உன் வித்துக்கும் சர்ப்பத்தின் வித்துக்கும் பகை உண்டாக்குவேன் (தேவன் அதைச் செய்தார்)' என்று கூறுகிறது. இப்பொழுது, எனவே... இப்பொழுது, ஊழியக்காரச் சகோதரர்களே, அப்படியே ஒரு நிமிடம் அமைதியாயிருங்கள். அவர்கள் என் கழுத்திற்குக்கீழே இதன் மேல் எப்போதுமே ஏறுகிறார்கள் என்பதை நான் - நான் அறிவேன். ஆனால் சர்ப்பத்துக்கு ஒரு வித்து இருந்ததாக வேதாகமம் கூறுகிறது. அது அதைத் தீர்க்கிறது. சர்ப்பத்தின் வித்து- அதை நீங்கள் எந்தவிதத்திலும் எடுத்துக் கொள்ள விரும்பலாம், நாம் அதிலிருந்து தடுத்து நிறுத்தப்படுவோம்; எனக்கும் கூட என்னுடைய கருத்து உண்டு. ஆனால் அவர்கள் - ஆனால்... அது என்னவாகவும் இருக்கட்டும், ஆதியாகமம் 1-ல், ஆதியாகமம் ஒன்றாவது அதிகாரத்தில் சர்ப்பத்துக்கு ஒரு வித்து இருந்ததாக வேதாகமம் கூறுகிறது. ஆதியில் சர்ப்பமானது ஊர்ந்து செல்லும் ஒரு பாம்பாக இல்லையென்பதை இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள். அவன் மனிதனுக்கு அடுத்த காரியமாக இருந்தான். மனிதனுக்கும் மிருகத்திற்கும் இடையேயுள்ள காணாமல் போன இணைப்பை கண்டுபிடிக்க ஆயிரக்கணக்கான வருடங்களாக விஞ்ஞானம் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அவர்களால் வர முடிந்த நெருக்கமான காரியம் என்னவெனில் மனிதக்குரங்கு தான். ஆனால் மனிதக் குரங்கிலிருந்து மனிதனை அவர்களால் கொண்டு வர முடியவில்லை. ஏன்? அது ஒரு சர்ப்பமாக இருந்தது. இப்பொழுது, நீங்கள் ஆதியாகமம் 3:1-ல் கவனித்தீர்களானால், 'மிருகம் - சர்ப்பமானது சகல காட்டு மிருகங்களைக் காட்டிலும் தந்திரமுள்ளதாயிருந்தது' என்று கூறுகிறது. ஒரு மிருகம், ஒரு ஊரும் பிராணி அல்ல. அவன் அதிகமாக ஒரு மனிதனைப் போன்று இருந்தான். அவன் ஒரு மனிதனைப் போன்று காணப்பட்டான். அங்கே இடையேயுள்ள அந்தக் காணாமல் போன இணைப்பு அவன்தான், ஏனெனில் அதுதான் ஒரே வழி. ஒரு மனிதனின் வித்து ஒரு மிருகத்தின் வித்தோடு கலவாது. ஆனால் இந்த மிருகத்தை மாத்திரமே பிசாசு பயன்படுத்தக்கூடியதாக இருந்தது, ஏனெனில் அது அப்படியே மனிதனுக்கும் மிருகத்துக்கும் இடையேயிருந்தது. மேலும் வம்ச அட்டவணை... 19நான் பரிணாம வளர்ச்சியை நம்புகிறேன். ஒருவேளை முதலாவது காரியமாக, வெறும் ஒழுங்கின்மையும் வெறுமையும், எரிமலை வெடிப்பும் தவிர வேறொன்றும் இருக்கவில்லை. தேவன் கட்டிடம் கட்டும் ஒரு மகத்தான காண்ட்ராக்டராயிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஒரு மகத்தான காண்ட்ராக்டர் சிறு கூறுகளாக பிரிக்கப்பட்ட தம்முடைய பாகங்களைக் கட்டும் போது, அவர் எப்போதுமே தம்முடைய எல்லா பொருட்களையும் ஒழுங்காக வைக்கிறார். தேவன், அவர் இந்த பூமியை சுற்றச் செய்த போது, கால்சியம், பொட்டாஸ், பெட்ரோலியம், மேலும் மற்றவைகளை சிருஷ்டிக்கிறார். அவர் சரியாக அப்பொழுதே நம்முடைய சரீரங்களை பூமியின் மேல் வைத்திருந்தார், நாம் அந்த வஸ்துக்களைக் கொண்டு உண்டாக்கப்பட்டிருக்கிறோம். மேலும் மகத்தான பரிசுத்த ஆவியானவர் பூமியின் மேல் அடைகாக்கும்படிக்கு தேவனிடமிருந்து வெளியே வந்தார். அல்லது செல்லமாகக் கொஞ்சும்படிக்கு, ஒரு கோழி தன்னுடைய குஞ்சை நேசிப்பது போல நேசிக்கும்படிக்கு. மேலும் அவருடைய... அவருக்கு செட்டைகள் இருந்ததாக நாம் கற்பனை செய்வோம். அவருக்கு இறக்கைகள் கிடையாது, ஆனால் ஒரு கோழி தான் பொரித்த ஒரு குஞ்சின் மேல் இருப்பது போல- அது போல அவருக்கு இறக்கைகள் இருந்ததாக கற்பனை செய்து கொள்வோம். அவர் பூமியின் மேலிருந்து அடைகாக்கத் தொடங்கினார். கொஞ்சம் கால்சியம் வந்து, ஒரு சிறு இடத்திற்கு ஓடி, கொஞ்சம் ஈரம் மற்றும் பொட்டாஸோடு கலப்பதை என்னால் காண முடிகிறது. ஒரு சிறிய ஈஸ்டர் மலர் வெளியே வருகிறது. அவர், 'பிதாவே, இங்கே வந்து இதைப் பாரும்' என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. 'மிகவும் நல்லது, தொடர்ந்து அடைகாத்துக் கொண்டிரு.' கொஞ்சம் கூடுதலாக அடைகாத்த பிறகு. அடுத்தது வெளியே வந்தது என்னவெனில் அநேகமாக மலர்களும், தாவரங்களுமாக இருந்தன, பூமியின் தூளிலிருந்து பறவைகள் பறந்து வெளியே வந்தன. அதன்பிறகு, மிருக ஜீவன்களும் கடைசியாக தேவனுடைய அதே சாயலில் ஒரு மனிதன் மேலே வருவது மட்டுமாக தொடர்ந்து உயர்வான, உயர்வான, உயர்வான, உயர்வான ஜீவன்களும் வந்து கொண்டிருந்தன. அதைக் காட்டிலும் மேலான ஒன்று மேலே வரவில்லை என்பது விநோதமான ஏதோவொன்று, இல்லையா? அதற்கும் மேலான எதுவும் வரமுடியாது; அது தேவனுடைய சாயலாக இருந்தது. எனவே அது... பரிணாம வளர்ச்சி அந்தவிதமாக அதை மேலே கொண்டு வருகிறது. ஆனால் அவர்கள் கலப்பினம் செய்து, தங்களைத் தாங்களே மேலானவர்களாகச் செய்ய முடியாது, ஒவ்வொரு வித்தும் அதனுடைய ஜாதியைப் பிறப்பிக்கக்கடவது என்று தேவன் சொன்னார். இப்பொழுது, அச்சமயத்தில்தான் மனிதன் மேலே வந்தான். 20இப்பொழுது, பாவமானது பூமியில் தொடங்கவில்லை. அது வானத்தில் தொடங்கியது, அவன் வானத்திலிருந்து உதைத்து தள்ளப்பட்டு பூமிக்கு வந்தான். அவன் உள்ளே வரக்கூடியதாக அங்கே வேறெதுவும் இல்லாதிருந்தது. மிருகமானது அவனிடமிருந்து மிகவும் தூரமாக இருந்தது, அதன் வித்து கலவாது, எனவே அதிகமாக ஒரு மனிதனைப் போன்ற ஜீவனாயிருந்த சர்ப்பத்துக்குள் அவன் புகுந்து கொள்ள வேண்டியதாயிருந்தது. தேவன் அவனை சபித்த போது, அவனைத் தன்னுடைய வயிற்றால் (நகர்ந்து போகும்படி) செய்தார், அவர் அவனிடத்திலிருந்த ஒவ்வொரு எலும்பையும் மாற்றி விட்டார். விஞ்ஞானம் எலும்புகளைத் தோண்டியெடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது, அது... ஏன், அது தேவனுடைய இரகசியங்களுக்குள் மறைக்கப்பட்டுள்ளது, அதைக் குறித்து அறிந்து கொள்ளவிரும்பும் எவருக்கும் அவர் அதை வெளிப்படுத்துவார், நிச்சயமாக. அங்கே... இப்பொழுது, கவனியுங்கள், அவன் (எந்த) மிருக ஜீவன்களைக் காட்டிலும் அதிக தந்திரமுள்ளவனாகவும், கூர்மையான அறிவுடையவனாகவும், கபடமுள்ளவனாகவும், ஞானமுள்ளவனாகவும், புத்திசாலியாகவும் இருந்தான். அவன் சரியாக மனிதனுக்கு அடுத்தவனாக இருந்தான் (பாருங்கள்?), சகல காட்டு மிருகங்களைக் காட்டிலும் மிக அதிக தந்திரமுள்ளவனாயிருந்தான். இப்பொழுது, காயீனுக்கு ஒரு அடையாளம் கொடுக்கப்பட்டது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். மேலும் இப்பொழுது, நீங்கள், 'சாத்தான் அந்த சர்ப்பமாக இருக்க முடியாது' என்று கூறலாம். நீங்கள் இப்பொழுது, என்னுடன் 2 கொரிந்தியர் 11:14-ம் வசனத்திற்கு வருவீர்களானால், அவன் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக் கொள்வானே என்று வேதாகமம் கூறுகிறது. நீங்கள் சாத்தானைக் குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள்; அவ்வளவு தான். பாருங்கள்? ஆம், ஐயா. அவன் ஒளியின் தூதனாக தன்னையே ஆக்கிக் கொண்டான். அவன் அந்தவிதமான ஒரு உண்மைப் பொருளுக்குள் வர முடியுமானால், அவனால் ஏன் மனிதனுக்கு அடுத்ததாயிருந்த ஒரு மிருகத்திற்குள் வர முடியாது? 21இப்பொழுது, காயீன் சத்துருவுக்கு செவிகொடுத்த காரணத்தை நாம் கண்டுகொள்கிறோம், அப்போது என்ன சம்பவித்தது? அவன் முதலாவது கொலைக்காரனாக ஆகிறான். பூமியில் பொறாமைப்பட்ட முதலாவது மனிதனாக அவன் ஆகிறான். தேவனிடமிருந்து ஆதாம் வரையிலான தூய்மையான மரபு வரிசை எங்கே என்று என்னிடம் கூறுங்கள்... அது மாத்திரமே இணைப்பாக இருக்கிறது. ஆதாம் தேவனுடைய குமாரனாக இருந்தான். வேதாகமம் அவ்வாறு கூறுகிறது. அப்படியானால் அந்த பொறாமை எங்கிருந்து வந்தது? அந்த கொலையாளி எங்கிருந்து வந்தான்? அந்த விதமான எல்லா ஆவிகளும் எங்கிருந்து வந்தன? ஆதாமிலிருந்தா? அப்படியிருக்க முடியாது. அவை சாத்தானிடமிருந்து வருகின்றன. அது சரியாக அங்கிருந்து தான் வருகிறது. இப்பொழுது, அவன் முதலாவது கொலைக்காரன் என்பதைக் கண்டுகொள்கிறோம். பொறாமை கொண்ட முதலாவது நபர் அவன் தான். லூசிபர் மிகாவேலைக் குறித்துப் பொறாமை கொண்டான், அதை கீழே பூமிக்குக் கொண்டு வந்து, அதை மனிதனுக்குள் போட்டான். மேலும் சாத்தான்... காயீன் இந்த தீங்கை செய்த காரணத்தால் முதலாவது முத்திரையைப் பெற்றான். தேவன் அவனை அடையாளமிட்டார் (marked). யாருமே அவனைக் கொல்லவில்லை. அவனைத் தனியே விட்டுவிட்டார்கள். ஆனால் அவர் அவனை முத்திரையிட்ட உடனே அவன் - அவன் தேவனுடைய சந்நிதியை விட்டு வெளியே புறப் பட்டுப் போய் விட்டான் என்பதை ஞாபகம் கொள்ளுங் கள். இப்பொழுது அதைப் பிடித்துக் கொள்ளுங்கள். ஓ, மிகவும் முழுமையான (வேத) ஆராய்ச்சியை (உங்களுக்குக்) கொடுக்க நமக்கு நேரமில்லை, ஏனெனில், ஓ, சகோதரனே, நாம் இதை ஆறு மாதங்களாக தோண்டிக் கொண்டிருக்க முடியும் (பாருங்கள்?) (ஆனாலும்) அதன் மேல்புறத்தை ஒருபோதும் தொட்டிருக்கவே மாட்டோம். பாருங்கள்? 22கவனியுங்கள், அவன் அடையாளமிடப்பட்ட போது, தேவனுடைய சந்நிதியை விட்டுப் புறப்பட்டு போய், நோத் தேசத்திற்குச் சென்று ஒரு மனைவியைத் தனக்குப் பெற்றுக் கொண்டான். சபைக்குரிய அதே முன்னடையாளம்: தேவனை விட்டுப் புறப்பட்டுப் போய், உலகத்திலுள்ள ஒரு மனைவியைப் பெற்றுக்கொள்ளுதல். பாருங்கள்? அதைக் கவனியுங்கள். மகிமைமிக்கதாய் உள்ளது. இப்பொழுது, நாம் இப்பொழுது துரிதமாக மாற வேண்டியதாயுள்ளது, நாம் மிக அதிக நேரம் எடுக்கக் கூடாது. இப்பொழுது, பிறகு காயீனுடைய சகோதரனான ஆபேலைக் காண்கிறோம், காயீன் ஆபேலைக் கொலை செய்தான். தேவன் ஆபேலுக்குப் பதிலாக வேறொரு குமாரனை ஆதாமுக்குக் கொடுத்தார், அவனுடைய பெயர் சேத். அது ஒரு அடையாளமாக இருந்தது, அது மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் தேவனிடமிருந்து வந்த ஒரு அடையாளமாக இருந்தது. எனவே சேத் தன்னுடைய மனைவியைப் பெற்றுக்கொள்ள நோத் தேசத்திற்கு ஒருபோதும் போகவேயில்லை; தேவன் அவனுக்கு ஒரு மனைவியைக் கொடுத்தார். ஆனால் காயீன் தன் மேல் மிருகத்தின் முத்திரையை உடையவனாக வெளியே புறப்பட்டுப்போய் நோத் தேசத்திலிருந்து ஒரு மனைவியைத் தனக்குப் பெற்றுக்கொண்டான், சேத்தோ தேவனுடைய தெரிந்தெடுப்பை பெற்றுக்கொண்டான். இன்றைய ஸ்தாபன சபைகளின் பரிபூரண முன்னடையாளம், அவர்கள் வெளியே போய் எதையும் எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் கிறிஸ்துவின் சரீரமாகிய ஜீவனுள்ள தேவனுடைய உண்மையான சபையானது, பரிசுத்த ஆவியானவர் முத்திரை யிடுவதை மாத்திரமே எடுத்துக் கொள்கிறார்கள்: அது பரிபூரணமாயுள்ளது. தேவன் சபையில் நியமித்திருக்கிறார். 23அந்த அடையாளம் எதனால் வந்தது? சபைகள் எதனால் முத்திரையிடப்பட்டன? அந்த அடையாளம் என்னவாக இருந்தது? காயீனிடம் அந்த முத்திரை இருந்தது என்பது நமக்குத் தெரியும். அப்படியானால் உயிர்த்தெழு தலின் அடையாளம் என்னவாக இருந்தது? இன்று சபையானது அதன் மூலமாகத் தான் அடையாளமிடப் பட்டுள்ளது, பரிசுத்த ஆவியின் அûடாளம் மூலமாக. கி றி ஸ்து ம ரி க்க ôம ல் அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து சபைக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டார். பாருங்கள், அவருடைய சபையை முத்திரையிட்டுக் கொண்டிருக்கிறார், அங்கே ஏதேன் தோட்டத்தில் - சரியாக தோட்டத்திற்கு வெளியே இருந்த அந்த இரண்டு - இரண்டு பையன்களிடமிருந்து அது தொடங்குகிறது. மிருகத்தின் முத்திரை... ஒரு நாடோடியாகவும், தப்பியோடிய ஒருவனாகவும் இருக்கிறான், அவன் எங்கே போய்க்கொண்டிருக்கிறான் என்று அவனுக்குத் தெரியாது, அவன் எங்கே இருக்கிறான் என்றோ - அவன் எங்கிருக்கிறான் என்றோ - அவன் எதை அறிவான் என்பதோ அவனுக்குத் தெரியாது, அவன் எதை விரும்புகிறான் என்பது அவனுக்குத் தெரியாது. அவன் தப்பி ஓடுகிற ஒருவனாயிருந்தான். 24ஆனால் சேத்தோ வீட்டில் தங்கியிருந்தான். அவன் தன்னுடைய தகப்பனோடு இருந்தான். மேலும் தேவன் அவனுக்கு ஒரு மனைவியைக் கொடுத்தார். அது அங்கே அந்த வம்சத்தில் தொடங்குகிறது. நீங்கள் ஒருவிசை அதைப் பின்தொடர்ந்து செல்ல விரும்பினால்... நான் அதைத் தனியே விட்டுவிடுவது நல்லது. நான் அதை உங்களுக்குத் திரும்பத்திரும்ப திரும்பத் திரும்ப நிரூபிக்க விரும்புகிறேன். ஆம், ஐயா. அது சரியே, அங்கே தான் அது தொடங்கினது. அவர்கள் ஏதேன் தோட்டத்திலிருந்த ஆப்பிள் பழங்களை எடுத்து, கொஞ்சம் ஆப்பிள் பழங்களைப் புசித்தார்கள் என்று சில ஜனங்கள் எண்ணுகிறார்கள். நீங்கள் அறிகிற முதலாவது காரியம் என்னவெனில், அதுதான் முதலாவது பாவமாக இருந்தது. ஓ, சகோதரனே. நான் உன்னிடம் கூறட்டும்; நான் இதை ஒரு நகைச்சுவைக்காகக் கூறவில்லை; இது நகைச்சுவை பேசுவதற்கான இடமல்ல: ஆனால் ஆப்பிள்களைப் புசித்தல் ஸ்திரீகள் தாங்கள் நிர்வாணமாய் இருப்பதை உணரும்படி செய்ய காரணமாயிருக்குமானால், நாம் மீண்டும் ஆப்பிள் பழங்களைப் (புசிக்கக்) கொடுப்பது நல்லது. நான் அவ்வாறு எண்ணுகிறேன். நாம் அதைச் செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன். அது ஆப்பிள் பழங்களல்ல; நம்மெல்லாருக்கும் அது தெரியும். இல்லை, நாம் உணருகிறோம், ஆண்களும் பெண்களும் கலந்திருக்கும் சபையாரில், அது என்னவாக இருந்தது. அது என்னவாக இருந்தது என்பதை நாம் பார்க்கிறோம். இப்பொழுது, நாம் கண்டுகொள்ளலாம், அப்படியானால் இது... 25ஒரு அ டை யா ள ம் (mark) எ ன் ப து வேறுபடுத்திக்காட்டும் ஒன்றாக உள்ளது; அது ஒரு வித்தியாசத்தை உண்டாக்குகிறது; அது ஏதோவொன்றைப் பிரிக்கிறது. ஆனால்... உங்களுக்கு விரோதமாக ஒரு அடையாளத்தை (mark) நீங்கள் பெற்றிருப்பதாக கூறலாம், ஒரு அடையாளம். ஆனால் உங்களுக்கு விரோதமாக ஒரு முத்திரையை (seal) கொண்டிருந்தீர்கள் என்று நீங்கள் ஒருபோதும் கூறவில்லை; நீங்கள் உங்களுக்கு விரோதமான ஒரு அடையாளத்தைப் பெற்றிருக்கிறீர்கள். ஒரு முத்திரை என்பது சொந்தமானதிற்கான (ownership) ஒரு அடையாளமாக உள்ளது. ஒரு அடையாளம் (mark) என்பது வேறுபடுத்திக்காட்டும் ஒன்றாக உள்ளது. மேலும் சபையானது பரிசுத்த ஆவியால் முத்திரையிடப்பட்டுள்ளது, அது சொந்தமாகி விட்டது என்பதைக் காண்பிக்கிறது; தேவன் சபையைச் சொந்தமாகக் கொண்டிருக்கிறார். ஆனால் மிருகத்தின் முத்திரை (mark of the beast) என்பது தேவனுடைய அருளப்பட்ட வழியை எடுத்துக்கொள்ளவும் அந்த வழியில் வரவும் மறுக்கிற எளிதில் கட்டுப்படுத்த முடியாத மூர்க்கமானதும், ஒதுக்கிவைக்கப்பட்டதுமாயிருக்கிறது. காயீன் தான் அடையாளமிடப்பட்ட உடனே தூரமாய்ப் போய் விட்டான். நாம் அதைப் புரிந்து கொண்டோம். ஆபேல் மரித்தான், அவனுடைய இடத்தை எடுத்துக் கொள்ளும்படி சேத் எழும்பினான், அது உயிர்த்தெழுதலுக்கு ஒரு அடையாளமாக இருந்தது. சரி. 26இந்த இரண்டு அடையாளம், அடையாளம் மற்றும் முத்திரை ஆகியவை ஆதியாகமத்தில் தான் தொடங்கியது என்பதை நாம் கண்டு கொள்கிறோம், அது வேதாகமத்தி னூடாக வந்து வெளிப்படுத்தின விசேஷத்தில் முடிகிறது. அது ஆதியாகமத்தில் எங்கே தொடங்கினது என்றும் வெளிப் படுத்தின விசேஷத்தில் முடிவடைகிறது என்பதைக் குறித்த ஒரு வேதவாக்கியத்தை கூட இங்கே நாம் வைத்திருக்கிறோம்; அது எப்போதுமே ஒரு வடிவிலோ அல்லது மற்ற வடிவிலோ மேலே வந்து கொண்டிருக்கிறது. நான் அன்றொரு இரவில் இரத்த காணிக்கை, இரத்த பலி என்பதின் பேரில் பிரசங்கித்தது போன்று. பாபிலோன் வேதாகமத்தின் தொடக்கத்தில் ஆதியாகமத்தில் உரைக்கப் பட்டுள்ளது. பாபிலோன் வேதாகமத்தின் நடுவிலும் உரைக்கப் பட்டுள்ளது, பாபிலோன் வேதாகமத்தின் கடைசியிலும் உரைக்கப்பட்டுள்ளது. ஆதியாகமத்தில் தொடங்கி, வெளிப்படுத்தின விசேஷத்திற்கு வருகிறது. ஒவ்வொன்றும் தொடங்குகிறது - அந்த இரண்டு ஆவிகளும்... 27இங்கே கவனியுங்கள், நாம்... நாம் ஒரு நிமிடம் இதை எடுத்துக்கொள்வோம். பேழையில் கூட, பேழையில் புறாவும் காகமும் இருந்தன. ஒன்று - அவைகள் இரண்டுமே பறவைகள் தான், அவைகள் இரண்டுமே பறக்க முடிந்தது, அவைகள் இரண்டுமே... காகம் என்பது ஒரு மாய்மாலக் காரனாய் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அவன் அவ்வாறு தான் இருக்கிறான், அவன் அப்படியே ஒரு அழுக்கான மாய்மாலாக்காரனாக இருக்கிறான். இப்பொழுது, ஒரு காகத்தால் மரித்துப் போன ஒரு வயதான குதிரையின் மேல் உட்கார்ந்து, அதை அப்படியே சாப்பிட்டு, கா கா என கரைந்து, அவனுடைய சிறகுகளை அடித்து ஒரு பெரிய நேரத்தைக் கொண்டிருக்க முடிகிறது. அந்தப் பரிதாபமான சிறு புறாவால் அதன் அருகில் போக முடியவில்லை. ஏன்? அதற்குப் பித்தப்பை எதுவும் கிடையாது. பாருங்கள்? அதனால் அதை ஜீரணிக்க முடியவில்லை. அது அதைப் புசிக்குமானால், அது மரித்து விடும். ஆனால் காகமோ அங்கே உட்கார்ந்து மரித்துப்போன குதிரையை பாதிநாள் புசித்து விட்டு, வெளியே வயலில் சென்று, வீட்டிற்கு வந்து காகத்தோடு - புறாவோடு கோதுமையையும் விருந்தாக சாப்பிட முடியும். அவன் ஒரு பழைய மாய்மாலக்காரன், அவ்வளவுதான். ஒரு புறாவுக்கு கசப்புத்தன்மை கொண்ட பித்தப்பை எதுவும் கிடையாது என்பதை நீங்கள் எப்பொழுதாவது கவனித்தீர்களா? பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பெற்ற யாரும் அதைச் செய்வதில்லை. எல்லா கசப்பும் போய் விட்டது. மாய்மாலக்காரனும் உண்மையான விசுவாசியும் ஒரே சபையில் இருப்பது போல அவைகள் இரண்டுமே ஒரே பேழையில் இருந்தன, ஒன்றாக ஒரே ஸ்தாபனத்தில் இருக்கின்றன, இருக்கை - ஒரே சபை இருக்கையில் ஒன்றாக உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். 28நீங்கள் வேறொரு காரியத்தைக் கவனிக்க வேண்டு மென்று நான் விரும்புகிறேன். ஓ, நான் இயற்கையைக் குறித்துப் பேச விரும்புகிறேன். புறா குளிக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏன்? புறாவால் குளிக்க வேண்டியதில்லை. அவனுள்ளே ஒரு எண்ணெயை அவன் பெற்றிருக்கிறான், அது அவனுடைய சிறகுகள் வழியாக வெளியே வந்து, அவன் தன்னைத் தானே எல்லா நேரமும் சுத்தமாக வைத்துக் கொள்கிறான். ஒரு உண்மையான சபை அந்தவிதமாகத்தான் உள்ளது; அது குளித்து விட்டு, இது அது, அல்லது மற்றதைச் சுற்றிலும் பின்னால் போய்க்கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் அவர்கள் ஒரு எண்ணெயைப் பெற்றுள்ளனர், ஒவ்வொரு விசுவாசியும் தனக்குள்ளே பரிசுத்த எண்ணெயைப் பெற்றிருக்கிறான், அது அவனை உலகத்தின் காரியங்களிலிருந்து சுத்தமாகக் காத்துக் கொள்கிறது. ஓ, ஏதோவொரு சமயத்தில் ஆட்டுக்குட்டியும் புறாவும் என்பதின் பேரில் நம்மால் சற்று பிரசங்கிக்கக் கூடுமானால். விசுவாசியினுள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் அவனை சுத்தமாகக் காத்துக்கொள்கிறார். அவன் கழுவுகிற வெளிப்புறத்திலிருந்தல்ல, ஆனால் அது உட்புறத்திலிருந்து வெளிப்புறத்திற்கு வருகிறது. ஆமென். அனேக ஜனங்கள், 'நான் இன்று போய் அறிக்கையிட வேண்டும், நான் இன்ன இன்னதைச் சொல்ல வேண்டி யுள்ளது, நான் போய் அறிக்கை செய்ய வேண்டும். நான் இதைச் செய்ய வேண்டும்' என்று கூறுகிறார்கள். ஆனால் உங்களுக்குத் தெரியும், உள்ளேயிருக்கும் பரிசுத்த ஆவியானவர் எல்லா நேரமும் எண்ணெயைக் கொண்டு கிரியை செய்கிறார், பாவபரிகாரம், விசுவாசியை சுத்தமாக வைத்துக்கொள்கிறது. 'ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட் பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின் படியே நடக்கிறவர்களுக்கு இப்பொழுது ஆக்கினைத் தீர்ப்பில்லை.' 29நாம் அதற்குள் எவ்வாறு வருகிறோம்? ஒரு கைகுலுக்குவதின் மூலமாகவா? இல்லை. ஒரு தாளின் மூலமாகவா? ஒரு ஸ்தாபனத்தின் மூலமாகவா? இல்லை. ஆனால் ஒரே ஆவியினாலே நாமெல்லாரும் ஒரே சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, நியாயத்தீர்ப்பி லிருந்து விடுவிக்கப்பட்டுள்ளோம். தேவன் அந்த சரீரத்தை நியாயந்தீர்த்து விட்டார். தேவன் கல்வாரியில் அதை நியாயந்தீர்த்தார்; இனிமேல் அது நியாயந்தீர்க்கப்பட வேண்டியதில்லை. 'என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு.' அங்கே இரண்டு விதமான நித்திய ஜீவன்கள் கிடையாது, ஒன்றே ஒன்று மாத்திரமே உண்டு. 'நித்திய ஜீவன் உண்டு; அவன் நியாயத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீ வ னு க் கு ட் ப ட் டி ரு க் கி றா ன் . ' 'நான் இரத்தத்தைக் காணும்போது, நான் கடந்து போவேன், உங்களைக் கடந்து போ வே ன் . ' ஓ , எ ன் னே , அ து என்னை பக்திபரவசப்படுத்துகிறது. ஏன்? பாவத்திலிருந்து விடுதலை. அது சரியே. தேவனால் பிறந்தவன் பாவஞ்செய்யான், அவனால் பாவம் செய்ய முடியாது. தேவனுடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவனால் பாவஞ்செய்ய முடியாது. அது எல்லா நேரமும் என்னை பாவ நிவாரண பலியின் கீழாக இருக்க முடியாது, அப்படியானால் நான் ஒரு பாவியாயிருப்பேன், உங்களால் அப்படியிருக்க முடியாது. ஒரு பாவியாயிருந்து (அதே சமயத்தில்) பரிசுத்தவானாக இருக்கும் ஒருவரை ஒருபோதும் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். நீங்கள் ஒரு கறுப்பு வெள்ளை பறவையையோ, அல்லது குடித்த மனிதனாகவும் அதே சமயத்தில் குடிமயக்கமில்லாத மனிதனாகவும் இருக்கிற ஒருவனை ஒருபோதும் கண்டிருக்க மாட்டீர்கள். இல்லை, ஐயா. நீங்கள் ஒரு பாவியாகவோ அல்லது ஒரு பரிசுத்தவானாகவோ இருக்கிறீர்கள்; அவ்வளவு தான். நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருந்தால், அங்கே பாவ பரிகாரத்திற்கான பலியின் இரத்தமானது நாள் முழுவதும் இருந்து, 'பிதாவே, இவர்களுக்கு மன்னியும்; தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே' என்று கூப்பிட்டுக் கொண்டிருக் கிறது. ஓ, அப்படியானால் உங்களால் நிச்சயமாகவே இளைப்பாற முடியும். ஆமென், நான் அதை விரும்புகிறேன். எனவே அது அழகாயுள்ளது, பரிசுத்த ஆவியானாவர் எப்படியாக நம்மை முத்திரையிடுகிறார்! 30காகத்தையும் புறாவையும் கவனியுங்கள். காயீன் மற்றும் ஆபேல் முதற்கொண்டு கவனிப்போம். அது யூதாûஸயும் இயேசுவையும் தவிர உலகத்தில் வேறெதுவுமில்லை. நிச்சயமாக. அந்தப் புகையை நாம் கவனிப்போம். இப்பொழுது காயீன் பலிபீடத்தில் ஆபேலைக் கொன்றது போல, காயீன்... தேவனுக்கு அவசியமானதெல்லாம் நீதி தான் என்றோ அல்லது அடிப்படைவாதிகளாக இருப்பதாகவோ இருந்தால்... அதனால் தான் நான் எப்போதுமே இரண்டு வகையான ஜனங்களைக் குறித்து சொல்லியிருக்கிறேன். நான் அடிப்படைவாதிகளையும் பெந்தெகோஸ்தேயினரையும் சந்தித்திருக்கிறேன். அடிப்படை வாதிகள் தாங்கள் கற்ற கல்வியிலிருந்து கிடைத்த மனப்பாங்கைக் காண்கிறார்கள்; அவர்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியும், ஆனால் அவர்களுக்கு எந்த விசுவாசமும் கிடையாது. பெந்தெகோஸ்தேயினரிடம் விசுவாசம் உண்டு, ஆனால் தாங்கள் யாரென்று அவர்கள் அறியாதிருக்கிறார்கள். பாருங்கள்? நான் கூறினது போல, யாரோ ஒருவருக்கு வங்கியில் பணம் இருந்தும், ஒரு காசோலையை எழுத முடியவில்லை. மற்றொருவருக்கு ஒரு காசோலையை எழுதத் தெரிந்தும், வங்கியில் பணமில்லை. அவர்கள் இருவரையும் ஒன்றாகச் சேருங்கள். இப்பொழுது, பெந்தெகோஸ்தேயினர் விசுவாசத்தைப் பெற்றுள்ளவர்கள் என்று நாம் காண்கிறோம். அவர்கள் விசுவாசிக்கிறார்கள், ஆனால்... அவர்கள் அக்கினியால் நிரம்பியுள்ளனர். அவர்கள் பரிசுத்த ஆவியால் நிரம்பியுள்ளனர், ஆனால் அந்த வார்த்தையின் மீது தீர்மானம் செய்து, 'கர்த்தர் உரைக்கிறதாவது' என்பதை கூறுவது எப்படியேன்று அவர்களுக்குத் தெரியவில்லை . அவர்களெல்லாரும் கூச்சல்போட்டு விசிலை ஊதி, சத்தமிட்டு, ஓடுகிறார்கள். அவர்கள் அதை எப்பொழுதாவது நிறுத்த முடியுமானால், வல்லமையிலும் மகிமையிலும் நிற்கிற ஒரு சபையை நீங்கள் காண்பீர்கள். ஒரு அப்போஸ்தல நடபடிகளின் புஸ்தகம் அதற்குப் பின்பாக எழுதப்படும். இப்பொழுது, கவனியுங்கள்... ஆம், நான் கூறும்படி கருதவில்லை, அவர்கள்... வல்லமை, விசுவாசத்திற்குப் பதிலாக அவர்கள் சந்தோஷத்தில் அதை எடுத்துக் கொள்கிறார்கள். அங்கே அதையே பற்றிக் கொண்டு அதை விசுவாசியுங்கள். அது தேவனுடைய வார்த்தையாக உள்ளது, சரியாக அதனோடு தரித்திருங்கள். 31காயீனைக் கவனியுங்கள், அவன் வந்து காணிக்கை செலுத்தி, ஒரு பலிபீடத்தைக் கட்டி, ஒரு சபையைச் சேர்ந்து, ஒரு ஸ்தாபனத்தைச் சேர்ந்து, பலிபீடத்தண்டையில் முழங்கால்படியிட்டு, ஜெபித்து, தேவனுக்கு ஆராதனை செய்து, அவனுடைய தசமபாகத்தைச் செலுத்தினான். தேவனுக்கு அவசியமானதெல்லாம் அவ்வளவு தான் என்றால், ஆபேலைப் போன்று காயீனும் அவ்வளவாக நீதிமானாக்கப்பட்டிருப்பான். ஆனால் நீங்கள் பாருங்கள், முழு இரகசியமுமே வெளிப்பாடாக இருந்தது. அங்கே தான் பிரச்சனை இருக்கிறது; ஜீவனுள்ள தேவனுடைய முழு சபையும் கிறிஸ்துவைப் பற்றிய ஒரு ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மேல் தான் கட்டப்பட்டிருக்கிறது என்பதை ஜனங்கள் புரிந்து கொள்வதில்லை. இயேசு பரிசுத்த மத்தேயு16-ல் அவ்வாறு கூறியிருக்கிறார். 'யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதாவே இதை உனக்கு வெளிப்படுத்தினார். சீமோனே, இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்;' இயேசு கிறிஸ்துவைப் பற்றிய ஆவிக்குரிய வெளிப்பாடு... அவர் வார்த்தையாக இருக்கிறார். 'ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினார்.' அந்த வார்த்தை உங்களுக்குள் வரும் போது, இருபுறமும் கருக்குள்ள ஒரு பட்டயத்தைக் காட்டிலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனை களையும் கூட வகையறுக்கிறதாயும் இருக்கிறது. அங்கே வார்த்தையானது உள்ளே வருகிறது. தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையின் வெளிப்பாடும் உண்மையாயுள்ளது. அதனுடைய எந்த கட்டத்திலும் உங்களுடைய ஆத்துமாவை சார்ந்திருக்க விடுங்கள்: வெளிப்பாடு. ஓ, நான் இந்தக் காரியங்களை விரும்புகிறேன். என்னே, நீங்கள் - நீங்கள் ஒரு சுகமளிக்கும் ஆராதனையைக் கொண்டிருக்கக்கூடிய இடத்திற்கு அது சபையை பொருத்துகிறது என்று நினைக்கிறேன். பாருங்கள்? தேவன் அவ்வாறு கூறினார்; அது அதைத் தீர்த்து வைக்கிறது; அது - அதைப் பற்றியது அவ்வளவுதான். தேவன் அவ்வாறு கூறினார்; அப்படியே சரியாக அதனுடன் தரித்திருங்கள். 32இப்பொழுது... ஆனால் எப்படி - அந்நாளில் வேதாகமமே கிடையாது, ஆகையினால் அது நிச்சயமாக ஆபேலுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எபிரெயர் 11, 'விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான ஒரு பலியை தேவனுக்குச் செலுத்தினான்' என்று கூறுகிறது, அவன் நீதிமான் என்று (தேவனே) அவனைக்குறித்து சாட்சி கொடுத்தார். இப்பொழுது, காயீன், 'என்னுடைய தாய் கொஞ்சம் ஆப்பிள் பழங்களைப் புசித்த (காரணத்தால்) அவள் வஸ்திரம் உடுத்த வேண்டியதாயிற்று என்று ஊகிக்கிறேன்' என்று கூறினான். ஆனால் ஆபேலோ அது இரத்தம், ஜீவன் என்று அறிந்து கொண்டான். அங்கே ஏதோவொன்று தவறாக சம்பவித்திருந்தது. அவன் ஒரு ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை செலுத்தினான். அவன் இந்தச் சிறிய ஆட்டுக்குட்டியுடன் வருவதை என்னால் காண முடிகிறது... ஓ, ஆபேலுடைய பலிபீடத்தைக் காட்டிலும் சாத்தானுடைய பலிபீடமானது மிகவும் அதிகமாக அழகுவாய்ந்ததாக இருந்தது. அவனிடம் பழங்களும் மலர்களும், அழகான எல்லாமும் இருந்தன. ஆனால் அதை - அதை - அதைத்தான் நான் சபைக்குக் கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். சகோதரியே, நீ கைவிரல் நகை ஒப்பனையையும், அழகான எல்லாவற்றையும் அணிந்து கொள்ள வேண்டியதில்லை, தேவனுடன் சரியாக இருக்கும்படி உனக்கடுத்திருக்கிற சீமாட்டியைப்போன்று உடையுடுத்திக் கொள். ஆயிரம் டாலர்கள் மதிப்புள்ள இருக்கைகள் இருக்கும் ஒரு சபையையும், பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு இசைக்குழல் ஆர்கன் இருக்கும் சபையையும், இங்கேயுள்ள இந்த எல்லா ஆடம்பரமான காரியங்கள் இருக்கிற சபையையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டியதில்லை. அது நரகத்திலிருந்து வருகிறது. அது சரியே. நான் வேதாகமத்தைக் கொண்டு அதை நிரூபிக்க முடியும். அது சரியே. 33காயீன் இந்தக் காரியங்களை நினைத்துப் பார்த்தான், அவன், 'நான் இந்தக் காரியங்களை காணிக்கையாகக் கொடுப்பேன்' என்று எண்ணினான். ஆனால் ஆபேலுடைய காணிக்கை மிக நன்றாக இல்லை என்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன். அநேகமாக அந்நாளில் எந்த சணல்கயிறும் இல்லாதிருந்தது, எனவே அவன் நிச்சயமாக ஒரு திராட்சை செடியின் கொடியை அந்தச் சிறு ஆட்டுக் குட்டியின் கழுத்தைச் சுற்றிலும் போட்டு, அதை அங்கே வழிநடத்திச் சென்று, அந்தப்பாறையின் மேல் அதைக் கிடத்தியிருக்க வேண்டும். அப்போது அவனிடம் ஒரு ஈட்டியோ அல்லது ஒரு கத்தியோ இல்லாதிருந்தது, எனவே ஒரு - ஒரு துண்டுகல்லை எடுத்து, அதனுடைய சிறிய தலையை பின்னால் இழுத்து, அதனுடைய சிறிய கழுத்தை அவன் வெட்டத் தொடங்கியிருக்க வேண்டும். அது சத்தமிட்டு காலால் உதைக்கத் தொடங்கிய போது, இரத்தமானது அதன் மேல் முழுவதுமாக பாய்ந்தது, இரத்தம் வழிய, சத்தமிட்டுக் கொண்டு, அந்த பாறையின் மேல் மரித்துக் கொண்டிருந்தது... அது எதைப் பிரதிநிதித்துவப்படுத்தியது? 4000 வருடங்களுக்குப் பிறகு, தேவனுடைய ஆட்டுக்குட்டியானவர் காலந்தோறும் உள்ள கன்மலையின் மேல் மரணத்திற்கேதுவாக அடித்துக் காயப்படுத்தப்பட்டு, இரத்தம் சிந்தினவராய், சத்தமிட்டுக் கொண்டே, அந்நிய பாஷையில் பேசிக் கொண்டே கல்வாரியில் மரித்துக் கொண்டிருந்த போது, நடந்ததையே பிரதிநிதித்துவப்படுத்தினது. 'ஓ, மரித்துக் கொண்டிருக்கும் அன்பான ஆட்டுக்குட்டியே, உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தமானது, மீட்கப்பட்ட எல்லா தேவனுடைய சபையும் இனிமேல் பாவமே செய்யா திருக்கும்படியாக இரட்சிக்கும் மட்டுமாக அதனுடைய வல்லமையை ஒருபோதும் இழந்து போகாது.' நம்முடைய கல்வித் திட்டங்களும் ஸ்தாபனத் திட்டங்களும் அதை அர்த்தப்படுத்தாது [சகோதரன் பிரன்ஹாம் தம்முடைய விரல்களைச் சொடுக்குகிறார் - ஆசிரியர்.]; அது இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை எடுத்துக்கொள்ளும் மேலும் அதைச் செய்வதற்கு வேறு எதுவுமில்லை. ஆம். 34அங்கிருந்து மேலெழும்பிய புகையைக் கவனியுங்கள். மேலும் ஞாபகம் கொள்ளுங்கள், இங்கே அது இருக்கிறது, விசுவாசி. ஆபேல் தன்னுடைய ஆட்டுக்குட்டியோடு அதே பாறையின் மேல் மரித்தான். ஒவ்வொரு விசுவாசியும் அதே காரியத்தையே செய்ய வேண்டும்: உங்களுடைய ஆட்டுக்குட்டியுடன் கன்மலையின் மேல் மரித்து விடுங்கள். ஒரு செம்மறி ஆட்டுக்குட்டியிடம் ஒரு காரியத்தைத் தவிர வேறெதுவும் கிடையாது, அதுதான் கம்பளி. அவன் (செம்மறியாடு) பெற்றிருக்கிற எல்லாவற்றையும் அவன் விட்டுக்கொடுக்க வேண்டியவனாயிருக்கிறான். அவன் அதைக் குறித்து காலால் உதைத்து பகட்டு ஆரவாரம் செய்யமாட்டான். நீங்கள் அந்தச் சிறு ஆட்டுக்குட்டியை எடுத்து அதை அங்கே விட்டு விடுங்கள், நான் கூறினது போல, அந்த ஆட்டுக்குட்டி அதனுடைய மயிர்கத்தரிக்கிற வனுக்கு முன்பாக சத்தமிடாதிருக்கும். அவன் (செம்மறியாடு) மயிர்க்கத்தரிக்க விட்டுக்கொடுப்பான். அவன் அதைக் குறித்து பகட்டு ஆரவாரம் செய்ய மாட்டான். அவன் பெற்றிருக்கிற ஒரே காரியத்தையும், அவன் மனமுவந்து விட்டுக்கொடுத்து விடுவான். நாம் கிறிஸ்தவர்கள் என்று கூறுகிறோம். அன்றொரு நாள் யாரோ ஒருவர் ஒரு சிறு கடிதத்தை எனக்கு எழுதியிருந்தார் -சிறிய குறிப்பு, அது விநோதமானது, இல்லையா? நான் அங்கே கீழே அதைப் பெற்றுக் கொண்டேன், அதில், 'எனக்கு உரிமையுண்டு; நான் ஒரு அமெரிக்க பிரஜை; நான் விரும்பும் எந்தவிதமான ஆடைகளையும் நான் உடுத்துவேன்' என்று கூறப்பட்டிருந்தது. முன்னேறிச் செல்லுங்கள், அதெல்லாம் சரிதான். அது நீங்கள் ஒரு வெள்ளாடாக இருக்கிறீர்கள் என்பதைத்தான் காட்டுகிறது. அது சரியே. நீங்கள் அப்படியே முன்னே சென்று நீங்கள் விரும்பினால் அவைகளை உடுத்துங்கள். ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், நீங்கள் ஒரு செம்மறியாடாக இருந்தால், அதை செய்ய உங்களுக்கு உரிமையிருந்தும், கிறிஸ்துவுக்காக உங்களுடைய உரிமைகளை விட்டுக் கொடுத்து விடுவீர்கள். இன்றிரவு குடிப்பதற்கு எனக்கும் கூட உரிமை உண்டு; நான் அமெரிக்க பிரஜை. புகைபிடிக்க எனக்கு உரிமை உண்டு; நான் அமெரிக்க பிரஜை. உங்களுக்கும் கூட உரிமையுண்டு, ஆனால் நம்முடைய உரிமைகளை நாம் விட்டு கொடுத்து விடுகிறோம். அந்தக் காரியங்கள் கத்தரிக்கப்படட்டும். நற்பண்பாளர்களைப் போன்று நடந்து கொள்ளுங்கள், சீமாட்டிகளைப் போல உடையுடுத்துங்கள், அதைப் போன்று நடந்து கொள்ளுங்கள், அதைப் போன்று ஜீவியுங்கள். உங்களுடைய உரிமைகளை விட்டுக்கொடுத்து விடுங்கள். 35அந்தப் பலிபீடத்திலிருந்து மேலெழும்பி வந்தப் புகையைப் பாருங்கள், அது தொடர்ந்து மேலே எழுந்து வந்து, கல்வாரியில் அது அமைதியாகி விட்டது. காயீன் பலிபீடத்தில் ஆபேலைக் கொன்றது போல, யூதாஸ் பலிபீடத்தில் இயேசுவைக் கொன்றான். சரி. மீண்டும் கவனியுங்கள், நீங்கள் மூன்று சிலுவைகளை மாத்திரமே காண்கிறீர்கள், இல்லையா? அங்கே நான்கு, நான்கு சிலுவைகள் இருந்தன. இயேசு நடுவில் (தொங்கி)னார், ஒரு கள்ளன் ஒரு பக்கத்திலும் மறு கள்ளன் மறுபக்கத்திலும் (தொங்கிக்) கொண்டிருந்தனர், யூதாúஸô ஒரு காட்டத்தி மரத்தில் தன்னைத்தானே தூக்கிலிட்டுக் கொண்டு (தொங்கினான்). இயேசுவும் கூட ஒரு மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். 'மரத்தில் தூக்கப்பட்டவன் சபிக்கப் பட்டவன்.' அவர் நமக்காக சாபமானார். அவர் சிலுவையில் இருந்தது போன்று அதே விதமாக யூதாசும் இருந்தான், ஏனெனில் அவன் ஒரு மரத்தில் இருந்தான். இயேசு அதிகமாக யூதாஸ் இருந்ததைப் போன்ற ஒரு மரத்தில் இருந்தார். 'மரத்தில் தூக்கப்பட்டவன் சபிக்கப்பட்டவன்.' இங்கே கவனியுங்கள். அங்கே தேவனுடைய குமாரன் இருந்தார்: தேவன் வெளிப்பட்டு, பரலோகத்தை விட்டு இறங்கி வந்தார், மீண்டும் பரலோகத்திற்கே திரும்பிப் போய், மனந்திரும்பிய பாவியை அவரோடு எடுத்துக் கொண்டார். அங்கே கேட்டின் மகனாகிய யூதாஸ் இருந்தான், அவன் நரகத்திலிருந்து வந்து, நரகத்திற்கே மீண்டும் திரும்பிச் சென்றான், மனந்திரும்பாத பாவியைத் திரும்ப அவனோடு எடுத்துக்கொண்டு, மீண்டும் திரும்பிப் போய் விட்டான். ஓ, அது அருமையாயுள்ளது. தேவன் தோட்டத்தில் ஆதாமின் பக்கவாட்டைத் திறந்து ஒரு மணவாட்டியை உண்டாக்கும்படியாக ஒரு பாகத்தை வெளியே எடுத்தார், தேவன் கல்வாரியில் இயேசுவின் பக்கவாட்டைத் திறந்து, மணவாட்டியை அவருடைய பக்கவாட்டை விட்டு வெளியே எடுத்தார். ஓ, அது அருமை யாக உள்ளது. சிலுவையில், அது எவ்வாறு உள்ளது, அந்த இரண்டு ஆவிகளும், அவைகள் எப்படியாக காயீன் ஆபேல் வழியாக மேலே வருகின்றன: காகமும் புறாவும். கவனியுங்கள், நாம் மீண்டும் காயீனைக் குறித்து சிந்திப்போம், அவன் நோத் தேசத்திற்கு போன போது, அவனாகவே தனக்கு ஒரு மனைவியைப் பெற்றுக் கொண்டான். நாம் கண்டு கொள்கிறோம், அந்த மனைவி... நான் அங்கே எழுதிவைத்த வேதவாக்கியம் என்னிடம் உள்ளது; நான் இந்த நேரத்தில் அதற்குள் போக மாட்டேன். 36இஸ்ரவேலைக் கவனியுங்கள். இஸ்ரவேல் அவ்விடத்தை விட்டுப் போகும் போது, இரண்டு திராட்சச் செடிகளைப் போன்று, அது மேலே வந்து கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். அது எப்போதுமே அந்தவிதமாகத்தான் இருந்து வருகிறது. கவனியுங்கள், இதோ இஸ்ரவேல் தன்னுடைய பாதையில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது, இன்றுள்ள சபையைப் போல. இஸ்ரவேல் எதை சந்தித்தது? அது மோவாபைச் சந்தித்தது. அவன் தன்னுடைய சகோதரனை அனுப்பி, 'நாங்கள் உங்களுடைய தேசத்தைக் கடந்து போகலாமா? எங்களுடைய கால்நடைகள் புல் ஏதாவது மேயுமானால், நாங்கள் அதற்கான கிரயத்தை செலுத்தி விடுகிறோம். அவைகள் தண்ணீர் ஏதாவது குடித்தால், அதற்கான கிரயத்தை செலுத்தி விடுகிறோம்' என்றான். அவன் அதைச் செய்வதற்கு மறுத்தான். இப்பொழுது, இங்கே கவனியுங்கள். அங்கே இஸ்ரவேல் இருந்தது, வித்தியாசமான ஸ்தாபனங்களுக்கு இடையே யிருந்த ஒரு சிறு கூட்டம் பயணம் செய்து தேசத்தினூடாக வந்து கொண்டிருந்தது, அவர்கள் தங்குவதற்கு இடமில்லை, ஆனால் அவர்கள் சொந்த தேசத்திற்கு போகும் தங்களுடைய பாதையில் இருந்தார்கள். மோவாபோ உயர்ந்த பதவியில் இருப்பவர்களோடு தங்கியிருந்து, உலகத்தின் தேசங்களுக்கு மத்தியில் எண்ணப்பட்டது. 37என்ன சம்பவித்தது என்று கவனியுங்கள். இஸ்ரவேல் உண்மையான இரத்த ஓட்டத்தைக் கொண்டிருந்தது. பிலேயாம் எப்படி அவ்விதமாக விவாகம் செய்து வைக்க முயற்சித்தான் என்றும் அந்த ஸ்திரீகளையும் எல்லாரையும் அவர்கள் இருந்த ஸ்தானத்தை விட்டு அவன் தள்ள வேண்டியிருந்தது என்பதையும் ஞாபகம் கொள்ளுங்கள். பிலேயாமின் போதகம், பிலேயாமின் உபதேசம்... கவனியுங்கள், அங்கே மோவாப் இருந்தது, அது இஸ்ரவேலர் விசுவாசம் கொண்டிருந்த அதே தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருந்தது. அது எதற்காக? மற்றொரு முறைகேடான தவறான மனைவி, லோத்தினுடைய மகள் மூலமாகப் (பிறந்த) அவனுடைய பிள்ளை. இன்றுள்ள (மறுபடியும்) பிறவாத சபைகளைப் போன்று அப்படியே சரியாக உள்ளது, அந்த சபையின் இயல்பு என்னவெனில், உலகத்தோடு ஆவிக்குரிய விபச்சாரம் செய்து, தேவனிடத்தில் உண்மையாக ஜீவிக்காத உலகப்பிரகாரமான ஒரு சபையாக உள்ளது. மிக அழகான முன்னடையாளம்... 38கவனியுங்கள், அடிப்படைவாதியாகப் பேசும் போது... இப்பொழுது, அடிப்படைவாதியான சகோதரனே, நான்... நான் உனக்கு மிகவும் கடுமையாக வேதனை உண்டாக்க விரும்பவில்லை, ஆனால் நீ அதை உணரும்படி நான் விரும்புகிறேன். கவனியுங்கள், இதோ பிஷப்பான பிலேயாம் வருகிறான். அவன் அங்கே எழுந்து நின்றான், அந்த இராஜா, 'கீழே வந்து இந்த ஜனங்களைச் சபியும். அவர்கள் இங்கிருப்பதை நான் விரும்பவில்லை; அந்த சுகமளிக்கும் ஆராதனைகளில் ஒன்றையும் அவர்கள் இங்கே (நடத்த) முடியாது. ஏன், அவர்கள் எப்போதுமே சுகமளித்தலைச் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் அங்கே வெண்கல சர்ப்பத்தை வைத்துள்ளனர், அவர்கள் அனைவரும் அதை நோக்கிப்பார்த்து சுகமடைகின்றனர் . அவர்கள் வானத்திலிருந்து விழுந்த மன்னாவைப் புசித்துக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர், நான் அதில் எதையும் காணவில்லை. ஓ, ஒரு முட்டாள்களின் கூட்டம். நீர் வந்து அவர்களை சபிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இங்கே யுள்ள நம்முடைய ஸ்தாபனங்களில் அந்தக் காரியங்கள் எதுவும் கலப்பதை நாங்கள் விரும்பவில்லை. எனவே அவர்களை இங்கு நுழையாமல் தடுத்து விடும்' என்றான். கவனியுங்கள், இஸ்ரவேல் எவ்வளவு அடிப்படை வாதிகளாக இருந்தார்களோ அதே போன்று அவனும் இருந்தான். அவன் ஏழு பலிபீடங்களைக் கட்டினான், ஏழு பலிகள், ஏழு ஆட்டுக்கடாக்கள், இஸ்ரவேலின் பாளயத்தில் அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் போன்று அப்படியே சரியாக (பாருங்கள்?), அப்படியே அதே பலிகள். ஆனால் அடிக்கப்பட்ட கன்மலையையும், வெண்கல சர்ப்பத்தையும், பாளையத்திலிருந்த இராஜாவின் ஜய கெம்பீரத்தையும் பிலேயாம் காணத் தவறி விட்டான். அவர்களுக்கு முன்பாக சென்று கொண்டிருந்த அந்த அக்கினிஸ்தம்பத்தையும் காணத் தவறி விட்டான். 39அதேவிதமாகத்தான் இன்றும் அது இருக்கிறது. நீங்கள், 'நீங்கள் அந்த பெந்தெகோஸ்தேயினரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஒரு கூட்டம் பரிசுத்த உருளையர்கள் தான்' என்று கூறுகிறீர்கள். அவர்கள் வழக்கமாக அப்படித்தான் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் இன்னும் அவ்வாறில்லை. ஆனால் இவ்வாறாக அவர்கள் - அவர்கள் அவர்களைச் சேர்ந்தவர்கள் தான், ஆனால் அந்த அக்கினிஸ்தம்பத்தைக்காண அவர்கள் தவறி விட்டார்கள். இப்பொழுது, இந்நிலையில் அதைக் காண்பதற்கு அவர்கள் நிச்சயமுடையவர்களாய் இருக்க முடியும், விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட அதைக் குறித்த ஒரு புகைப்படம் நம்மிடம் உள்ளது. ஆமென். ஆம். அவர்கள் அக்கினி ஸ்தம்பத்தையும், பாளையத்திலிருக்கிற ஜய கெம்பீரத்தையும் காணத் தவறிவிட்டார்கள், அங்கே நம் மத்தியில் ஒரு இராஜா இருக்கிறார் (ஆமென்.), இராஜாவாகிய இயேசு இருக்கிறார். அவர்கள் அதைக் காணத் தவறுகிறார்கள். அவன் பாவ நிவிர்த்திக்கான இரத்தமிருப்பதை காணத் தவறினான். அவர்கள், 'பெந்தெகோஸ்தே சபையைச் சேர்ந்த மனிதன் வேறொரு மனிதனுடைய மனைவியுடன் ஓடி விட்டான் என்பதை நான் அறிவேன்' என்று கூறலாம். பாப்டிஸ்டுகளும், பிரஸ்பிடேரியன்களும், கத்தோலிக்கர்களும், எல்லாரும் அதே காரியத்தை செய்திருப்பதை நான் அறிவேன். அது சரியே. எனவே பெண் வாத்தில் கிடைக்கும் சமையற்குழம்பு தான் ஆண்வாத்திலும் கிடைக்கும். பானை கெண்டியை கறுப்பாயிருக்கிறாய் என்று அழைக்க முடியாது. நாம் அனைவரும் மனிதர்களாயிருக்கிறோம், இந்த எல்லா காரியங்களையும் நம்முடைய - நம்முடைய ஜனங்கள் மத்தியில் நாம் கொண்டு வருகிறோம். ஆனால் நாம் யாராக இருந்தாலும், தேவன் தனிப்பட்ட நபர்களாக நம்முடன் இடைபடுகிறார். எனவே பெந்தெகோஸ்தே ஆசீர்வாதமானது சரியாக உள்ளது. 40இஸ்ரவேலையும் மோவாபையும் கவனியுங்கள்; இப்பொழுது அது ஒரேவிதமாக உள்ளது. நாம் கண்டு கொள்கிறோம், சபை எடுத்துக்கொள்கிறது...?... அவர்கள் வெளியே சென்று ஸ்தாபன காரியங்களை ஏற்றுக்கொண்டு, தாங்கள் விரும்பும் எந்த காரியத்திலும் அதைக் கொண்டு வருகின்றனர். அவர்கள் வெறுமனே, 'நல்லது இப்பொழுது, நீங்கள் வந்து எங்களுடைய சபையில் ஞானஸ்நானம் பண்ணப்படுவீர்களானால், எழுந்து நின்று, இயேசுவே தேவனுடைய குமாரன் என்று நீங்கள் விசுவாசிப்பதாக சொல்லுங்கள், அப்படியானால் நாங்கள் - நாங்கள் உங்களுக்கு சபையில் ஞானஸ்நானம் கொடுத்து, புத்தகத்தில் உங்களுடைய பெயரை எழுதுவோம்' என்று கூறலாம். இப்பொழுது, பிசாசும் கூட அதை விசுவாசிக்கிறான் என்று உங்களுக்குத் தெரியுமா? நிச்சயமாக, அவன் விசுவாசிக்கிறான். நான் அன்றொரு இரவில் உங்களுக்கு விளக்கிக் கூறினேன், நீங்கள் - இந்த வயதான ஆமையை தண்ணீருக்குள் முழுக்க முயற்சிப்பது போன்று. அது அதற்கு எதையும் செய்யவில்லை; அது அதற்கு எந்த(விதத்திலும்) உதவி செய்யவில்லை. அதனை நகர்த்துவதற்கு நெருப்பு தேவைப்பட்டது. எனவே, இன்று சபைக்கும் அது தான் தேவைப்படுகிறது: அதை நகரும்படி செய்ய கொஞ்சம் பரிசுத்த ஆவியும் அக்கினியும் தான் தேவைப்படுகிறது. ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், பரிசுத்த ஆவியானவர் அவருக்குள் - கிறிஸ்துவின் சரீரத்திற்குள் அசுத்தமான நபரை ஏற்றுக்கொள்ள மாட்டார். கிறிஸ்துவின் சரீரமென்பது ஒரு ஸ்தாபனமல்ல என்பதை அது காட்டுகிறது. அது கிறிஸ்துவின் காணக்கூடாத ஒரு சரீரமாக இருக்கிறது. ஒரே ஆவியினாலே நாமெல்லாரும் அதற்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டுள்ளோம். நாம் ஸ்தரீகளையும் மனிதர்களையும் அழைத்துச் சென்று அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் படியாக அவர்களைத் தண்ணீருக்குள் கொண்டு வருகிறோம். அவர்கள் உண்மையாகவே தங்களுடைய இருதயத்தில் கிறிஸ்தவர்களாக இல்லாதிருந்தால், நாம் அவர்களுக்கு ஒருபோதும் ஞானஸ்நானம் கொடுக்கக் கூடாது. கொஞ்சகாலத்திற்கு முன்பு, நான் ஒரு ஸ்திரீயைக் கூட்டிக் கொண்டு ஆற்றிற்குப் போய்க் கொண்டிருந்தேன், அவர்களில் ஒரு குழுவோடு போய்க் கொண்டிருந்தேன். ஒரு ஸ்திரீ அங்கு நடந்து வந்தாள்; அவள் தன்னுடைய காரை விட்டு இறங்கி வந்து, தன்னுடைய தலையை வாரிக்கொண்டு, 'சகோதரன் பிரன்ஹாமே, என்னை அழைத்துச் சென்று மூழ்கடிக்கப் போகிறீர்களா?' என்று கேட்டாள். நான், 'உனக்கு ஞானஸ்நானம் கிடையாது, நீ (ஞானஸ்நானம் பெறும்படி தண்ணீரின்) உள்ளே செல்வதற்கு தகுதியானவளல்ல' என்றேன். அது சரியே. அவர்கள் சபையில் பாடல் பாடப் போவதாக இருந்தனர், ஏதோவொரு சிறு பெண், அவள் அதைப் போன்ற ஏதோவொரு விதமான சிகை அலங்காரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு அவளிடம் -அவளிடம் போதுமான பணம் இல்லாதிருந்தது, அவள் மேடையின் மேல் நின்று பாடுவதற்கு விரும்பினாள். அவளுடைய வயதான ஏழைத் தாயார் அந்த சிகை அலங்காரத்தை அவள் பெற்றுக் கொள்ளும்படிக்கு துணிகளைத் துவைக்கும் பலகையில் வைத்து துணி துவைத்தாள். நான் அதைக் கண்டு கொண்ட போது, நான் அவளைப் பாடும்படி அனுமதிக்கவில்லை. நான், 'நீ அங்கே பாடுவதற்கு தகுதியானவளல்ல' என்றேன். அதை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இன்றைய சபைகளோடுள்ள காரியம் அது தான், சரியாக பிரசங்க பீடம் முதற்கொண்டு அஸ்திபாரம் வரைக்கும் முழுவதும் சீர்கேடும் காரியங்களும் உள்ளன. அது சரியே. அதை சுத்திகரியுங்கள். அது சரியே. பழைமை நாகரீகமான சுத்திகரிக்கும் திண்டு (scouring pad) தான் சபையில் மீண்டும் நமக்கு அவசியமாயுள்ளது. 41ஒரு நாள் அந்தச் சிறு நீக்ரோவை நியமித்தது போல, மூப்பர்கள் சூழ்ந்து நின்று, ' கர்த்தாவே, அவனை கரடுமுரடான துணியினாலான சாக்குகளினால் (burlap sacks) மூடிக் கொண்டு, மண்ணெண்ணையை அவன்மேல் ஊற்றி, சுவிசேஷத்திற்காக அவன் மேல் அக்கினியைக் கொளுத்தும்' என்று கூறினார்கள். அதுதான் நமக்கு இன்று தேவையாயுள்ளது: அக்கினியைப் பற்றவைத்தல். அவனைக் கட்டவிழ்த்து விடுங்கள், அவன் ஓடிப் போகட்டும். வழக்கமாக கன்றுக்குட்டிகளுக்கு சூடிட்டு அடையாளம் இடுவதுண்டு. நாம் ஒரு கன்றுக்குட்டியை எடுத்து, அதன் கால்களை உங்களில் அநேகர் ஒன்றாக வைத்து கயிற்றினால் கட்டுவது என்றால் என்னவென்று எனக்குத் தெரியும் என்று ஊகிக்கிறேன். நாங்கள் வழக்கமாக அவைகளுக்கு சூடிட்டு அடையாளமிடுவோம். யாரோ ஒருவர் என்னிடம், 'அந்த சூடான இரும்பை இணைத்து வைத்து அதனுடைய பக்கவாட்டில் சூடு போடுவது உனக்கு வெட்கமாக இல்லையா?' என்று கேட்டார். 'இல்லை.' நான் அதனுடைய பக்கவாட்டில் சூடு போட்டேன். அது கால்களை உதைத்தது, சரி. அது உரத்த சத்தமிட்டு, கூச்சலிட்டது; அதைக் கட்டவிழ்த்து விட்ட போது, அது திடீர் வலியினால் துடித்துக் கொண்டு உண்மையாகவே ஓடிப்போய் விட்டது. ஆனால் அது முதற்கொண்டு அது ஜீவனோடிருக்கிற காலம் வரை அது எதைச் சேர்ந்தது என்பதை நாம் அறிந்து கொண்டோம் (அது சரியே). சகோதரனே, நான் உங்களிடம் கூறுகிறேன்; பலிபீடத்திற்கு வந்து, பரிசுத்த ஆவி உங்களில் ஒரு முத்திரையை போடுவது (buerns) மட்டுமாக அங்கேயே தரித்திருப்பதற்கு அதிகமான கிருபை அவசியமாயுள்ளது. நீங்கள் ஒருவேளை உரத்த சத்தமிட்டு, அழுது, விநோதமாக நடந்து கொள்ளலாம், ஆனால் அந்த நேரமுதற்கொண்டு நீங்கள் எந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிவீர்கள். அது சரியே. நீங்கள் பரிசுத்த ஆவியின் மூலமாக தேவனுடைய இராஜ்ஜியத் திற்குள் முத்திரையிடப்படுகிறீர்கள். அது தான் முத்திரை. 42பரிசுத்த ஆவியானவர் தேவனால் முன்னறியப்பட்ட வர்களை முத்திரையிடுவதற்காக வருகிறார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அது சரியே. அது சரியே. இயேசு, 'நான் மரிப்பேன்; ஒருவேளை யாரோ ஒருவர் பரிதாபத்தோடு என்னை நோக்கிப்பார்த்து, 'நல்லது, நான் கருதுகிறேன்' என்று கூறலாம். ஒரு வேளை நான் அதிகமாக துன்பப்பட்டதை அவர்கள் நினைப்பார்களானால், அது அவர்களுடைய இருதயங்களை உடைத்து, அவர்கள் வருவார்கள்' என்று கூறும்படி அவர் இறங்கி வரவில்லை. இல்லை, இல்லை. எப்படியும் நீங்கள் வரமாட்டீர்கள். ஒரு பன்றி ஒரு உரக்கிடங்கில் சாப்பிடுவதின் மூலம் அது தவறாயிருக்கிறது என்பதை அந்தப் பன்றியிடம் உங்களால் கூற முடியாது. அதனால் பேசக்கூடுமானால், 'நான் என்னுடைய வேலையைக் கவனிக்கிறேன்; நீ உன்னுடைய வேலையைப் பார்' என்று மிகத் துரிதமாக உங்களிடம் கூறி விடும். பாருங்கள்? அது மனந்திரும்ப வேண்டும். தேவன் தான் அதைச் செய்ய வேண்டியிருக்கிறது. தேவன் ஒரு மனிதனை முதலாவது இழுத்தாலொழிய எந்த மனிதனும் இயேசுவிடம் வரமாட்டான். உங்களுடைய இருதயத்தைத் திருப்புவதற்குக் கூட பரிசுத்த ஆவியானவரின் கிரியை அவசியமாயுள்ளது. அதற்கு தேவன் தேவை. யாரோ ஒருவர், 'நான் தேவனைத் தேடினேன், நான் தேவனைத் தேடினேன்' என்று கூறினார். இல்லை, இல்லை, இல்லை. தேவன் தான் உங்களைத் தேடினார், நீங்கள் தேவனைத் தேடவில்லை. தேவன் உங்களைத் தேடுகிறார். 43சரி, பரிசுத்த ஆவியானவர் எந்தவிதமான ஒரு மனைவி யையும் ஏற்றுக்கொள்ளமாட்டார், புகைபிடிக்கிற யாரோ ஒருவரை அவர் ஏற்றுக்கொள்ளுவதில்லை, மது அருந்துகிற ஒருவரையோ, ஒழுக்கமற்ற ஜீவியம் செய்கிற ஒருவரையோ, எல்லாவகையான உலக காரியங்களையும் தன்னுடன் கொண்டிருக்கிற ஒருவரையோ ஏற்றுக்கொள்ளவே மாட்டார். ஏனெனில் அவர், 'நீங்கள் உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூர்ந்தால், உங்களிடத்தில் தேவனுடைய அன்பு இன்னும் இல்லை' என்று கூறினார். ஆனால் பரிசுத்த ஆவியானவர், உலகத் தோற்றத்திற்கு முன்பே முன்னறிந்த, இயேசு கிறிஸ்துவின் மனைவியாகிய சரீரத்திற்குள் முத்திரை யிடுவதற்காக வருகிறார். அவர்... தேவன் முன்னறிவினாலே, யார் அவரை ஏற்றுக்கொள்வாரென்றும், யார் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றும் அவரால் காண முடிந்தது. எனவே பரி சு த்த ஆவி யானவர் அந்த மணவாட்டியைப் பெற்றுக்கொள்ள வருகிறார். அவளைத்தான் அவர் உள்ளே ஏற்றுக்கொள்ளுகிறார். ஆனால் சபையானது, 'ஓ...' என்கிறது. 44வழக்கமாக ஒரு சிறிய பாடலைப் பாடுவதுண்டு, நான் அவமதிப்பாக பேசவில்லை என்று நம்புகிறேன். நாங்கள் வழக்கமாக, 'வந்து புசியுங்கள், எஜமானர் அழைக்கிறார்' என்று பாடுகிற ஒரு சிறிய பாடல் எங்களிடம் இருந்தது. அதை சிறிது வித்தியாசப்படுத்தி (பாடுகிற) ஒரு சிறிய பாடலை நாங்கள் கொண்டிருந்தோம், நான் உங்களை எந்தவிதத்தி லாவது இடறலடையச் செய்தால், என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். கூறுகிறது... 'வந்து சேர்ந்து கொள்ளுங்கள்,' மேய்ப்பர் அழைக்கிறார், 'வந்து சேர்ந்து கொள்ளுங்கள்'; நீங்கள் எல்லா நேரமும் ஐஸ்கிரீம் விருந்துகளைக் கொண்டிருக்கலாம்; அசுத்தமான நகைச்சுவைகளைக் கூறலாம், ஆழ்ந்து யோசித்துக்கொண்டே புகையை ஊதித்தள்ளலாம், ஓ, மேய்ப்பர் சபைக்கு அழைக்கிறார், 'வந்து சேர்ந்து கொள்ளுங்கள்' (வந்து புசியுங்கள் என்பதற்குப் பதிலாக). என்னவொரு வித்தியாசம். ஒரு மனிதன் தன்னிடம் கொஞ்சம் பணமிருக்கும் காலம் வரை, பணம் கொடுக்க அவனால் முடியும் காலம் வரை, அவனை எடுத்து, டீக்கன் வாரியத்தில் வைக்கிறீர்கள், அவனுக்கு இரண்டு அல்லது மூன்று மனைவிகள் இருக்கிறார்கள், எவ்வாறாயினும் அவனை அங்கே வைக்கிறீர்கள், எனெனில் அவர்கள் பட்டணத்தில் செல்வாக்குள்ள மனிதர்களாக இருக்கிறார்கள். பட்டணம் அவர்களை வெறுக்குமானால் எனக்குக் கவலையில்லை; பரிசுத்த ஆவியானவர் இருக்கிற பரலோகத்தில் தான் அவர்களுக்கு செல்வாக்கு இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், அங்கே தான் அவர்கள் கொஞ்சம் செல்வாக்கை ஜனங்கள் மத்தியில் கொண்டிருக்க முடியும். ஆனால் அது, வந்து சேர்ந்து கொள்ளுங்கள் என்பதாக உள்ளது. ஒவ்வொன்றும்... கொஞ்ச காலத்திற்கு முன்பு, நான் ஒரு சிறு பெண்ணிடம், 'நீ ஒரு கிறிஸ்தவளா?' என்று கேட்டேன். அவள், 'நீர் புரிந்து கொள்ள வேண்டுமென்று நான் உம்மிடம் கூறுகிறேன்; நான் ஒரு அமெரிக்கன்' என்றாள். அதற்கு இதனோடு ஏதாவது சம்பந்தம் உண்டு என்பது போல. அவள் சுவிட்சர்லாந்தில் இருந்தாள். அதற்கு இதனோடு ஏதோ சம்பந்தம் இருந்தது போல. சகோதரன் போஸ்வர்த், தாம் ஒரு தடவை ஒரு ஸ்திரீயிடம் கேட்டதாகக் கூறினார், அவள், 'நீர் புரிந்து கொள்ள வேண்டுமென்று நான் கூறுவது என்னவெனில், நான் ஒவ்வொரு இரவும் மெழுகுவர்த்தி கொளுத்துகிறேன்' என்றாள். அது கிறிஸ்தவத்துடன் செய்வதற்கு ஏதாவது (சம்மந்தம்) இருப்பது போல: ஒவ்வொரு இரவும் ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்துதல். தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் பிறக்க வேண்டும். 45இப்பொழுது, அந்த ஆவிகளை நாம் கண்டு கொண்டோம். கவனியுங்கள். இயேசு காட்சியில் வந்த சற்றேறக்குறைய அதே சமயத்தில், யூதாசும் காட்சியில் வந்தான். இயேசு காட்சியை விட்டுப் போன சற்றேறக்குறைய (அதே) சமயத்தில், அதே நாளில் இயேசுவும் யூதாசும் இருவருமே காட்சியை விட்டுப் போயினர். பரிசுத்த ஆவியானவர் காட்சியில் வந்த சற்றேறக்குறைய அதே சமயத்தில், என்ன சம்பவித்தது? அந்திக்கிறிஸ்து காட்சியில் வருகிறான். யோவான் அவ்வாறு கூறுகிறான், அவன், 'பிள்ளைகளே, அதனால் வஞ்சிக்கப்படாதிருங்கள், அந்திக் கிறிஸ்து ஏற்கனவே உலகத்தில் கிரியை செய்து கொண்டிருக்கிறான்' என்றான். பாருங்கள்? அது இந்தக்கடைசி நாட்களில் வரவில்லை; அது ஏற்கனவே அப்பொழுதே அங்கு இருக்கிறது. அது எப்போதுமே இருந்து வருகிறது. 46இப்பொழுது, நீங்கள் கவனியுங்கள்: சற்றேறக்குறைய அதே சமயத்தில் அந்திக்கிறிஸ்து தானே இப்பொழுது கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறான். அவன் சபைகள் எல்லாவற்றையும், நம்முடைய பெந்தெகோஸ்தே சபையையும் கூட எடுத்து இங்கே மேலேயுள்ள பெரிய சவக்கிடங்கிற்குள், உங்களுக்குத் தெரியும், ஐக்கிய சபைகளுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறான்... நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் புரிந்து கொள்ளுகிறீர்கள். நம்முடைய பெந்தெகோஸ்தே அமைப்புகளில் சில அதற்குள் வந்து கொண்டிருக்கின்றன என்பதை நான் அறிவேன். உம்-உம். நீங்கள் அலைந்து திரியத் தொடங்கும்போது, நீங்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய தேவனுடைய ஆவியை விட்டு எவ்வளவு தூரம் அகன்று செல்வீர்கள். அந்த இடுக்கமான பாதையை விட்டு அப்படியே கால் இடறி, தொடர்ந்து சறுக்கிக்கொண்டேயிருப்பீர்கள். அது சரியே. நீங்கள் எந்த இடத்தை விட்டு விலகிச்சென்றீர்களோ அதே இடத்திற்கே திரும்பி வர வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். அது சரியே. சபைகளின் கூட்டமைப்பு தான் மிருகத்தின் சொரூபத்தை (image) உருவாக்கும்... நாமெல்லாரும் அதை அறிவோம். பாருங்கள், அங்கே? இப்பொழுது சபைகள் அனைத்தையும் ஒன்றாகக் கூட்டுவதற்கும், கம்யூனிஸத்தை எதிர்த்து சண்டையிட நம்மையே ஒன்றாகக் கூட்டுவதற்கும், அதெல்லாம் சரியாக சுற்றிலும் கிரியை செய்து கொண்டிருக்கின்றன. நீங்கள் கம்யூனிஸத்தைக் குறித்து கவலைப்பட வேண்டாம்; சண்டையிடும்படியான காரியம் அதுவாக இருக்கப் போவதில்லை. அங்கே மூன்று திரைகள் உள்ளன. நான் இதைக் கர்த்தருடைய நாமத்தில் கூறுகிறேன்; நீங்கள் இதை மறந்து போக வேண்டாம். அங்கே ஒரு இரும்புத்திரையும் (iron curtain), ஒரு மூங்கில் திரையும் (iron curtain), ஒரு இந்திரநீலத் திரையும் (purple curtain) உள்ளன. அந்த இந்திரநீலத் திரையைக் கவனியுங்கள். உங்களுடைய கண்ணை அதன் மேல் வையுங்கள். 47ஓ, என்னே, அந்திக்கிறிஸ்து தன்னை வெளிப்படுத்த தொடங்கியிருப்பதை நாம் இப்பொழுது எப்படியாக காண்கிறோம், தேசத்தை தன்னுடைய முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கெண்டிருக்கிறான். அது தங்களுடைய சொந்த மனிதனையும் கூட தேர்ந்தெடுத்து விட்டது. ஒரு மகத்தான பெரிய ஸ்தாபிக்கப்பட்ட சபையின் (ecclesiastical) தலைவனை, உண்டாக்கிக்கொண்டு அதனோடு மற்ற சபை களும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது எல்லா ஆங்கிலிக்கன் பிஷப்புகளும் - அவர்கள் நூற்றுக்கணக்கான வருடங்களில் முதல் தடவையாக போப்புடன் ஆலோசனை செய்யும் பொருட்டு, ரோமாபுரிக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஓ, அவைகள் அனைத்துமே தலைவனைக் கொண் டிருக்கிறார்கள். புரட்டஸ்டென்ட்டுகளாகிய நாமும் அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறோம், உங்களுக்குத் தெரியும், மேலும்... நல்லது, அங்கேதான் நீங்கள் இருக்கிறீர்கள் (பாருங்கள்?); அப்படியே முன்னேறிச் செல்லுங்கள். ஏனெனில் அது குளிர்ந்து போய் விட்டது. நாம் அதைத் தடுத்து நிறுத்தப் போவதில்லை; அது தடைசெய்யப் படப் போவதில்லை; அது மோசமடையப் போகிறது. அது... வேதாகமம் அவ்வாறு கூறுகிறது, அது... கடைசி நாட்களில் பெந்தெகோஸ்தே சபையானது, லவோதிக்கேயா சபை காலமாக இருந்து, வெதுவெதுப்பாகி, தேவன் தம்முடைய வாயிலிருந்து அதை வாந்தி பண்ணிப் போடுகிறார் என்றும், அது அவருடைய வயிற்றில் அவருக்கு வியாதியை உண்டாக்குகிறது என்பதும் நமக்குத் தெரியும். அது இருக்கும் விதமாக அதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. 48இப்பொழுது, நாம் தொடர்ந்து போய், இந்த முத்திரைகளில் சிலவற்றை அடைந்து, அடுத்த சில நிமிடங்களுக்காக அவைகளை இன்னும் விரிவாகப் பேசலாம். இப்பொழுது நாம் போகலாம், நீங்கள் உங்களுடைய வேதவாக்கியங்களை எழுதிக்கொண்டிருப்பீர்களானால், நாம் எசேக்கியேல் 9-வதுஅதிகாரத்திற்குப் போகலாம். தீர்க்கதரிசி சபையின் முதலாவது வருகையை முன்னரே காண்பதை நாம் கண்டுகொள்கிறோம். இப்பொழுது, அவன் கண்டு, தீர்க்கதரிசியை அழைத்ததை நாம் கண்டுகொள்ளுகிறோம், அவன் உயர்ந்த வாசலை நோக்கி மேலே பார்த்து, 'நீ எப்போதாவது இந்தவிதமான எதையாவது கண்டதுண்டா?' என்று கேட்டான். அங்கே உயர்ந்த வாசல்களிலிருந்து நான்கு மனுஷர்கள் வெட்டுகிற ஆயுதங்களைத் தங்களுடைய கைகளில் பிடித்துக்கொண்டு வருகிறார்கள். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி.)... நீங்கள் எசேக்கியேல் 9ம்- அதிகாரத்தில் (அதை) வாசிக்கலாம். இப்பொழுது, ஈவிரக்கமின்றி படுகொலை செய்யும் அந்தக் காரியம் எருசலேம் பட்டணத்திற்கு மாத்திரமே நியமிக்கப்பட்டிருந்தது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். நகரம் எங்கும் உருவப் போ.' ஆனால் அவர்கள் பட்டணத்தினூடாகப் போவதற்கு முன்பாக, வெறொரு காரியம் சம்பவிப்பதை அவர்கள் கண்டனர். அங்கே வெண்மையாகவும், தம்முடைய அரையில் ஒரு மைக்கூட்டை, கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற ஒரு மனிதர் வந்தார். அவர், 'வெண்வஸ்திரம் தரித்து, கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற அந்த மனிதர் முதலில் எருசலேம் பட்டணம் எங்கும் உருவப்போய் நகரத்திற்குள்ளே செய்யப்படுகிற அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சுவிட்டழுகிறவர்களின் மேல் முத்திரை போடுவது வரையோ, அல்லது அடையாளம் போடுவது வரையோ - அது மட்டுமாக அவர்கள் அந்த பட்டணத்திற்குள் போகக் கூடாது என்று அந்த மற்ற மனிதர்களைத் தடை செய்' என்றார். இப்பொழுது, தம்முடைய அரையில் மைக்கூட்டை வைத்திருக்கிற இவர் பரிசுத்த ஆவியானவரே. இப்பொழுது, கவனியுங்கள், அவர் (பட்டணத்தி)னூடாகப் போன பிறகு, அவர் வெட்டுகிற ஆயுதங்களுடன் இருந்த இந்த மனிதர் களை கட்டவிழ்த்து விட்டார். அவர், 'எல்லாரையும் சங்கரித்து அழித்துப் போடுங்கள், வாலிபரையும், முதியோரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும் சங்கரித்து அழித்துப் போடுங்கள்; எதையும் விடாதீர்கள்; ஆனால் அந்த முத்திரை போடப்பட்ட யாருடைய அருகிலும் போகாதீர்கள்' என்றார். இதைக் கவனியுங்கள். 49இப்பொழுது, எப்போது அது சம்பவித்தது? அது முற்காலத்தைய பெந்தெகோஸ்தே சபையாக இருந்தது, பரிசுத்த ஆவியானவர் எங்கும் உருவப்போய், சபைக்கு அடையாளம் போட்ட போது அது சம்பவித்தது. இப்பொழுது, எப்படியாக வரலாறு இருக்கிறதென்பதைக் கவனியுங்கள் நீங்கள் எப்பொழுதாவது ஜோசபஸ் எழுதியிருப்பவற்றை எடுத்துக் கொள்வீர்களானால், ஏறக்குறைய 96-ம் வருஷத்தில் நடந்த பெரிய யுத்தத்தைக் குறித்து அவன் எழுதின போது. எல்லா ஜனங்களும்... பரிசுத்த ஆவியானவர் - இயேசு வந்த போது, மேசியாவின் அடையாளங்களை நடப்பித்து, தாம் மேசியா தான் என்று நிரூபித்தார். அவர் தாமே இதை விட்டு சென்று, மகிமைக்குள் பிரவேசித்து, பரிசுத்த ஆவியைத் திரும்ப அனுப்பி, அப்போஸ்தலர்களை அபிஷேகம் பண்ணின பிறகு. அவர்கள் புறப்பட்டுச் சென்று, அவர் செய்த அதே அடையாளங்களை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் கர்த்தருடைய வல்லமையைக் கொண்டிருந்தனர். அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசினார்கள்; அவர்கள் சத்தமிட்டனர். அங்கே சடிதியாய் வந்த பலத்த காற்று அவர்களை நிரப்பிற்று. அவர்கள் பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு, பட்டணங்களை சுட்டெரிக்கும் அளவுக்கு அவர்கள் அப்படிப்பட்ட வைராக்கியத்தோடு புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் என்ன செய்தனர்? இவர்களை அவர்கள் கேலி செய்தனர். அவர்கள் இவர்களைப் பார்த்து நகைத்தனர். அது சரியே. இயேசு, 'நீங்கள் எனக்கு விரோதமாகப் பேசுகிறீர்கள், நான் உங்களை மன்னிப்பேன். ஆனால் பரிசுத்த ஆவியானவர் வரும் போது, அதற்கு விரோதமாகப் (பேசுகிற) ஒரு வார்த்தையும் ஒருபோதும் மன்னிக்கப்படாது' என்றார். அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிறைந்த அந்த ஜனங்களைக் கேலி செய்தபோது, தங்களுடைய நித்தியமான சேருமிடத்தை முத்தரித்தனர். 50இயேசு அவர்களிடம், 'இப்பொழுது, அந்த வேளையானது வரும்...' என்று கூறினார். இப்பொழுது, நீங்கள் அங்கேயுள்ள அநேகப் போதகர்களைக் கவனிக்க வேண்டும், அவர்கள் - அவர்கள் மத்தேயு 24-ம் அதிகாரத்தில் மூன்று வித்தியாசமான கேள்விகளை இயேசு விடம் கேட்டனர். அவர் ஒவ்வொன்றுக்கும் பதிலளித்தார். அதனிமித்தமாகத்தான், 'நீங்கள் ஓடிப்போவது ஓய்வுநாளிலே சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்,' ஓய்வு நாளிலோ அல்லது மாரிகாலத்திலாவது சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள் என்பதைக் கொண்டு நீங்கள் ஏழாம் நாள் ஆசரிப்பவர்களை எழும்பப்பண்ணுகிறீர்கள். அவர் அவர்களிடம் (சீஷர்கள் அவரிடம் - மொழிபெயர்ப்பாளர்), 'இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?' என்று கேட்டுக் கொண்டிருந்தார் (கேட்டனர்.) அவர்கள் மூன்று வித்தியாசமான கேள்விகளை அவரிடம் கேட்டனர். அவர்கள் அவரிடம் அங்கே கேட்டபிரகாரமாகவே அவர் அதை விளக்கிச் சொன்னார். மேலும் அது சம்பவித்தது; அது சரிதான் என்று வரலாறு காண்பிக்கிறது. அது என்னவாக இருக்கும்... நீங்கள் இப்பொழுது ஓடிப் போவது - ஓய்வுநாளில் பட்டணத்தை விட்டு ஓடிப்போனால் அது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும்? அக்காலத்தில் ஓய்வுநாளில் பட்டணத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருக்கும். அது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும்? அது உலகளாவிய விதமாக இல்லை என்பதை அது காண்பித்தது, எனெனில் ஒரு இடத்தில் கோடைகாலமாக இருக்கும் போது, வேறொரு இடத்தில் மாரிகாலமாக இருக்கும். 'நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலோ அல்லது ஓய்வுநாளிலோ சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்'. ஏனெனில், அந்நாளில்... அவர்... அவர்கள் எச்சரிக்கப்பட்டிருந்தனர், 'எருசலேமில் இருக்கிற வர்கள் யூதேயாவுக்கு ஓடிப்போகக்கடவீர்கள்' என்றார். யூதேயா மாரிகாலத்தில் பனியினால் நிறைந்து காணப்படும். 'நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலோ, ஓய்வுநாளிலோ சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.' 51ஆனால் தீத்து வந்த போது, அவர்கள் கண்டனர்... இயேசு அவர்களிடம், 'எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, வயலில் இருக்கிறவன் தன் மேலாடையை எடுப்பதற்கு திரும்பாதிருக்கக்கடவன். ஆனால் உங்களால் கூடுமானவரை விரைவாக யூதேயாவின் மலைகளைப் போய் சேர்ந்து கொள்ளுங்கள். அதை விட்டு வெளியே செல்லுங்கள்' என்றார். ஏனெனில் அவர்கள் பரிசுத்த ஆவியை தூஷிக்கப் போகின்றனர். அவர்கள் பரிசுத்த ஆவியைத் தூஷித்தால், அவர்கள் மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக் கொள்ளுகிறார்கள், அங்கே அழிவைத் தவிர வேறொன்றும் விடப்படவில்லை. அந்த யூதர்கள், அவர்கள் பிரச்சனை வருவதைக் கண்டபோது, அவர்கள், 'இப்பொழுது, நாம் பட்டணத்திற்குள்ளே, கர்த்தருடைய வீட்டிற்குள் ஒன்றாகக் கூடி, ஜெபிப்போம்' என்றனர். அது மிகவும் பயபக்திக்குரியதும், மிகவும் இனிமையாயும் ஒலிக்கவில்லையா? ஓ, சாத்தான் பார்ப்பதற்கு அப்படியே மிகவும் உண்மையான விதமாக காணப்படுவதாக அதைச் செய்யக்கூடும். நிச்சயமாக. ஆனால் ஞாபகம்கொள்ளுங்கள், அந்த ஜனங்கள் நரமாமிசம் உண்பவர்களாக இருந்தனர் என்று ஜோசபஸ் கூறினான், அவன், 'சுற்றிலும் சென்று வியாதியஸ்தர்களைச் சுகப்படுத்திய நாசரேத்தூர் இயேசுவை ஒரு கூட்டம் ஜனங்கள் பின்பற்றினார்கள். பிலாத்து அவரைக் கொலை செய்தான், அவர்கள் அவருடைய சரீரத்தைத் திருடிச் சென்று, அதை எங்கோ ஓரிடத்தில் வைத்து, அதை வெட்டி, புசித்தனர்' என்றான். அவர்கள் நரமாமிசம் உண்பவர்களாக இருந்தனர். அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர், அவர்கள் கர்த்தருடைய சரீரத்தை இராப்போஜனம் எடுத்துக் கொண்டிருந்தனர். பாருங்கள்? அவன், 'அவர்கள் யாருமே இழக்கப்படவில்லை, எனெனில் அவர்கள் செய்ய வேண்டுமென்று வேதவாக்கியம் அவர்களிடம் கூறினது போல, அவர்கள் செய்ய வேண்டுமென்று இயேசு கூறியிருந்தது போல, அவர்கள் வெளியே யூதேயாவைச் சென்றடைந்தனர்' என்றான். 52ஆனால் அந்த யூதர்கள் அனைவரும் எருசலேமிற்குள் சென்று, அவர்கள், 'இப்பொழுது, நாம் கர்த்தருடைய வீட்டிற்குள் ஒன்று கூடுவோம், நம்முடன் எப்போதும் இருந்து வருகிற மகத்தான யேகோவா இறங்கி வந்து, தீத்துவினுடைய சேனைகளை விரட்டியடிப்பார்; அதைத்தான் அவர் செய்வார்' என்று கூறினார்கள். ஆனால் அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பாவம் செய்திருந்தனர். கிரியை செய்து கொண்டிருந்த பரிசுத்த ஆவியின் வல்லமையை அவர்கள் கேலி பரிகாசம் செய்திருந்தனர். தாமே அவர்களுடைய மேசியாவென்று கிரியைகளை செய்து, அவர்களுக்குக் காண்பித்துக் கொண்டிருந்த இயேசு கிறிஸ்துவை அவர்கள் பெயல்செபூல் என்று அழைத்தனர், அவர்கள் அவரை ஒரு பிசாசு என்று அழைத்தனர், அது ஏதோவொரு விதமான மனதிலுள்ளவைகளை அறிந்துகொள்ளுதல் என்றும் அவரிடம் கூறினார்கள், அவர் ஒரு பிசாசு என்றும் அவர் செய்து கொண்டிருந்த கிரியைகள் பிசாசினுடைய கிரியைகள் என்றும் கூறினார்கள். தங்களிடம் வந்து கொண்டிருக்கும் அதை அவர்கள் கொண்டிருந்தனர். இப்பொழுது, சகோதரனே, நீ சற்று காத்திரு; இன்றிரவு நமக்கு நேரமிருக்காது, ஆனால் நாளை இரவில் நான் உங்களை கொண்டு சென்று, சரியாக அதே காரியத்தை ஐக்கிய நாடுகளும் செய்திருப்பதை உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். நான் வேதவாக்கியங்களின் மூலமாக அதை உங்களுக்கு நிரூபிப்பேன். நாளை இரவு, கர்த்தருக்குச் சித்தமானால், ஐக்கிய நாடுகள் கடந்த இந்த நாற்பது வருடங்களில் எவ்வாறு சரியாக அதே காரியத்தைச் செய்திருக்கிறது என்பதை (நாம் காணலாம்). அவர்கள் பரிகாசம் பண்ணி, பரிசுத்த உருளையர்கள் என்றும், பெந்தெகோஸ்தே வெறியர்கள் என்றும், உலகத்திலுள்ள யாவற்றைக்கொண்டும் அவர்களை அழைத்தனர். அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் தேவன் அவர்களோடு கிரியை செய்து கொண்டிருக்கிறார், பெரிய சபைகள் இவ்விதமாக அதைக் கடந்து சென்று, பரிகாசம் செய்தனர். இப்பொழுது, இந்தக் கடைசி நாட்களில், என்ன சம்பவித்தது? நான் உங்களிடம் வேதவாக்கியங்களைக் கொண்டு வரட்டும். நீங்கள் ஆயத்தமா? 53டாக்டர்.மெக்கீ அவர்களோடும், இந்த எல்லா பெரிய சபைகளோடும் அங்கே போய்க்கொண்டிருக்கிற என்னுடைய விலையேறப்பெற்ற சகோதரன் டேவிட் டூப்ளெசிஸ் அவர்களுடன் நான் வேறுபாடு கொண்டிருக்கிறேன். இப்பொழுது அவர்கள் என்ன (செய்யப்) போகிறார்கள்... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.)... இப்பொழுது. ஓ, பிரஸ்பிடேரியன்கள், 'நமக்கு அந்நிய பாஷைகளில் பேசுபவர்கள் அவசியமாயுள்ளது. அவர்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள்வது நமக்கு அவசியமாயுள்ளது. நமக்கு தெய்வீக சுகமளிப்பவர்கள் தேவை' என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள், மற்றும் அதைப்போன்ற எல்லாவற்றையும் கூறிக்கொண்டிருக்கி றார்கள். அது வந்த போது, நாற்பது வருடங்களுக்கு முன்பு, அவர்கள் அதைப் பரியாசம் பண்ணுவதற்குப் பதிலாக, அவர்கள் அதை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? அவர்கள் ஒருபோதும் அதைச் செய்ய மாட்டார்கள். அவர்கள் மரித்தவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் ஸ்தாபனங்களாக இருக்கிறார்கள், மேலும் ஒவ்வொரு ஸ்தாபனமும் மரித்திருக்கிறது. அது முற்றிலும் சரியே. அது மீண்டும் ஒருபோதும் எழும்புவதில்லை. எந்த ஸ்தாபனமும் ஒருபோதும் எழும்பாது. அசெம்பிளிஸ்களே, நீங்கள் உங்களுடைய நாளைக் கொண்டிருந்தீர்கள். ஒருத்துவக்காரரே, நீங்கள் உங்களுடைய நாளைக் கொண்டிருந்தீர்கள். நான்கு சதுரக்காரர்களே, நீங்கள் உங்களுடைய நாளையும், திருமதி. மெக்பெர்ஸனுடைய காலத்தையும் கொண்டிருந்தீர்கள். பழங்கால பள்ளி அசெம்பிளிகள் (the old school assemblies) தங்களுடைய நாளைக் கொண்டிருந்தனர். நல்லது, நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? நீங்கள் உங்களையே ஸ்தாபித்துக் கொண்டு, உங்களையே பிரித்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒருபோதும் ஒரு ஸ்தாபனத்தையும் உள்ளே கொண்டு வர மாட்டீர்கள், ஏனெனில் முதற்கண் தேவன் ஆதியில் கடிந்து கொண்ட ஒரு கத்தோலிக்க ஒழுங்காக அது இருந்தது; எந்த பாப்டிஸ்டும், பிரஸ்பிடேரியனும், அல்லது வேறு எதுவுமே ஒருபோதும் உள்ளே போகாது. ஆனால் தேவன் தம்மால் கூடுமான ஒவ்வொரு ஸ்தாபனத்திலிருந்தும் ஒரு பசியுள்ள இருதயத்தை இழுத்துக்கொள்வார், அது அவருடைய சரீரமாயுள்ளது, அவர் அதற்குள்ளே கொண்டு வருவார், அது பரிசுத்த ஆவியால் முத்திரையிடப்பட்டுள்ளது. அவர்கள் மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இப்பொழுது இதைக் கவனியுங்கள், பெந்தெகோஸ்தே சபையானது அதனுடைய நிறங்களைக் காண்பித்திருக்கிறது. இப்பொழுது, அது வாந்திபண்ணிப் போடப்பட்டுள்ளது. இயேசு வெளியே நின்று, கதவைத் தட்டிக்கொண்டு [சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தைத் தட்டுகிறார் - ஆசிரியர்.], உள்ளே வரும்படி முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அவர் எதைத் தட்டிக்கொண்டிருக்கிறார்? அதே மேசியாவின் தட்டுதலும், மற்ற யாவுமே - அவர்கள் இன்னும் அவரை வெளியே தள்ளி விடுகின்றனர். நிச்சயமாக, அவர்கள் அதையே செய்கின்றனர். 54ஆனால் என்ன சம்பவித்தது? நாம் எந்த நாளில் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம்? ஓ, என்னுடைய சகோதரனே, நாம் எந்த நாளில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம்? நான் பித்து பிடித்தவன் என்று எண்ண வேண்டாம். நான் அவ்வாறு இல்லையென்று நம்புகிறேன். நான் பித்துபிடித்தவனாயிருந் தால், என்னை அப்படியே தனியே விட்டு விடுங்கள்; நான் வேறு விதமாக இருப்பதைக் காட்டிலும் இந்தவிதமாக இருப்பதையே சிறந்ததாக உணருகிறேன். ஆனால் கவனியுங்கள். கவனியுங்கள். நான் உங்களுக்குக் கூறுகிறேன், என்னுடைய சகோதர சகோதரிகளே, அதைக் குறித்த அடையாளம் என்ன? நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்பதற்கு அது அடையாளமாயுள்ளது. உறங்கிக் கொண்டிருக்கும் கன்னிகைகளைக் குறித்து இயேசு என்ன சொன்னார்? ஓ, அந்த சபைகளைக் கன்னிகை என்று நீங்கள் அழைக்கிறீர்களா? காயீன் இருந்தது போன்று அப்படியே, சரியாக அதே காரியமாக இருக்கிறது. அவர்கள் ஆராதனை செய்கின்றனர். ஆனால் உறங்கிக்கொண்டிருக்கும் கன்னிகை யின் விளக்கில் எந்த எண்ணெயும் இல்லாதிருந்தது. அது சரியா? எனவே அவள் நினைத்ததைக் காட்டிலும் தாமதமாக அவள் இருந்தாள் என்பதை அவள் கண்டுகொண்ட போது, கம்யூனிஸமானது அவளுக்கு தவறு செய்து கொண்டிருக் கிறது, அவள், 'ஓ, எங்களுக்குக் கொஞ்சம் எண்ணெய் கொடுங்கள். நீங்கள் எவ்வாறு இந்த பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டீர்கள்?' என்று கூறினாள். 'நீங்கள் போய் அதை விற்கிறவரிடமிருந்து அதை வாங்கிக் கொள்ளுங்கள்' 55மேலும் ஞாபகம் கொள்ளுங்கள், உறங்கிக் கொண்டிருக்கும் கன்னிகை எண்ணெய் வாங்கப் போன அதே நேரமே மணவாளன் வருகிற நேரமாக இருக்கிறது. மகிமை. நீங்கள் அதைக் காணவில்லையா? பிரஸ்பிடேரியன் களும், எபிஸ்கோபாலியன்களும், மற்றவர்களும் வந்து பரிசுத்த ஆவியைத் தேடிக்கொண்டிருக்கின்றனர், உங்களுடைய தீவட்டியின் திரி வெட்டப்பட்டிருப்பது நல்லது. திரி வெட்டப்படுதல், திரி வெட்டப்படுதல், ஆம், திரி வெட்டப்படுவது அதற்குத் தேவையாயுள்ளது. பெந்தெ கோஸ்தே சில தீவட்டிகளிலுள்ள திரியை வெட்டுவது நல்லது. ஆமென். இந்த உலகத்தின் அநேக (காரியங்களை) உங்களை விட்டு வெட்டி அப்புறப்படுத்தி விடுங்கள். நீங்கள் சிறிது சிறிதாக அரித்துத் தின்னப்பட்டீர்கள். விளக்கின் திரிகள் மோசமான உருவத்தில் உள்ளன. விளக்கினுடைய திரி என்பது ஒரு மகத்தான காரியம் என்பது உங்களுக்குத் தெரியும். நான் வழக்கமாகக் கவனிப்பேன். தேவனுடைய ஒரு உண்மையான விளக்குத் திரி என்பது ஒரு - ஒரு விசுவாசியாக இருக்கிறான், அவன் தான் ஒரு விளக்குத் திரியாக இருக்கிறான். கவனியுங்கள், இங்கே மேலே அதன் ஒரு முனையில் சுடரும், மறு முனையானது எண்ணெயில் மூழ்கியும் இருக்கிறது, அது எண்ணெயை இழுத்து, சுடரை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. என்னவொரு - என்ன வொரு சபை, என்னவொரு வல்லமை. இருப்பதற்கு என்னவொரு இடம். அல்லேலூயா. கிழக்கில் பிரகாசிக்கிற அந்த அதே சுவிசேஷ ஒளியே மேற்கிலும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அது சாயங்கால நேரத்தின் வெளிச்சமாக இருக்க வேண்டும். பெந்தெகோஸ் தேயினரே, எழும்பி, உங்களுடைய தீவட்டியினுடைய திரியை வெட்டி விடுங்கள். உலகத்தை வெட்டி அப்புறப்படுத்துங்கள். உலகத்தின் ஃபேஷன்களை வெட்டி அப்புறப்படுத்துங்கள்; உலக காரியங்களை வெட்டி அப்புறப்படுத்துங்கள். ஆயத்தமாகுங்கள்; வேளை சமீபமாயுள்ளது. 56சரியாக அவர்கள் இதைப் பெற்றுக்கொள்ளப் போகும் போது, என்ன சம்பவித்தது? என்ன நடந்தது? அப்போது மணவாளன் உள்ளே போனார். பாருங்கள், அமெரிக்கா பரிசுத்த ஆவியைத் தூஷித்திருக்கிறது. அவள் நாற்பது அல்லது ஐம்பது வருடங்களுக்கு முன்பு காட்சியில் வந்து இருந்தது முதற்கொண்டு, அவள் எப்பொழுதும் அதைக் குறித்துப் பரிகாசம் செய்தாள். அவள் தொடர்ந்து பரிகாசம் செய்தாள். மற்ற சபைகளும் பரிகாசம் செய்திருக்கின்றன. அவர்கள் தங்களையே காண்பித்திருக்கின்றனர். இப்பொழுது, அவர்கள் தங்களுடைய தலையை வெளியே நீட்டிக்கொண்டு, 'நாங்கள் இதில் கொஞ்சத்தைக் கொண்டிருக்க விரும்புகி றோம்' என்று கூறத் தொடங்குகின்றனர். ஆனால் அவர்கள் இதைச் செய்வதற்குப் போகும்போது, அது ஒரு அடையாள மாக இருக்கிறது, நாம் நம்முடைய விளக்கினுடைய திரியை வெட்டிச் சுத்தப்படுத்தும்படிக்குப் போக வேண்டும். விளக்குகளிலுள்ள திரிகளை வெட்டிச்சுத்தப்படுத்தும் படியாக போகும் சில பிரசங்கிமார்களை தேவன் எழுப்புகிறார். நம்முடைய தீவட்டியினுடைய திரியை வெட்டி சுத்தப்படுத்தி, உண்மையான பெந்ùகோஸ்தே சுடரை காண்பிக்கும் ஏதோ வொன்று தான் நமக்கு இன்று தேவையாயுள்ளது என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். 57நீங்கள் ஒரு பழைய சிறு விளக்கை முழுமையாகப் பெற்றுக் கொள்ளுங்கள் - அங்கே - கரியானது விளக்கின் திரியில் படிந்திருக்கும், அது உங்களுடைய விளக்கை முழுவதுமாகப் புகையும்படிச் செய்யும். நம்மிடமுள்ள காரியம் அதுதான்; நாம் விளக்கில் அதிக அளவு கரியைப் பெற்றிருக்கிறோம், அதிக அளவு கரிப்பொருள். சுடரானது சரியாக அதை இழுக்க முடியவில்லை. அது கீழிருந்து போதுமான காற்றைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. நமக்குத் தேவை என்னவெனில், ஒரு நல்ல சுவாசிக்கும் ஆற்றலும், ஒரு நல்ல சுவாசமும், மீண்டும் பரத்திலிருந்து வருகிற பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமாகிய புத்துணர்ச்சி யான மூச்சும், பரிசுத்த ஆவியானவரின் கிரியைகள் சபையில் அடையாளங்களுடனும் அற்புதங்களுடனும் பின்தொடரு வதும், உண்மையான தேவனுடைய முத்திரையும் தான். 'நான் என்னவென்று உங்களிடம் கூறுகிறேன். நான் அசெம்பிளிஸிற்குப் போவேன், அவர்கள் என்னை சரியாக நடத்தவில்லையென்றால், நான் நான்குசதுரக்காரர்களிடம் போய் விடுவேன்.' ஓ, நீங்கள் கரிபிடித்திருக்கிறீர்கள், நீங்கள் உங்களுடைய விளக்கை புகைக்கச் செய்து கொண்டிருக்கி றீர்கள். உங்களுடைய விளக்கினுடைய திரியை வெட்டி சுத்தப்படுத்துங்கள். ஆயத்தமாகுங்கள்; நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். ஆனால் அவர்கள் அதை செய்வார்கள், யாராவது ஒருவர் அதை பிரசங்கிப்பார். யாராவது ஒருவர் அதை கூறுவார். அதைப் பெற்றுக்கொள்ளுகிற அவர்களில் சிலர் எங்காவது இருப்பார்கள். அது சரியே. எத்தனை பேர் என்று எனக்குத் தெரியாது, ஏனெனில், 'நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்' என்று அது கூறுகிறது, அங்கே எட்டு ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டனர். ஆனால் அதை எத்தனை பேர் பெற்றுக் கொள்வார்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் தங்களுடைய விளக்குகளின் திரியை வெட்டிச் சுத்தப்படுத்துகிற அவர்களில் சிலர் அங்கிருப்பார் கள், அங்கே அதில் இருப்பது அவ்வளவு தான். விளக்கின் திரியை வெட்டிச் சுத்தப்படுத்தும் வேளை வந்துவிட்டது . 58மேலும் உறங்கிக்கொண்டிருக்கும் கன்னிகை வெளியே போன போது - போது, அவள் ஏற்கனவே மிருகத்தின் முத்திரையைப் பெற்றிருந்தாள்... நீங்கள், 'அது மிருகத்தின் முத்திரையா?' என்று கேட்கலாம். ஆம், மெய்யாகவே. எனவே காயீனும் முத்திரையைப் பெற்று வெளியே போனான். அது என்னவாக இருந்தது? பாப்டிஸ்டு சபையும், பெந்தெகோஸ்தே சபையும், பிரஸ்பிடேரியன் சபையும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வதற்குப் பதிலாக மிருகத்தின் முத்திரையை ஏற்றுக் கொண்ட போது, அவர்கள் தேவனை விட்டுப் புறம்பே சென்று, அவர்களுக்கு ஒரு அமைப்பை ஏற்படுத்தினார்கள். அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் ஒரு உண்மையில்லாத மனைவியை - உலகத்தினுடைய உண்மையற்ற ஒரு மனைவியைப் பெற்றுக் கொண்டு, வர்ணம் தீட்டப்பட்ட யேசபேல்களையும், மற்ற ஒவ்வொன்றையும், குட்டை தலைமுடி கொண்டவர்களையும், குட்டை உடைகளையும் பாவாடைகளை அணிந்து கொள்பவர்களையும், ஹோலிவுட் நாகரிகத்தையும் உள்ளே கொண்டு வந்தனர். இரண்டு அல்லது மூன்று மனைவிகளையுடைய டீக்கன்மார்களை உள்ளே அனுமதிக்கும்படியாக பிரசங்கிமார்கள் வெளியே போயினர்... மேலும் ஒரு மனிதன்... 59நீங்கள், 'நீர் எப்போதுமே நம்முடைய ஸ்திரீகளையும், நம்முடைய ஸ்திரீகளைக் குறித்துமே பேசிக்கொண்டிருக்கிறீர்' என்று கூறலாம். சரி, மனிதர்களே, அப்படியானால் ஒருவிசை உங்களை நான் நன்றாக அலசிப்பார்க்கிறேன். நான் உங்களிடம் ஒன்றைக் கூறட்டும். தன்னுடைய மனைவியை சிகரெட்டுகளைப் புகைக்கவும், குட்டை உடைகளை அணியவும் அனுமதிக்கும் எந்த மனிதனும் அவன் ஒரு மனிதனாய் இருந்தும் கூட அவன் மேல் கொஞ்சம் மரியாதையே எனக்கு உள்ளது. அவன் மிகவும் பெண் தன்மை கொண்டவனாயிருக்கிறான், அவன் எதைச் சேர்ந்தவன் என்பதும் கூட அவனுக்குத் தெரியவில்லை. அவன் ஒரு மனிதனே அல்ல. அது சரியே. ஓ, அல்லேலூயா. அது சரியே. அவன் ஒரு மனிதனுக்கு இழிவான சாக்குப்போக்காக இருக்கிறான். ஓ, அவன் ஒருவேளை ஆறடி உயரமுள்ளவானாகவும், 200 பவுண்டுகள் எடையுள்ளவனாகவும் இருக்கலாம், ஆனால் அது எனக்கு ஒரு மனிதனைப் போன்று காணப்படவில்லை. உங்களுடைய வீட்டின் எல்லா இடங்களிலும் யார் முதலாளி (boss) என்பதை அது காண்பிக்கிறது. அவள் கோபத்தோடு தன்னுடைய காலை தரையில் மிதித்து நடந்து வந்து, 'நான் இப்பொழுதே உன்னிடம் கூறுகிறேன்' என்று (கூறும்போது), நீங்கள் ஒரு வியாதிப்பட்ட பூனைக்குட்டியைப் போன்று தலைவணங்கி விடுகிறீர்கள். என்ன காரியம்? நமக்குத் தேவையானது... நமக்கு இன்றைய தேவை என்னவெனில் மனிதர்களே. நமக்கு சுவிசேஷ பிரசங்கிமார்கள் தான் அவசியமாயுள்ளது. பிரசங்க பீடத்தில் நின்றுகொண்டு, அந்தக் காரியங்களைக் குறித்து பேசாமல் தவிர்த்து விடும் எந்தப் பிரசங்கியாரும் தான் தேவனால் அழைக்கப்பட்டிருந்தாலும் அவரிடம் சிறிதளவு மரியாதையே எனக்குள்ளது. சரி. பிரசங்க பீடத்தில் நின்று தேவனுடைய சத்தியத்தை கூற வெட்கப்படுகிற ஒரு மனிதன், ஒரு ஸ்திரீ தன்னுடைய மயிரைக் கத்தரிப்பது ஒரு ஒழுக்கக்கேடான காரியம் என்பதை அறியும் போது... வேதாகமம்... ஒரு மனிதனுடைய மனைவி தன்னுடைய மயிரைக் கத்தரிக்கும்போது, அவளை விட்டு விலகி, அவளை விவாகரத்து செய்ய அவனுக்கு உரிமை உண்டு. வேதாகமம் அவ்வாறு கூறுகிறது. ஸ்திரீயினுடைய தலை யார்? அவளுடைய கணவன். வேதாகமம், 'ஒரு ஸ்திரீ தன் மயிரைக் கத்தரித்துக் கொண்டால், அவள் தன்னுடைய தலையைக் கனவீனப்படுத்துகிறாள்' என்று கூறுகிறது. கனவீனமான எந்த ஸ்திரீயுடனும் வாழக்கூடாது. ஆமென். அவள் தன்னுடைய மகிமையை கத்தரித்துப் போடுகிறாள். சபையும் அதைத்தான் செய்கிறது. அவள் அதே காரியத்தைச் செய்கிற போது, அவளுடைய மகிமையின் நதியை அவள் துண்டித்துப் போடுகிறாள். உம். ஓ, தேவனே, நான் இந்தக் காரியங்களை ஏன் கூறுகிறேன்? ஆனால் இது சத்தியமாயுள்ளது. இல்லை, நமக்கு சமரசம் செய்கிறவர்கள் அவசியமில்லை. - நமக்குத் தேவையில்லை. நீதிக்காகவும் உரிமைக்காகவும் நின்று அது என்னவாயிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் சத்தியத்தைக் கூறுகிற மனிதர்களும் ஸ்திரீகளுமே நமக்குத் தேவை. ஆமென். தேவனுடைய முத்திரை... என்னுடைய சகோதரனே, உன்னுடைய விளக்கின் திரியை வெட்டி சுத்தப்படுத்து. பரிசுத்த ஆவியானவரின் வெளிச்சமானது மீண்டும் புத்துணர்ச்சியோடு எரியட்டும். இது இருளடைந்து கொண்டிருக்கிறது. ஓ, இது அப்படிப்பட்ட ஒரு பயங்கரமான நேரமாயுள்ளது. இது இருளடைந்து கொண்டிருக்கிறது. 60இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு, நான் போனேன்... நான் டல்லாஸிலிருந்து வந்து கொண்டிருந்தேன், விமானத்தில் பறந்தபடியே இந்தியானாவுக்குப் போய்க் கொண்டிருந்தேன், ஒரு புயல் வந்து, விமானம் மெம்பிஸில் இறங்க வேண்டியதாயிருந்தது. மேலும் நான் - நான்... அவர்கள் என்னை அங்கிருந்த மகத்தான பெரியதும் அருமை யானதுமான அந்த ஓட்டலில் தங்க வைத்து என்னிடம் கூறினர்... அவர்கள் சிறிது கழிந்து என்னை அழைத்து, 'நாங்கள் உம்மை காலையில் 7 மணிக்கு அழைப்போம். உம்மை அழைத்துச் செல்ல சில விமான போக்குவரத்து நிறுவனங்களை நாங்கள் கொண்டிருப்போம்' என்றனர். ஏனெனில் அவர்கள் - நான் ஏற்கனவே என்னுடைய பயணத்திற்கான தொகையை செலுத்தியிருந்தேன், அவர்கள் -அவர்கள் அந்த இரவில் ஓட்டலில் என்னுடைய பயணத்திற்கான தொகையை செலுத்த வேண்டியிருந்தது. எனவே நான் உட்கார்ந்து என்னுடைய நண்பர்களுக்கு சில கடிதங்களை எழுதினேன். அடுத்த நாள் காலையில் நான் எழுந்து கடிதங்களை அஞ்சல் செய்வதற்காக போய்க் கொண்டிருந்தேன், நான் தெருவில் போய்க் கொண்டிருந்தேன். நான், 'நான் இப்பொழுது விரைந்து போவேன், ஏனெனில் அந்த சொகுசு கார் நம்மை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அழைத்துச் செல்லப் போகிறது' என்று நினைத்தேன். நான் தெருவில் நடக்கத் தொடங்கினேன், மிக வேகமாக நடந்து கொண்டிருந்தேன், உங்களுக்குத் தெரியும். பரிசுத்த ஆவியானவர், 'அப்படியே நில்' என்றார். நான் சுற்றும் முற்றும் பார்த்தேன், ஒரு பெரிய ஐரிஸ் போலீஸ்காரர் அங்கே நின்று, இங்கு பார்த்துக் கொண்டிருந்தார், நான், நிச்சயமாக, அதைக் கூறினது அவரல்ல' என்று எண்ணினேன். நான் மீண்டும் நடக்கத் தொடங்கினேன், 'ஒருபுறமாக ஒதுங்கிப் போகலாம்' என்றேன். அங்கே சுற்றிவைக்கப்பட்டிருந்த சில மீன்பிடிக்கும் கருவிகளும் காரியங்களும் இருந்தன. நான் இவ்விதமாக நடந்து போனேன், நான் அதை நோக்கிப் பார்ப்பது போல நடந்து கொள்வேன், அப்பொழுது தான் அவர் ஏதோவொன்றைக் குறித்து சந்தேகமாக நினைக்க மாட்டார் என்று நினைத்தேன். எனவே நான் அங்கே நடந்து சென்று சுற்றிவைக்கப் பட்டிருந்த அந்தக் காரியங்களை பார்க்கத் தொடங்கினேன், நான், 'பரலோகப் பிதாவே, பேசினது நீர் தானா?' என்றேன். அவர், 'திரும்பி, வடக்கு நோக்கிச் செல், தொடர்ந்து நடந்து கொண்டேயிரு' என்றார். நான், 'சரி, பிதாவே' என்றேன். நான் அப்படியே... தொடங்கினேன். தேவனுடைய பிள்ளைகள் தேவனுடைய ஆவியால் நடத்தப்பட வேண்டும் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா...?... நம்மோடுள்ள காரியம் அதுதான், நம்முடைய விளக்கு மிகவும் புகைந்து விட்டது, இனிமேல் நாம் எதுவும் கூற முடியாது. இங்கே நாம்... 61நான் நடந்து போய்க் கொண்டிருந்தேன். நான் நடந்து, நடந்து, நடந்து, போனேன், நான், 'நல்லது, என்னே' என்று நினைத்தேன். நான் நோக்கிப் பார்த்தேன், விமானம் வரும் வேளை ஆகி விட்டது. அவர் அப்படியே தொடர்ந்து, 'நட' என்று சொல்லிக் கொண்டிருந்தார். நான் அப்படியே தொடர்ந்து நடந்து கொண்டிருந்தேன். நான் சென்று மறுபக்கத்தை அடைந்தேன், நான் அங்கேயிருந்த கறுப்பினத்தவருக்கான மாவட்டத்திற்குள் வந்து சேர்ந்தேன். நான் போய்க்கொண்டேயிருந்தேன், நல்லது அது வெப்பமான வழியாயிருந்தது; சூரியன் மேலே வெப்பமான விதமாக இருந்தது. நான், 'ஓ, நான் என் விமானத்தை விட்டு விட்டேன். நல்லது, அவர் நடக்கும்படி சொன்னால், ஒருவேளை வீட்டிற்கு நடந்து செல்லும்படி கருதுகிறாரோ என்று ஊகிக்கிறேன். எனவே நான் அப்படியே தொடர்ந்து நடந்து கொண்டிருப்பேன், என்னுடைய சூட்கேûஸ அங்கேயே விட்டு வந்து விட்டேன்' என்று நினைத்தேன். எனவே அப்போது நான் போனேன் - நான் போனேன் - என்னுடைய சூட்கேûஸ இன்னும் ஓட்டலிலேயே வைத்திருந்தேன், என்னிடம் இந்தக் கடிதங்கள் இருந்தன. நான் தொடர்ந்து நெடுக நடந்து போய்க் கொண்டிருந்தேன். நான், 'நல்லது, கர்த்தாவே...' என்று நினைத்தேன். அப்படியே ஏதோவொன்று, 'தொடர்ந்து நடந்து கொண்டேயிரு, தொடர்ந்து நடந்து கொண்டேயிரு' என்று இடைவிடாமல் கூறிக் கொண்டேயிருந்தது. நான் அப்படியே தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தேன்; செய்ய வேண்டிய காரியம் அது மாத்திரமே. அது எவ்வாறு காணப்பட்டாலும் காரியமில்லை, எப்படியாயினும் தொடர்ந்து செய். தேவன் அதைச் செய்யும்படி சொல்லியிருந்தால், எப்படியாயினும் அதை அப்படியே தொடர்ந்து செய்யுங்கள், அந்த விதமாகத்தான் நீங்கள் அதைச் செய்ய வேண்டும். அந்தவிதமாகத்தான் நீங்கள் சுகமடைகிறீர்கள் (பாருங்கள்?); அப்படியே தொடர்ந்து நடந்து கொண்டேயிரு. 'நேற்றைய தினம் என்னுடைய விரலை அதை விட வேகமாக அசைக்க முடியவில்லை; இன்று அதை அந்த அளவு வேகமாக அசைக்க முடிகிறது. தேவனுக்குத் துதிகள். நாளை அதை அவ்வளவு அதிகமாக அசைப்பேன், அடுத்த நாள் பெரிய அளவில் அதை அசைப்பேன். அப்படியானால் முதலாவது காரியம், நான்...?...' என்று கூறலாம். அப்படியே தொடர்ந்து நடந்து கொண்டிருங்கள். அவ்வளவு தான், அப்படியே தொடர்ந்து நடந்து கொண்டிருங்கள். 62பிறகு நான் அங்கே மெம்பிஸின் மறுபக்கத்தில் போய்ச் சேர்ந்தேன். நான் அங்கு போய்ச் சேர்ந்த போது, ஏன், நான் சில - அங்கேயிருந்த ஒரு பெரிய கறுப்பினத்தவருக்கான மாவட்டத்தின் வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தேன், அங்கே வெளியில் சிறு பழைய குடிசைகள் போன்றவை இருந்தன. நான், 'நான் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன்?' என்று நினைத்தேன். 'நல்லது, தொடர்ந்து நடக்கும்படிக்கு அவர் கூறினார். நான் ஏதோ வேறு வழியில் திரும்பும்படி அவர் விரும்பினால், அவர் என்னிடம் சொல்லியிருப்பார்' என்று நினைத்தேன். எனவே நான் அப்படியே தொடர்ந்து நடந்து கொண்டிருந்தேன். நான் அந்த சிறு பாடலைப் பாடியபடியே நடந்து சென்றேன், பெந்தெகோஸ்தே ஜனங்களாகிய நீங்கள் அதைக் குறித்துப் பாடுகிறீர்கள் - என்னால் சுருதியைப் பெற்றுக் கொள்ளக் கூடுமா என்று, நாம் பார்க்கலாம். அவர்கள் மேலறையில் ஒன்றுகூடி, எல்லோரும் அவருடைய நாமத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தனர், அவர்கள் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, ஊழியத்துக்காக வல்லமை வந்தது; அன்று அவர் அவர்களுக்குச் செய்ததையே உனக்கும் இப்பொழுது செய்தார் அதையே உனக்கும் அவர் செய்வார், நானும் அவர்களில் ஒருவன் என்று சொல்ல முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன். (நீங்கள் அதைக் கேட்டிருக்கிறீர்கள், இல்லையா? ஆம், ஐயா.) அந்த ஜனங்கள் ஒருவேளை கல்வி கல்லாதவர்களாக - இருக்க வேண்டிய கல்வியறிவற்றவர்களாக இருக்கலாம், அல்லது உலகப் புகழ் உள்ளதாக பெருமை பாராட்டாமல் இருக்கலாம், அவர்கள் அனைவரும் இயேசுவின் நாமத்திலுள்ள விசுவாசத்தின் மூலமாக, தங்களுடைய பெந்தெகோஸ்தேவைப் பெற்றிருந்தனர்; இப்பொழுது அவர்கள் உலகின் எல்லா திக்குகளிலும் அவருடைய வல்லமை இன்னும் மாறாததென்று சொல்லி வருகின்றனர், நானும் அவர்களில் ஒருவன் என்று சொல்ல முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன். 63நான் எனக்கு நானே வாய்திறவாது அதைப் பாடிக்கொண்டே நெடுக போய்க்கொண்டிருந்தேன். நான் நோக்கிப் பார்த்தேன்; ஒரு வயதான கறுப்பின ஸ்திரீ அங்கேயிருந்த ஒரு - ஒரு - ஒரு வாசல் கதவில் இதைப்போன்று சாய்ந்து நின்று கொண்டிருப்பதைக் கண்டேன். (சூரியன்) மேலே இருந்தது, ஓ, அது அற்புதமான வசந்த காலமும், அழகிய மஞ்சள் நிற மலர்கள் பூத்துக் குலுங்கிய (honeysuckle) இடமுமாயிருந்தது. ஆரஞ்சு மலர்கள் தான் மலர்ந்து நன்றாக மணம் வீசுகின்றன என்று நீங்கள் - நீங்கள் - நீங்கள் நினைக்கிறீர்கள், அங்கே பின்னால் இந்தியானாவில் அழகிய மஞ்சள் நிற மலர்களிலிருந்து வீசும் வாசனையை நீங்கள் முகர்ந்து பார்க்கும் வரை சற்று காத்திருங்கள். எனவே அங்கே இருந்தது - அவள் அங்கே சாய்ந்தவாறு நின்று கொண்டிருந்தாள், அவள் மனிதர்கள் உடுத்தும் சட்டை ஒன்றை தன்னுடைய தலையைச் சுற்றிலும் கட்டிக் கொண்டிருந்தாள், மகத்தான பெரிய பெருத்த முகம், நீங்கள் அறிவீர்கள். நான் நெடுகப் போய்க் கொண்டிருந்தேன், நான் நினைத்தேன்... நல்லது, அவள் அங்கே நின்று கொண்டிருப்பதை நான் கண்டேன். நான் தொடர்ந்து அதே போன்று நடந்து கொண்டிருந்தேன். நான் நெருங்கிப் போன போது, அவள் சிரிக்கத் தொடங்கினாள், மகத்தான பெரிய கண்ணீர் துளிகள் அவளுடைய கண்களிலிருந்து வழியத் தொடங்கியது. நான், 'காலை வணக்கம், ஆன்ட்டி' என்றேன். வழக்கமாக அந்தவிதமாகத்தான் தெற்கிலுள்ள கறுப்பின ஜனங்களைக் கண்டு நாங்கள் பேசுவதுண்டு. அவள், 'காலை வணக்கம், பார்சன்' என்றாள். நான், 'பார்சனா?' என்றேன். அது ஒரு பிரசங்கி என்று உங்களுக்குத் தெரியும். நான், 'நான் ஒரு பார்சனென்று உனக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டேன். அவள், 'நீர் வந்து கொண்டிருந்தீர் என்பதை நான் அறிந்தேன்' என்றாள். நான் சொன்னேன் - நின்று, திரும்பி வந்தேன்; நான், 'பிதாவே, இதுதான் அதுவா? இந்த நீக்ரோ பெண்ணிடம் தான் நீர் என்னை அனுப்பினீரா?' என்று நினைத்தேன். 64அவள் அங்கே நின்று கொண்டிருந்தாள், நான், 'நான் ஒரு பார்சன் என்று உனக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டேன். அவள், 'சூனேமிய ஸ்திரீயைக் குறித்த கதையை நீர் எப்பொழுதாவது வாசித்திருக்கிறீரா?' என்று கேட்டாள். நான், 'ஓ, ஆம்' என்றேன். அவள், 'நான் அந்தவிதமான ஸ்திரீ தான். எனக்கு பிள்ளைகள் எதுவும் இல்லாதிருந்தது, கர்த்தர் எனக்கு ஒரு குழந்தையைக் கொடுப்பாரானால், அவரை சேவிக்கும்படி நான்-நான்-நான் அதை வளர்ப்பேன் என்று அவரிடம் கூறினேன். நான் - நான் அதைச் செய்தேன். கர்த்தர் எனக்கு ஒரு குழந்தையைக் கொடுத்தார். அவனை வளர்ப்பதற்காக நான் சலவைக்கல்லில் துணிகளைத் துவைத்தேன். அவன் - அவன் அவ்வளவு ஒரு அருமையான பையனாக இருந்தான்' என்றாள், ஆனால், 'அவன் தவறான பாதையைத் தெரிந்து கொண்டான். அவன் தவறான நண்பர்களோடு வெளியே சென்றான். அவன்...' என்றாள். மேலும் அவள் ஒரு பண்டைகால பெந்தெகோஸ்தே பரிசுத்தவாட்டியாக இருந்தாள். எனவே அவள் சொன்னாள் - அவள்... 'அவன் தவறான பாதையைத் தெரிந்து கொண்டான். அவன் பயங்கரமான சமூக வியாதி ஒன்றைப் பெற்றுக் கொண்டான். எனக்கு அது தெரியாது. இப்பொழுது, அவர்களால் அவனுக்காக எதையும் செய்ய முடியவில்லை. அவனுடைய இருதயமானது தின்னப்பட்டிருக்கிறது. அவன் அங்கே கிடந்து மரித்துக் கொண்டிருக்கிறான்' என்றாள். 65'கடந்த இரவில் நான் முழு இரவும் ஜெபித்தேன். பார்சன் அவர்களே, அவன் இரண்டு நாட்களாக சுயநினைவின்றி இருக்கிறான். நான் கடந்த முழு இரவும் ஜெபித்தேன். கர்த்தாவே, நீர் இந்தக் குழந்தையை எனக்குக் கொடுத்தீர். நான் - நான் உம்மை சேவிக்கிறவள். அந்த எலிசா எங்கே?' என்று அவன் (அவள்) கூறினாள். 'நான் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தேன். இந்த காலையில் என்னுடைய முழங்காலில் இருந்தவாறே உறங்கிப் போனேன். ஏறக்குறைய 2 மணியளவில், நான் இங்கே வந்து இந்த வாசல்கதவில் நின்று கொண்டிருக்க வேண்டுமென்று கர்த்தர் என்னிடம் கூறினதாக சொப்பனம் கண்டேன்' என்றாள். மேலும் அவள் கூறினாள், 'மஞ்சள் கலந்த பழுப்பு நிற சூட்டை அணிந்து கொண்டு, ஒரு சிறு பழுப்பு நிற தொப்பியோடும் அவர் தெருவில் வந்து கொண்டிருப்பார். பகல் வெளிச்சம் வருவதற்கு முன்பதாகவே நான் இங்கே காத்துக் கொண்டிருந்து, நீர் வந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அது -நான்-நான் அறிந்து கொண்டேன்' என்றாள். ஓ, அது தான் பெந்தெகோஸ்தே. அதுதான் உண்மையான பெந்தெகோஸ்தே. நான் அவளிடம் கூறினேன்; நான், 'ஆன்ட்டி, என்னுடைய பெயர் பிரன்ஹாம். நீ எப்பொழுதாவது என்னைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறாயா?' என்றேன். அவள், 'இல்லை ஐயா, பார்சன் பிரன்ஹாம், நான் ஒருபோதும் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டதேயில்லை. நான் வருந்துகிறேன், ஆனால் நான் ஒருபோதும் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டதேயில்லை. நீர் உள்ளே வர மாட்டீரா?' என்றாள். நான், 'சரி, பெருமாட்டியே, உனக்கு நன்றி' என்றேன். நான் ஒருபோதும் வேறொரு வார்த்தையைக் கூறவேயில்லை. நான், 'இதுதான் நிச்சயமாக அதுவாக இருக்க வேண்டும்' என்று நினைத்தேன். 66எனவே நான் உள்ளே நடந்து சென்ற போது, அவர்களிடம் வாசல் கதவில் ஒன்றாக இழுத்துக் கட்டப்பட்டிருந்த ஒரு சங்கிலியில் தொங்கவிடப்பட்டிருந்த ஒரு பழைய கலப்பையின் முனை (plowpoint) இருந்தது. நாம் கிழக்கில் குறுகிய செவ்வக வடிவ வீடு (shotgun house) என்று அழைக்கிறபடியான ஒரு சிறு நீளமான பழைய இரண்டு அறைகளைக் கொண்ட ஒரு (வீட்டுக்குள்) சென்றேன். நான் ராஜாக்களின் அரண்மனைகளில் இருந்திருக்கிறேன், நான் இங்கிலாந்திலுள்ள ஜார்ஜ் மன்னருக்காக ஜெபிக்கும்படி சென்றேன். நான் மேலே சுவி - சுவீடனிலுள்ள குஸ்டாபெஸ் அவர்களோடு இருந்தேன். நான் அனேக மன்னர்களின் அரண்மனைகளிலும், பாரூக் இராஜாவின் அரண்மனையிலும், மற்ற அனேக இடங்களிலும், மகத்தான பெரும் அதிகாரம் கொண்டவர்களின் இடங்களிலும், பேரரசர்களின் இடங்க ளிலும் இருந்திருக்கிறேன். இன்று உலகம் கொண்டிருக் கும் மகத்தானவர்களில் சிலருடைய இடங்களுக்கு உள்ளே சென்று அவர்களோடு பேசும்படிக்கும், பேட்டி காணும்படிக்கும் சிலாக்கியம் எனக்கு உண்டாயிருந்தது. நான் அழகான வீடுகளில் இருந்திருக்கிறேன். ஆனால் அந்தக் காலை வேளையில் அந்தச் சிறு நீக்ரோவின் குடிசையில் நான் வரவேற்கப்பட்டதை உணர்ந்ததைக் காட்டிலும் அதிகமாக வேறு எந்த வீட்டிலும் நான் ஒருபோதும் அப்படி வரவேற்கப்பட்டதை உணர்ந்ததில்லை. நான் அங்கே உள்ளே சென்ற போது, தரையில் கம்பளம் விரிக்கப்பட்டிருக்கவில்லை, ஒரு பழைமையான சிறிய விளம்பர தட்டியினால் உருவாக்கப்பட்ட படுக்கை அந்த விதமாக இருந்தது, அங்கே மேலே கதவில், 'தேவன் நம்முடைய வீட்டை ஆசீர்வதிப்பாராக' என்ற வாசகத்தை ஒரு பெரிய அடையாளமாக அவர்கள் கொண்டிருந்தனர். தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்கிற ஜனங்களுடைய வீடுகளில் நான் இருந்திருக்கிறேன், அங்கே வசீகரிக்கும் அழகுடைய பெண்களின் படங்களையும், அசுத்தமான கீழ்த்தரமான படங்களையும் சுவரில் தொங்க விட்டிருப்பார்கள். நான் உண்மையாகவே வீட்டில் (இருப்பது போன்று) உணர்ந்தேன். 67அங்கே படுக்கையில் கவனித்தேன், அங்கே ஒரு மகத்தான பெரிய வலிமையுள்ளவனாக தோற்றமளிக்கிற கறுப்பின பையன் படுத்திருந்தான். அவனுக்கு 170 பவுண்டு எடையிருக்கும் என்று ஊகிக்கிறேன். அவன் தன்னுடைய கரத்தில் துப்பட்டியை வைத்திருந்து,'உம்! உம்!' என்று (முனகிக்)கொண்டிருந்தான். நான், 'சகோதரனே, என்ன விஷயம்?' என்றேன். அவள், 'பார்சன், அவன் இரண்டு நாட்களாகப் பேசவேயில்லை' என்றாள். அவன் தொடர்ந்து, 'இங்கே இருளாக உள்ளது. அது இருளாக உள்ளது. நான் எங்கே போய்க்கொண்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியவில்லை, 'உம்! உம்!' [சகோதரன் பிரன்ஹாம் முனகுவது போன்ற சத்தத்தை எழுப்புகிறார் - ஆசிரியர்.]' என்று கூறிக் கொண்டிருந்தான். அந்த வயதான ஆன்ட்டி என்னிடம் வந்தாள்; அவள், 'பார்சன், அவன் வெளியே எங்கோ ஓரிடத்திலுள்ள ஆற்றில், கடலை நோக்கி இருப்பதாக எண்ணிக் கொள்கிறான். மேலும் அது இருளாக இருக்கிறது, அவன் ஒரு படகில் துடுப்பு போட்டு கொண்டிருக்கிறான், அவன் எங்கே போய்க்கொண்டிருக்கிறான் என்பதைக் காண முடியவில்லை. இரண்டு நாட்களாக அவன் அதையே கூறிக்கொண்டிருக்கிறான்' என்றாள். நான், 'ஓ, அது மிகவும் மோசமாக உள்ளது. நல்லது, ஆன்ட்டி, என்னுடைய ஊழியம், நான் இப்பொழுதுதான் டல்லாஸ், டெக்ஸôûஸ விட்டு வந்திருக்கிறேன்; நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறேன்' என்றேன். அவள் அதில் ஆர்வம் காட்டவில்லை. 68அவள், 'பார்சன், அப்படியே ஒரு காரியத்தை நான் கூற விரும்புகிறேன். நீர் ஜெபிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், என்னுடைய பையன், 'அம்மா, அதெல்லாம் சரியாக உள்ளது, நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன்' என்று கூறுவதை நான் கேட்கும்படியாக பரலோகத்தின் தேவன் அனுமதிப்பாரானால், அவன் போகும்படி உத்தரவு கொடுக்க நான் ஆயத்தமாயிருப்பேன். ஆனால் நான் என்னுடைய பையனுக்காக அதிக கடினமாக வேலை செய்துள்ளேன், அதிக கடினமாக ஜெபித்திருக்கிறேன். அவன் அந்தவிதமாக மரிப்பதைப் பார்க்கவும், அவன் புறம்பே இழக்கப்படப் போகிறான் என்பதையும், அவன் அந்தவிதமாக பின்மாற்ற மடைந்துள்ளான் என்பதை அறியவும் நான் அப்படியே வெறுக்கிறேன். அவன், 'அதெல்லாம் சரிதான், அம்மா; நான் போக ஆயத்தமாயிருக்கிறேன்' என்று கூறுவதை நான் வெறுமனே கேட்கக்கூடுமானால். நீர் ஜெபிப்பீரா?' என்று கூறினாள். நான், 'சரி, ஆன்ட்டி' என்றேன். நாங்கள் தரையில் முழங்கால்படியிட்டோம், அவள் அதனுடன் இருப்பதை நான் கண்டேன், அல்லது அவளுடைய மகனுடைய சட்டை தான் அவளுடைய தலையைச் சுற்றிலும் கட்டப்பட்டிருந்தது என்று ஊகிக்கிறேன், அந்த விதமான மகத்தான பெரிய வயதான பெருத்த கன்னங்கள், அவள் - மகத்தான பெரிய ஸ்திரீயாக இருந்தாள்; அவள் முழங்கால்படியிட்டாள். நான் நினைத் தேன்... நான், 'ஆன்ட்டி, நீ எங்களை ஜெபத்தில் வழிநடத்து' என்றேன். ஓ, சகோதரனே, அவள் பெந்தெகோஸ்தேயினள் என்பதை நான் ஒருபோதும் அறியாமலிருந்தாலும், நான் அதை அப்போது அறிந்தேன். ஜெபிப்பதைப் பற்றிப் பேசுகிறீர்கள், உங்களுடைய மயிர் உங்களுடைய கழுத்தின் பின்னால் நிமிர்ந்து நிற்கும்படியாக நீங்கள் உணரக் கூடியதான ஒரு ஜெபத்தை அந்த வயதான ஸ்திரீ ஜெபித்தாள். அவள்... போன்று ஜெபித்தாள். நான் உங்களுக்குக் கூறுகிறேன்; அவள் இதற்கு முன்னால் அவரிடம் பேசியது போன்று அவள் அவரிடம் பேசினாள். அவள் யாரிடம் பேசிக் கொண்டிருந்தாள் என்பதை அறிந்திருந்தாள்... ஓ, அப்படிப்பட்ட ஒரு ஜெபம், அவள் அப்படியே என்னுடைய இருதயத்தை தகுதியற்றதாக (உணரும்படி) செய்தாள். அவள் முடித்த போது, அவள் அங்கு சென்று அவனைத் தலையில் முத்தமிட்டாள்; அவள், 'அம்மாவின் பிள்ளையை தேவன் ஆசீர்வதிப்பாராக' என்றாள். 69நான், 'அங்கே அது உள்ளது, அங்கே அது இருக்கிறது' என்று எண்ணினேன். பாருங்கள்? அவன் வீட்டிற்கு அவமானத்தைக் கொண்டு வந்திருந்த போதிலும், 'அம்மாவின் பிள்ளையை தேவன் ஆசீர்வதிப்பாராக.' மகத்தான பெரிய பருத்த மனிதனைப் போன்ற தோற்ற மளித்தவனாக இருந்தான், அவன் என்ன செய்திருந் தாலும் காரியமில்லை, அவன் இன்னும் அம்மாவின் பிள்ளை தான்; ஏனெனில் அந்த தாயாரின் அன்பு அவனி டமாக இன்னும் செலுத்தப்படுவதாக இருந்தது. நான், 'ஆம், அது சரியே' என்று எண்ணினேன். ஆனால் வேதாகமம், 'ஒரு தாய் தன் பாலகனை மறப்பாளோ?' என்று கூறுகிறது. 'அவள் மறந்தாலும், நான் உன்னை மறக்க முடியாது. என் உள்ளங்கையில் உங்கள் நாமங்களை வரைந்து வைத்திருக் கிறேன்' என்று வேதாகமம் கூறுகிறது. என்னவொரு - என்னவொரு மகத்தான அன்பு, தேவன் எப்படி நம்மை எப்போதாவது மறப்பார். நம்முடைய விளக்குகள் புகைந்த போதிலும், அவர் இன்னும் நம்மை நேசிக்கிறார். என் சகோதரனே, நம்முடைய மங்கலான விளக்கினுடைய திரியை வெட்டி சுத்தப்படுத்துவோம். நாம் திரியை வெளியே நீட்டிக்கொண்டிருப்போம். நாம் - நாம் கர்த்தராகிய இயேசுவை சந்திக்க ஆயத்தாவோம். நாம் சுத்தப் படுத்துவோம்; ஆயத்தப்படுத்துவோம்; ஜெபிப்போம்; தெளிவுபடுத்திக் கொள்வோம். 70அங்கே, அவள் அவனை அந்தவிதமாக முத்தமிட்டாள். அவன், 'ஓ, அம்மா, இது இருளாயுள்ளது. ஒ, இது இருளாயுள்ளது' என்று கூறியவாறு போர்வையை முன்னும் பின்னுமாக இழுத்துக் கொண்டிருந்தான். நான் அவனுடைய பாதத்தைப் பிடித்தேன். அவனுடைய கால்கள் குளிர்ந்து போய், பிசுபிசுப்பானதாக இருந்தது, நான் சொன்னேன் - அவன் மரித்துக் கொண்டிருந்தானே என்பது போன்றிருந்தது. நான், 'சகோதரனே, என்னைக் கேட்க முடிகிறதா?' என்றேன். அவன், 'ஓ, அம்மா, இது இருட்டாயுள்ளது' என்று கூறினான், அவன் சொன்னான். நான் அவனிடம் பேச முயற்சித்தேன்; அவன் அதை அறியவில்லை, அவனுடைய தலையை இவ்விதமாக ஆட்டினான், அந்த காரியம் அவனுடைய வாயிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தது. மேலும் அவன், 'ஓ, அம்மா, இது இருட்டாயுள்ளது, இருட்டாயுள்ளது; எனது படகு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை' என்று கூறினான், அதே போன்று கூறினான். அவள் அழத்தொடங்கி, அந்தப் பெரிய வயதான கன்னங்களை இவ்விதமாகத் துடைத்துக் கொண்டிருந்தாள். மேலும் - மேலும் அவள், 'பார்சன், நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்பது உமக்குப் புரிகிறதா?' என்றாள். நான், 'ஆம், பெருமாட்டியே' என்றேன். அவள், 'பார்சன், அடுத்ததாக நீர் ஜெபிப்பீரா?' என்று கேட்டாள். நான், 'சரி, பெருமாட்டியே' என்றேன். நான் முழங்கால் படியிட்டு, 'நீயும் என்னுடன் முழங்கால்படியிடு' என்றேன். நான் அவனுடைய பாதங்களின் மேல் என்னுடைய கரங்களை வைத்தேன்; நான், 'பரலோகப் பிதாவே, இப்பொழுது 9 மணி தாண்டி விட்டது; என்னுடைய விமானம் போய் நீண்ட நேரம் ஆகி விட்டது. நீர் இரக்கமாயிருக்க வேண்டும் என்று நான் - நான் ஜெபிக்கிறேன். நீர் ஏன் என்னை இங்கே வழிநடத்தினீர் என்பது எனக்குத் தெரியவில்லை; நிச்சயமாக நீர் இவ்விடத்திற்குத் தான் என்னை வழிநடத்தினீர். இதுதான் அந்த இடம் - ஏனெனில் நீர் என்னை வழிநடத்தியிருக்காவிட்டால், நான் இந்த வழியாக வந்திருக்க மாட்டேன், இந்த ஸ்திரீ இங்கே நின்று கொண்டிருந்தாள். நீர் ஒருபோதும் வீணாக எங்களை வழிநடத்துவதில்லை; நீர் - நீர் செய்து கொண்டிருப்பதை எப்போதுமே எங்களுக்குக் காண்பிக்கிறீர். எனவே பிதாவே, இது உமக்குச் சித்தமானானால், நீர் இந்தப் பையனைச் (சுகமடையச் செய்ய வேண்டும்) என்று ஜெபிக்கிறேன் - இந்த ஸ்திரீயின் விண்ணப்பத்தை அருளிச் செய்து, அவள் - அவன் சுகமடைவானாக. நீர் அவனுடைய சரீரத்தைச் சுகப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்' என்றேன். நான் இன்னும் ஜெபித்துக் கொண்டிருக்கையில், அவன், 'அம்மா, ஓ, அம்மா, அறையில் வெளிச்சம் வந்து கொண்டிருக்கிறது' என்றான். ஓ தேவனே. 'அறையில் வெளிச்சம் வந்து கொண்டிருக்கிறது.' உங்களுக்குத் தெரியுமா, ஒரு சில நிமிடங்களில், அவன் படுக்கையின் பக்கத்தில் உட்கார்ந்து எங்களுடன் பேசிக்கொண்டிருந்தான். அந்தப் பெரிய கறுத்த கரத்தை என்னைச் சுற்றிலும் இவ்விதமாகப் போட்டான்... 'நான் கட்டாயம் போயாக வேண்டும்' என்றேன். நான் தெருவில் போகத் தொடங்கினேன், நான் ஒரு வாடகை வண்டியைப் பிடித்து, மிக அவசரமாக ஓடிச் சென்று, என்னுடைய சூட்கேûஸ எடுத்துக் கொண்டு, 'நல்லது, நான் வெளியே போய், இன்றிரவு ஏதோவொரு நேரத்தில் விமானத்தை பிடிப்பேன்' என்றேன். அங்கே யுத்தத்திற்குப் பிறகு அது சரியாக இருந்தது, வெளியே ஒரு விமானத்தைப் பிடிப்பதென்பது மிக மோசமானதாக இருக்கிறது. நான் வாகனத்தில் வந்து சேர்ந்த போது, அவர்கள், 'விமான எண் 172க்கு கடைசி அழைப்பு' என்று கூறினார்கள். ஓ, அந்த விமானம் அந்த நேரம் எல்லாமே அவ்விடத்தில் நின்றிருந் தது. நான் அதே விமானத்தைப் பிடித்தேன். பாருங்கள், தேவன் எல்லாவற்றையும் சரியாக கிரியை செய்ய வைக்கிறவர், இல்லையா? ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து, நான் போய்க் கொண்டிருந்தேன்... 71(அந்நிய பாஷைகளில் பேசி அர்த்தம் உரைக்கப் படுகிறது- ஆசிரியர்.) தேவனே, ஓ பிதாவே, எங்களுக்கான இந்த எச்சரிப்புக்காக நாங்கள் உமக்கு எவ்வளவாக நன்றி செலுத்துகிறோம். கர்த்தாவே, அது வீணாகப் போகவில்லை யென்பதை நான் அறிவேன். ஓ தேவனே, ஜனங்கள் ஆயத்தமாவதற்காகத் தங்களுடைய விளக்குகளிலுள்ள திரியை வெட்டி சுத்தப்படுத்தும்படி அவர்களைத் தூண்டும்படி மாத்திரமே நாங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் காணட்டும். கர்த்தாவே, வேளையானது நெருங்குகிறது, இந்த எல்லா அடையாளங்களும், உறங்கிக் கொண்டிருக்கும் கன்னிகை இப்பொழுது எண்ணெயைத் தேடிக் கொண்டிருக்கும் சமயத்தில், இந்த எல்லா காரியங்களும்... உம்முடைய ஆவியானவர் இறங்கி வந்து, உண்மையான இந்த செய்தி சரிதான் என்று நிரூபித்துக் காட்டுவதை கேட்கும்போது, தேவனே, நீர் ஜனங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். அவர்கள் இன்றிரவு தேவனால் எச்சரிக்கப்படட்டும், அவர்கள் தங்களுடைய விளக்குகளிலுள்ள திரியை வெட்டி சுத்தப்படுத்தி, மணவாளனை சந்திக்கும்படி ஆயத்தமாகும் வரைக்கும் அவர்கள் இளைப்பாறுதலற்றிருக்கட்டும். இதை அருளும், பிதாவே. ஆமென். எவ்வளவு அழகாயுள்ளது. அந்த மனிதரை நீங்கள் கவனித்தீர்களா? அவர்கள்... எப்படி என்று நீங்கள் கவனித்தீர்களா. பெந்தெகோஸ்தே ஜனங்களே, பகுத்தறிதலை அனுமதிப்பது உங்களைத் திகைப்படையச் செய்கிறதா? அதைக் காட்டிலும் இது எவ்வளவு முக்கியமானது என்பதைப் பாருங்கள். பாருங்கள்? எப்படியாக அது - அது... பாருங்கள், அந்த மனிதன் பேசிக் கொண்டிருந்த சத்தத்தின் தொனியும் அதேவிதமாக இருந்தன. அர்த்தம் உரைத்தலும் அதே (பாருங்கள்?), அதேவிதமாக, சற்றேறக்குறைய அதே அளவோடும், அதே அளவு பத்திகளோடும், மற்றும் யாவற்றோடும் வருகிறது என்பதைப் பாருங்கள். அதுதான் பரிசுத்த ஆவி. நான் உங்களுக்கு சத்தியத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அது உண்மை. ஓ, பாவியான நண்பனே, இப்பொழுதே கர்த்தரைத் தேடு. அவர் - அவர் ஒருக்கால் கேட்கும் போதே அவரை நோக்கிக் கூப்பிடு. அவருக்குச் செவிகொடுஙகள், அவருக்குச் செவி கொடுங்கள் என்பதே என்னுடைய ஜெபமாக உள்ளது. 72என்ன சம்பவித்ததென்று நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். ஒரு வருடம் கழித்து, நான் ரயில் வண்டியில் போய்க்கொண்டிருந்தேன் - ஃபோனிக்ஸிற்கு வந்து கொண்டிருந்தேன். நீங்கள் மெம்பிஸில் எப்பொழுதாவது இருந்ததுண்டானால், கிழக்கிலிருந்து வந்திருப்பீர்களானால், நீங்கள் இவ்விதமாக மேல்நோக்கி வந்திருப்பீர்கள். நான் ரயில் வண்டியை விட்டு இறங்கி, அங்கே அது வழியாக நடக்கத் தொடங்கினேன். ரயிலில் அவர்கள் உங்களுக்குக் கொடுக்கும் ஒரு சின்னஞ்சிறு சான்ட்விச்சுக்கு அவர்கள் ஏறக்குறைய - 50 சென்டுகள் பணம் வசூலித்து விடுவார்கள், மேலும் அது மிகவும் மெல்லியதாக இருக்கும். நான் தூரமாகப் போய் கொஞ்சம் ஹாம்பர்கர்களை எனக்கு வாங்க முடியும் ஒரு இ ட த் தி ற் கு ச் செ ல் வ து ம ட் டு மா க காத்திருந்தேன், நான் ஒரு கோணிப்பையில் அவைகளை வாங்கி வைத்து விட்டு, ரயில் வண்டிக்குத் திரும்பினேன் (பாருங்கள்?), என்னால் - என்னால் அதன் மேல் இருக்க முடிந்தது - இருக்க முடிந்தது. எனவே பிறகு, நான் அதைப் பெற்றேன்... நான் கொண்டிருக்க முடியவில்லை... பரிசுத்தவான் களின் பணத்தை எடுத்து, அதைப் போன்ற காரியங்களில் செலவிடுவதில் நம்பிக்கையில்லை. எனவே பிறகு, நான் - நான் கொஞ்சம் ஹாம்பர்கர்களை எனக்கு வாங்கினேன் - வாங்கி விட்டு, ரயில் வண்டி நிற்கும் இடம் நோக்கி இந்தவிதமாக அவசர அவசரமாகப் போய்க் கொண்டிருந்தேன். யாரோ ஒருவர், 'ஹலோ, அங்கே யிருக்கும் பார்சன் பிரன்ஹாம் அவர்களே' என்று கூறுவதை நான் கேட்டேன். நான் சுற்றும் முற்றும் பார்த்தேன், ஒரு சிறு சிவப்பு நிற தொப்பியணிந்தவனைப் பார்த்தேன். நான், 'ஹலோ' என்றேன். அவன், 'ஒரு நிமிடம் காத்திருங்கள்' என்றான். அவன் அங்கே வந்து, 'நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?' என்றான். 'நான் - நான் நலமாக இருக்கிறேன். எனக்கு உன்னைத் தெரியும் என்று நான் நம்பவில்லை' என்று நான் கூறினேன். அவன், 'ஓ, ஆமாம், உங்களுக்கு என்னைத் தெரியும்' என்றான். நான், 'நான் ஒருவேளை உன்னை மறந்திருக்கலாம்' என்றேன். 'நீங்கள் ஒரு காலை வேளையில் தெருவில் வந்து, பால்வினை நோயினால் படுத்த படுக்கையாய் மரித்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன் இருந்த ஒரு வீட்டிற்கு வந்தது ஞாபகம் உள்ளதா?' என்று கேட்டான். நான், 'நீ அவனாயிருக்காது...' என்றேன். 'ஆம், ஐயா, நான் அவன் தான்' என்றான். அவன், 'நான் சுகத்தை மாத்திரம் பெற்றுக் கொள்ளவில்லை, பார்சன் பிரன்ஹாம் அவர்களே, நான் இப்பொழுது இரட்சிக்கப்படவும் செய்திருக்கிறேன்' என்றான். 73ஓ, இன்னும் பாதி சொல்லவேயில்லை. இரக்கமுள்ள வரும், கிருபையுள்ளவரும், விலையேறப்பெற்றவருமாகிய பரலோகப் பிதா நம்மை சரிசெய்யும்படியாக எச்சரிக்கும்படி இன்னும் கூடுதலாக என்ன செய்யக்கூடும்? அவர் இன்னும் என்னதான் செய்யக் கூடும்? நீங்கள் அவரை நேசிக்கி றீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமா வோடும், முழு மனதோடும் நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? நாம் சிறிது நேரம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துகையில் இப்பொழுது இங்கே உள்ளே பாவிகள் எத்தனை பேர் இருக்கிறீர்கள்? உங்களுடைய கரத்தை உயர்த்தி, 'தேவனே, இன்றிரவு என்னுடைய விளக்கை ஏற்றும், கர்த்தாவே. என்னுடைய சிறிய மெழுகுவர்த்தியில் பற்ற வையும், நான் மரிக்கும் வரையில் கிறிஸ்துவுக்காக நான் எரியட்டும். நான் இப்பொழுது கர்த்தருடைய புறக்கணிக்கணிக்கப்பட்ட சிலருடன் என்னுடைய வழியை எடுத்துக் கொள்கிறேன்' என்று கூறுங்கள். நான் உங்களுடைய கரத்தைப் பார்க்கட்டும். பாவியான நண்பரே, நீ உன்னுடைய கரத்தை உயர்த்தி, கிறிஸ்துவை உன்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்வாயா? பால்கனியிலோ அல்லது அடிப்புறமுள்ள தரை தளத்தில் உள்ளவர்கள், உங்களுடைய கரத்தை சற்று உயர்த்துவீர்களா? நாங்கள் ஒவ்வொரு இரவும் முழுமையாகத் தேடிப் பார்க்கிறோம். அநேகமாக இன்றிரவு வேறு ஒன்றோ இரண்டோ பேர் இங்கே உள்ளே இருந்திருக்கலாம், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள், நீங்கள் அதைச் செய்வீர்களா? எங்காவது, பாவிகள் இருக்கிறார்களா? 'நான் - நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்' என்று கூறுங்கள். இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், நீங்கள் பரிசுத்த ஆவியைக் கொண்டிருப்பீர்கள் அல்லது மிருகத்தின் முத்திரையை ஏற்றுக்கொண்டிருப்பீர்கள். அங்கே வெறும் இரண்டு வகையினரே உள்ளனர். நாம் நாளை இரவு அதற்கு வருவோம். நான் அப்படியே அதை ஒருவிதமாக விட்டு விட்டு, நாளை இரவில் அதை முடித்து வைப்பதற்காக ஒரு பெரிய அஸ்திபாரத்தை அமைத்தேன். 74நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தி, 'சகோதரன் பிரன்ஹாமே, நான் அதை விரும்புகிறேன்' என்று கூறுங்கள். வாலிபனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக; கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக; அது மிகவும் நல்லது. மகனே, தேவன் உன்னுடைய இருதயத்தின் வாஞ்சையை உனக்கு அருளுகிறார். வேறு யாராவது, அப்படியே எழுந்து, 'நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்' என்று கூறுங்கள். சீமாட்டியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது மிகவும் அருமையானது, அது ஒரு மிகவும் வீரமான காரியமாகும். எழுந்து, 'நான் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வேன்; நான் அதைப் பெற்றுக் கொள்வேன்' என்று கூறுகிற வேறு யாராவது. பால்கனியில்? பின்னால் வழியில் மூலையில், ஆமாம். ஐயா, என்னுடைய அன்பான நண்பரே, அங்கே உயர்த்தப்பட்டிருக்கும் உம்முடைய கரத்தை நான் காண்கிறேன். இப்பொழுது, 'நான்...' என்று கூறுகிற வேறு யாராவது. இப்பொழுது நாம் பார்ப்போம், 'நான் கிறிஸ்துவை என்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்வேன். நான் அவரை நோக்கி என் கரத்தை உயர்த்தி கூறுவேன், நான்...' என்று கூறுகிற வேறு யாராவது. இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தும் போது, அது அதை தீர்த்து வைக்கிறது என்று நீங்கள் கருதுங்கள். அது என்றென்றுமாக தீர்க்கப்பட்டு விட்டது. தேவன் உங்களை சரியாக உங்களுடைய வார்த்தையில் எடுத்துக்கொள்ளுகிறார். நீங்கள் வெறுமனே அவ்வாறு கருதி உங்களுடைய கரத்தை உயர்த்தி, என்ன சம்பவிக்கிறது என்று பாருங்கள். சரி, மேலே பால்கனியில் வேறு ஒருவர், தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஆம், அது நல்லது. சற்று உங்கள் கரத்தை உயர்த்துங்கள்; என்னவொரு உணர்ச்சி உங்கள் மேலாக வருகிறது என்பதை சற்று பாருங்கள். நீங்கள் ஒரு பாவியாக இருந்தால், உங்கள் கரத்தை உயர்த்துங்கள். ஆம், அந்த சீமாட்டி, இங்கே முன்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் வாலிப சீமாட்டியே, அன்பான சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வேறு (யாராவது) ஒருவர்? நான் காத்துக் கொண்டிருப்பேன். கிறிஸ்து இருக்கிறார். அங்கே மேலே உள்ள உன்னை தேவன் ஆசீர்வதிப்பாராக. வேறு ஒருவர் உண்டா? அங்கே பின்னாலுள்ள வாலிப நபரே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வாலிப மகனே, தேவன் உன்னோடு கூட இருப்பாராக. எனவே தேவன் நிச்சயமாக அதைச் செய்வார். 'நான் கிறிஸ்துவை என்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்.' மிகவும் பின்னால், தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வேறு ஒருவர் உண்டா? 'நான் கிறிஸ்துவை என்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்வேன். நான் இப்பொழுதே, நான் உட்கார்ந்து கொண்டிருக்கும் இதே இடத்திலேயே, எனக்கு கிறிஸ்து தேவை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். வேறுபிரித்தலின் நேரம் ஒன்று வருகிறது என்பதை நான் எப்போதுமே விசுவாசித்திருக்கிறேன் என்பதை அறிவேன், தேவன் உண்மையான சபையை வேறு பிரிப்பார்.' அவர் அவ்வாறு செய்வார்; அவர் அதை வீட்டிற்கு எடுத்துக் கொள்வார். அவர் சரியாக இப்பொழுதே அதை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். இயேசு கிறிஸ்துவுக்கு உங்களுடைய இருதயத்தைக் கொடுப்பதன் மூலம், நீங்கள் வந்து அவருடன் சேர்ந்து கொள்வீர்களா? நீங்கள் எங்கிருந்தாலும், சபைக்கு தொடர்ந்து வாருங்கள், அப்படியே தொடர்ந்து வாருங்கள், ஆனால் அவருக்கு உங்களுடைய இருதயத்தைக் கொடுத்து விடுங்கள். உயர்த்துங்கள்... 75இப்பொழுது, ஸ்தாபனங்கள், அவைகள் - ஒன்று சற்று ஏறக்குறைய மற்றவைகளைப் போலவே உள்ளது. அது - அது எங்கிருந்தாலும், நீங்கள் எங்கு ஐக்கியம் கொண்டாலும், நீங்கள் நேசிக்கிற ஒரு கூட்டம் ஜனங்கள், அது சரியே. நீங்கள் நான்கு சதுரக்காரர்களை சேர்ந்தவர்களாக இருந்தால், அசெம்பிளிஸிற்கு மாறி விட வேண்டாம். நீங்கள் அசெம்பிளிûஸ சேர்ந்தவர்களாக இருந்தால், நான்கு சதுரக்காரர்களுடன் மாறி விட வேண்டாம். நீங்கள் இருக்கும் இடத்தில் அப்படியே தரித்திருந்து, நீங்கள் எங்கிருந்தாலும் கர்த்தரை நேசியுங்கள். நீங்கள் - நீங்கள் கிறிஸ்துவின் சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறீர்கள். எனவே நீங்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அது உங்களை இரட்சிப்பதில்லை, அல்லது அதனுடன் செய்ய எதுவுமில்லை. அது வெறுமனே ஜனங்கள் வருகிற ஒரு இடமாக உள்ளது. மிக உண்மையான சகோதரர்கள் அதை அறிவார்கள்; நாம் அனைவரும் அதை அறிவோம். நாம் அதை அறிவோம். நிச்சயமாக, நாம் அறிந்திருக்கிறோம். 76நாம் ஜெபிப்பதற்கு முன்பாக தங்களுடைய கரத்தை வேறு (யாராவது) ஒருவர் உயர்த்துவீர்களா? தேனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. உங்களுடைய கரத்தை உயர்த்தி,'நான் - நான் சிந்தப்பட்ட இரத்தத்தின் அடிப்படையிலும், இயேசு எனக்காக என்ன செய்தார் என்பதின் அடிப்படையின் பேரிலும் இருக்கிறேன்... சகோதரன் பிரன்ஹாமே, நீர் இன்றிரவு சொன்னதாக நான் கேட்டவைகள் - நீர் தவறான எதையும் எங்களிடம் கூறினதாக நான் நம்பவில்லை. நீர் தேவனுடைய ஊழியக்காரன் என்று நான் நிச்சயமாகவே விசுவாசிக்கிறேன். உங்களுடைய விசுவாசம் கேள்வியினால் வருகிறது, தேவனுடைய வார்த்தையைக் கேட்பதினால் வருகிறது என்ற அந்த செய்தியைப் பொறுத்து...' என்று கூறுகிற வேறு (யாராவது) ஒருவர் இருக்கிறீர்களா? நாம் அதற்குள் வந்து விட்டோம், நாளை இரவு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்பதையும், மிருகத்தின் முத்திரை என்பதையும் முடிக்கும் போது, அது மிகவும் இனிமையாக இருக்கும். நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தி, 'சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தத்தின் அடிப்படையின் பேரில், நான் அவரை நோக்கி என் கரத்தை உயர்த்தி, 'நீர் இப்பொழுது என்னுடைய இரட்சகராக இருக்க வேண்டு மென்று நான் விரும்புகிறேன்' என்று கூறுகிறேன்' என்று சொல்லுவீர்களா? நாம் ஜெபிப்பதற்கு முன்பாக இன்னும் யாராவது உண்டா? அங்கே பின்னாலிருக்கும், வாலிப சீமாட்டியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது மிகவும் அருமையானது. என் சகோதரியே, தேவன் உன்னுடன் இருப்பாராக. அங்கே வேறு (யாராவது) உண்டா? சரியாக இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும், என் சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது மிகவும் அருûமானது. அங்கே வேறு (யாராவது) உண்டா? வழியில் மிகவும் பின்னால் இருக்கும் என் சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது அப்படியே மரணத் திற்கும் ஜீவனுக்குமிடையே வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. 77இப்பொழுது, உங்களுடைய கரங்களை உயர்த்தின வர்களே, பூமியில் இன்றிரவு தான் உங்களுடைய கடைசி இரவாக இருந்தால் என்னவாக இருக்கும்? இப்போதைய நேரத்திற்கும் பகல் வெளிச்சத்திற்கும் இடைப்பட்ட ஏதோ வொரு நேரத்தில், நீங்கள் உங்களுடைய தூக்கத்தை விட்டு விழிக்க நேர்ந்து, உங்களுடைய இருதயம் நின்று போனால். உங்களுடைய - உங்களுடைய நரம்புகள் அமைதியாகி விடுகிறது, உங்களுடைய கரமானது குளிர்ந்து போய் விடுகிறது. நீங்கள் மரித்துக் கொண்டிருக்கையில், நீங்கள் ஒரு - ஒரு தலையணையை நெருக்கிக் கொண்டிருக்கிறீர்கள். மருத்துவர் வாசலை விட்டு விலகி நடந்து சென்று, 'இல்லை, இது ஒரு மாரடைப்பு. அவர்கள் போய் விட்டார்கள்' என்று கூறுகிறார். பாருங்கள்? எதுவுமேயில்லை... அவர் அதைக் கூறுவதை நீங்கள் கேட்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தினதை நீங்கள் அறியும் போது, அது அற்புதமாக இருக்காதா? ஓ, எவ்வளவு இனிமையானது. நீங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருப்பீர்கள். நீங்கள் வீட்டிற்குப் போய்க் கொண்டிருக்கும் பொழுது, ஒரு வாகன விபத்து நடந்தால் என்னவாக இருக்கும். நீங்கள் இரத்தம் வழிந்து கொண்டிருக்க, சாலையின் ஓரத்தில் கிடந்து, ஆம்புலன்ஸ் வருகிற சத்தத்தைக் கேட்கிறீர்கள், ஆனால் அது மிகவும் தாமதமாக வந்திருப்பதை அறிகிறீர்கள். உங்கள் கரத்தை கிறிஸ்துவை நோக்கி உயர்த்தினதை நீங்கள் அறிகிறீர்கள். நீங்கள், 'இது இருக்கட்டும், நான் எப்பொழுதாவது ஒரு சமயத்தில் எப்படியாயினும் போயாக வேண்டும். எனவே நான் இப்பொழுதே ஆயத்தமாயிருக் கிறேன், இப்பொழுதுதான் போவதற்கான வேளை' என்று கூறுகிறீர்கள். உங்களுடைய கரத்தை சற்று உயர்த்துங்கள். அந்த முழு முதலான தீர்மானத்தை இப்பொழுதே செய்யுங்கள், என்னுடைய சகோதரனே சகோதரியே, செய்வீர்களா? உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். 78நீங்கள், 'சகோதரன் பிரன்ஹாமே, நீர் ஏன் ஜனங்களிடம் இவ்விதமாக கெஞ்சுகிறீர்கள்? இது உம்முடைய கூடாரமல்ல; இது உம்முடைய சபையல்ல' என்று கூறுகிறீர்கள். நான் அறிவேன். என்னுடைய சகோதரனாகிய சகோதரன் பன்டேன் அவர்கள் இங்கே மேய்ப்பராயிருக் கிறார். இந்த சபையானது அசெம்பிளிஸ் ஆஃப் காட்-ஐ சேர்ந்திருக்கிறது. இங்கிருக்கும் இக்கட்டிடமானது... அசெம்பிளிஸ் ஆஃப் காட்- ஆனது உலகத்தைச் சுற்றிலுமுள்ள பெந்தெகோஸ்தே மண்டலங்களில் என்னை பெரிய அளவில் ஆதரிக்கிற ஒன்றாக உள்ளது. அது... ஆனால் இன்னும்... அவையெல்லாம், நான் எவ்வளவாக அவைகளை நேசித்தாலும், அது காரணமல்ல. நான் உங்களை நேசிக்கிறேன். ஒரு தனிப்பட்ட நபராக உங்களை நான் நேசிக்கிறேன். நீங்கள் இழக்கப்பட்டு போவதை நான் விரும்பவில்லை. எனக்கு ஒரு தரிசனம் உண்டாயிருந்தது. அதை உங்களிடம் கூறுவதற்கு எனக்கு நேரமிருக்கும் என்று நம்புகிறேன், ஒரு சில இரவுகளுக்கு முன்பு, என்ன சம்பவித்தது என்பதை. நான் மகிமையைக் கண்டேன், ஜனங்களைக் கண்டேன், அங்கே ஒரு ஸ்திரீ ஓடி வந்து என்னைச் சுற்றிலும் தன்னுடைய கரத்தைப் போடுவதைக் கண்டேன். நான் எப்படியும் ஸ்திரீகளைக் குறித்து கொஞ்சம் கடினமாக இருந்து வருகிறேன், நான் எப்பொழுதும் கண்டதிலேயே அந்த ஸ்திரீ மிகவும் அழகாக இருப்பதை கண்டேன். அவள் என்னை தன்னுடைய அன்பான சகோதரனாக அழைத்தாள். நான், 'அவள் ஏன் அதைச் செய்கிறாள்?' என்றேன். 'நீ அவளை கிறிஸ்துவிடம் வழிநடத்தின போது, அவள் 90 வயதைக் கடந்திருந்தாள்' என்றார். நான், 'ஓ, தேவனே, நான் மாத்திரம் திரும்பிப் போகக் கூடுமானால், நான் சம்மதிக்கப் பண்ணுவேன், மன்றாடிக் கேட்டுக்கொள்வேன், கெஞ்சிக் கேட்டுக் கொள்வேன், எல்லாவற்றையும் செய்வேன்' என்று கூறினேன். 79நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தி, 'நான் கிறிஸ்துவை என்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன்' என்று கூறமாட்டீர்களா? நிச்சயமாகவே, நான் தேவனுக்காக செய்து கொண்டிருப்பதை நான் செய்ய அவர் அனுமதித்தால், அவரை பெற்றுக் கொள்வது எப்படி - எப்படி என்ற ஏதோ ஒரு கருத்தை நான் நிச்சயமாக அறிந்து கொள்வேன். வெதுவெதுப்பான சபை அங்கத்தினர் ஒருவர் இங்கே உண்டா? இப்பொழுது, உங்களுடைய தலையைத் தாழ்த்தியிருக்கிற ஒவ்வொருவரிடமும். வெதுவெதுப்பான ஒரு சபை அங்கத்தினன், நீ வெறுமனே கிறிஸ்துவை அறிந்துள்ள தாகப் பாசாங்கு செய்திருக்கிறாய், ஆனால் உண்மையாகவே உன்னுடைய இருதயத்தின் கீழே நீ அவரை அறிந்திருக்க வில்லை, ஆனால் நீ அவரை அறிந்து கொள்ள விரும்புகி றாய்; உன்னுடைய கரத்தை உயர்த்து, சபை அங்கத்தினனே. ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராவது? சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராவது ஒருவர், 'நான் கிறிஸ்துவை அறிய விரும்புகிறேன். நான் - நான் சபையை சேர்ந்துள்ளேன், நான் -நான் அதற்கு விரோதமாக தீங்கான எதையும் கூற முடியாது. வெளியே தெருவில் எதுவுமில்லாமல் இருப்பதைக் காட்டிலும் நீங்கள் சபையைச் சேர்ந்து கொள்வதில் நான் சற்றே உறுதியாக உள்ளேன்' என்று கூறுகிற ஒரு சபை அங்கத்தினர். நீங்கள் தொடர்ந்து சபைக்குப் போங்கள், ஆனால் நீங்கள் தயவுசெய்து வந்து தேவனுடைய முத்திரையை பெற்றுக்கொள்ள நான் விரும்புகிறேன். ஏனெனில் நீங்கள் அதைப் பெற்றுக்கொண்டிருக்காவிட்டால், நல்லது, அங்கே இரண்டு வகையான முத்திரை மட்டுமே உள்ளதாக வேதாகமம் கூறுகிறது. நாளை இரவு மட்டுமாய் காத்திருங்கள், நீங்கள் கண்டு கொள்வீர்கள். இரண்டு வகையான (ஜனங்கள்), ஒன்று மிருகத்தின் முத்திரையை கொண்டிருப்பீர்கள், மற்றொன்று தேவனுடைய முத்திரையைக் கொண்டிருப்பீர்கள். ஏதேன் தோட்டத்திலிருந்த காயீனையும் சேத்தையும் போல, அந்த காரியத்திற்கு வருகிறீர்கள். நீங்கள் -நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துவீர்களா? நாம் ஜெபிப்பதற்கு முன்பாக, இப்பொழுது இன்னும் ஒருவர். சீமாட்டியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. 80எங்களுடைய பரலோகப் பிதாவே, இன்றிரவு அநேக கரங்கள் மேலே உயர்த்தப்பட்டுள்ளதை நான் கண்டேன். அவர்களில் அநேகர் பாவிகள், அவர்கள் பாவ மன்னிப்பை விரும்புகின்றனர். வெறும் சபை அங்கத்தினர்களாக இருந்து, இன்னும் உம்மை அறியாமலும், இராஜ்ஜியத்திற்குள் முத்திரையிடப்படாமலும் இருக்கிற, இரண்டு பேர் தங்களுடைய கரங்களை உயர்த்தினர். பிதாவே, நான் - நான் இந்த வேதவாக்கியங்களைக் கொண்டு வந்து, அவர்களை உமக்கு முன்பாக பற்றிக்கொண்டிருக்கிறேன். நீர், 'என் வசனத்தைக் கேட்டு (கர்த்தாவே, என் அறிவுக்கு எட்டின வரையில், நான் அதைப் பிரசங்கித்திருக்கிறேன்.) என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு' என்று உம்முடைய வார்த்தையில் கூறியிருக்கிறீர். இப்பொழுதும், பிதாவே, நீர் அதைச் சொன்னீர். அது சரியாக நீர் சொன்னது தான். நான் அதைத் திரும்ப உம்முடைய நினைவுக்குக் கொண்டு வருகிறேன். இந்த ஜனங்கள் அந்த வார்த்தையைக் கேட்டு, உம்மை அனுப்பினவரை விசுவாசித்திருக்கிறார்கள். இப்பொழுது, நீர், 'அவர்கள் இப்பொழுது (நிகழ்காலம், கொண்டிருக்கிறார்கள், நிகழ்காலம்) நித்திய ஜீவனைக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் நியாயத்தீர்ப்புக்குள் வருவதில்லை; அவர்கள் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறார்கள்' என்று சொல்லி யிருக்கிறீர்கள். அவர்கள் எப்பொழுது அதைச் செய்தனர்? அவர்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தி, தாங்கள் விசுவாசிப்பதாகச் சொன்னபோதே. இப்பொழுதும், கர்த்தாவே, நீர் அதைச் சொன்னீர், நான் இந்த ஆத்துமாக்களை உரிமைகோருகிறேன். சாத்தானே, நீ இனிமேலும் அவர்களைப் பிடித்து வைத்திருக்க முடியாது. அவர்கள் இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறார்கள். நான் அதை உனக்கு முன்பாகக் கொண்டு வருகிறேன். நீ அவர்களுடைய ஜீவனை விட்டு உன்னுடைய கரத்தை எடுத்துப்போட்டாக வேண்டும்; அவர்கள் இப்பொழுது தேவனுக்குரியவர்கள். நான் அவருக்காக அவர்களை உரிமை கோருகிறேன். கல்வாரியில் கிறிஸ்துவினுடைய அன்பின் வெற்றிச் சின்னங்களாக அவர்களை உரிமை கோருகிறேன். நான் - நான் ஒரு சொற்போரில் உனக்குச் சவால் விடுகிறேன்; உனக்கு சட்டப்படியான எந்த வல்லமையும் கிடையாது. உனக்கு அவர்கள் மேல் எந்த வல்லமையும் கிடையாது; நீ முதற்கண் அதைக் கொண்டிருக்கவில்லை, நீ அவர்களிடம் பொய் மாத்திரமே சொல்லிக் கொண்டிருந்தாய். நீ பொய் மாத்திரமே சொல்லிக் கொண்டிருந்தாய். நீ கொண்டிருந்த எல்லாவற் றையும் கிறிஸ்து கல்வாரியில் உன்னிடமிருந்து பறித்து விட்டார்; நீ எப்பொழுதாவது கொண்டிருந்த ஒவ்வொரு வல்லமையையும் அவர் பறித்து விட்டார். நீ ஒரு வஞ்சிக்கிறவனேயன்றி வேறல்ல; உன்னுடைய வீம்பு பேச்சிற்கு நாங்கள் அழைப்பாணை விடுத்திருக்கிறோம். இப்பொழுது இவர்கள் தேவனுடைய பிள்ளைகள். 81மேலும் பிதாவே, நீர், 'என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை' என்று சொல்லியிருக்கிறீர். நீர் அதை வாக்குத்தத்தம் பண்ணினீர். அது உண்மையென்று நான் அறிவேன். நீர் அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பதாகவும், அவர்களை கடைசி நாளில் எழுப்புவதாகவும் சொல்லியிருக்கிறீர். அப்படியானால், அவர்கள் இன்றிரவு இக்கட்டிடத்தில் உட்கார்ந்திருப்பதைப் போலவே அவர்கள் அப்படியே உயிர்த்தெழுதலில் வருவதும் நிச்சயமாயிருக்கிறது. இப்பொழுதும், பிதாவே, அப்படியே இன்னும் ஒரு காரியத்தை கேட்கிறேன்: நீர் அவர்களை பரிசுத்த ஆவியால் நிறைப்பீரா. அதை அருளும், கர்த்தாவே. ஓ, அவர்களைப் பரிசுத்த ஆவியினால் நிறைத்தருளும். கர்த்தாவே, அவர்களுடைய ஆத்துமாவை நோவினின்று விடுபட செய்ய வேண்டாம் - வேண்டாம். முழு இரவும் அவர்களுடைய தலையணைகள் கடினமானதாக இருப்பதாக. அவர்கள் அங்கே வெளியே தங்களுடைய முழங்கால்களில் நின்று, 'தேவனே, என்னை பரிசுத்த ஆவியினால் நிறைத்தருளும்' என்று கூறும் அளவுக்கு தங்களுடைய படுக்கை பெரிய கற்களைப் போன்று இருப்பதை அவர்கள் உணர்வார்களாக. அவர்கள் வேதாகமத்தை எடுத்து அதை வாசிப்பார்களாக. நீர் அவர்களிடம் வந்து வார்த்தையை அவர்களுக்கு விளக்குவீராக. அவர்கள் இப்பொழுது மன அமைதியில்லாமலிருப்பார்களாக. அவர்கள் உம்முடைய பிள்ளைகள், வேளை தாமதமாகிக் கொண்டிருக்கிறது. அவர்கள் இயேசு கிறிஸ்துவின் மூலமாக வரும் எல்லா புரிந்து கொள்ளுதலைக் கொடுக்கும் சமாதானத்தை கண்டடைய வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். 82பிதாவே, தங்களுடைய கரத்தை உயர்த்தின இந்த சபை அங்கத்தினர்களுக்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன். அவர்கள் - அவர்கள் - அவர்கள் மனதார ஒத்துக்கொண்டு ஒரு சபைக்குள் சென்றிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் வெறுமனே ஒரு சபை அங்கத்தினனாய் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்கிறார்கள். அவர்கள் தவறான விதமான ஒரு ஸ்திரீயிடத்தில் முத்திரையிடப் பட்டிருப்பார்கள். பிதாவே, உமக்குச் சித்தமானால், நாங்கள் நாளை இரவு அதைப் பெற்றுக்கொண்டு, அவர்கள் எவ்வாறு தவறான ஒரு மணவாட்டியாக முத்திரையிடப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவர்களுக்குக் காண்பிப்போம். உண்மையான மணவாட்டி தங்களுடைய தீவட்டியில் (lamp) எண்ணெயைக் கொண்டிருக்கிறாள். பிதாவே, நீர் இன்றிரவு அவர்களுடைய விளக்கில் எண்ணெயை அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். அந்த சபை அங்கத்தினர்கள் இன்றிரவு பரிசுத்த ஆவியினால் நிறையப் படுவார்களாக. இதை அருளும், கர்த்தாவே. நான் இதை ஜெபிக்கிறேன், தீமையானதாய் இருக்க வேண்டும் என்பதற் கல்ல, ஆனால் அவர்களுடைய சகோதரனாயிருக்க வேண் டும் என்பதற்காகத் தான், பரலோகத்தை இழப்பதென்பது எல்லாவற்றையும் இழப்பதென்பதை அறிந்து கொள்ளும்படி நான் இதை ஜெபிக்கிறேன். நித்தியம் என்றால் என்ன என்பதைப் (பார்க்கும் போது), இந்தக் கொஞ்ச ஜீவிய காலம் என்னவாக இருக்கிறது? அது ஒருபோதும் முடிந்து போகாத ஒன்றிற்குள் - ஒன்றிற்குள் அப்படியே கரைந்து போகிறது, ஏனெனில் அது ஒருபோதும் தொடங்கவேயில்லை. மேலும் பிதாவே, உம்மோடு இருக்கும் அந்த நித்திய மகிமை யின் மண்டலங்களுக்குள் அவர்களை இந்தக் கடைசி நாட்களில் உயர்த்த வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இதை அருளும்; அவர்கள் உம்முடையவர்களாய் இருக்கிறார் கள். நான் ஜெபித்து அவர்களை கிறிஸ்துவின் நாமத்தில் உம்மிடம் அளிக்கிறேன். 83இப்பொழுது, நம்முடைய தலைகள் வணங்கியிருக் கையில், தங்களுடைய கரத்தை உயர்த்தியிருக்கும் ஒவ்வொரு வரும், அப்படியே தங்கள் காலூன்றி நிற்கும்படிக்கு அவர்களைக் கேட்டுக்கொள்ளப் போகிறேன். நீங்கள் இங்கே மேலே வரவேண்டும் என்று நான் கேட்கப் போவதில்லை; நமக்கு எந்த இடமுமில்லை. ஆனால் உங்களுடைய கரங்களை உயர்த்தியிருக்கிற எல்லாரும் தேவனோடு உத்தமமாக இருக்கிறீர்கள், சற்று நேரம் அப்படியே உங்கள் கால்களில் எழுந்து நில்லுங்கள். தங்களுடைய கரத்தை உயர்த்தின ஒவ்வொரு நபரும் உங்கள் காலூன்றி நில்லுங்கள். எல்லா இடங்களிலும், பால்கனிகளிலும், எங்கும் சற்று எழுந்து நில்லுங்கள். இயேசு, 'மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவனை நான் என் பிதாவுக்கு முன்பாகவும், பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும் அறிக்கை பண்ணுவேன்' என்று கூறியிருக்கிறார். சபை அங்கத்தினர்களாகிய நீங்களும், குறிப்பாக கிறிஸ்தவர்களாகிய நீங்களும் சுற்றிலும் நோக்கி, அவர்கள் யாரென்று பார்க்க விரும்புகிறேன். நீங்கள் அவர்களுடைய கரத்தைப் பிடித்து, கைகுலுக்கி, அங்கே நின்றுகொண்டு, 'தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. யாத்திரிகரே, தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் வரவேற்கிறேன்' என்று கூறும்படி நான் விரும்புகிறேன். அதுதான் அது; யாரோ ஒருவரிடம் சுற்றிலும் திரும்பி, அவர்களுடன் கரங்களைக் குலுக்கி, 'தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் வரவேற்கிறேன்' என்று கூறிக்கொண்டிருங்கள். அது மிகவும் அருமையானது. அது மிகவும் அருமையானது. அது நல்லது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உங்களோடு இருப்பாராக. அது மிகவும் அருமையானது. நல்லது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, நீங்கள் உட்காரலாம். அது மிகவும், மிகவும் அருமையானது. 84இப்பொழுது, நீங்கள் இப்பொழுது ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்ளப் போகிறேன். ஏதோவொரு மேய்ப்பரைக் கண்டுகொள்ளும்படி நிச்சய முடையவர்களாய் இருங்கள்; நீங்கள் ஒருபோதும் கிறிஸ்தவ ஞானஸ்நானம் எடுத்திருக்கவில்லையென்றால், ஏதாவது ஒரு மேய்ப்பரை, உங்களுக்கு விருப்பமான சபையைக் கண்டு பிடித்து, தண்ணீருக்குள் ஞானஸ்நானம் எடுத்து, அந்த சபையின் ஐக்கியத்திற்குள் (இருங்கள்). அப்படியானால் நீங்கள் அதைச் செய்யும் போது, அதற்குப் பிறகு நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிறையப்படும் வரை, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைத் தேடுங்கள், மேலும்... துன்பங்கள் எல்லாம் கடந்து விடும்போது ஜீவியத்தின் நீண்டகால களைத்துப்போன நாட்களின் முடிவு வரும்போது ஆற்றினருகே அந்தப் பிரகாசமான காலையில் நான் உங்களைச் சந்திப்பேன். வாசல்கள் விரிவாக திறக்கப்படும்போது, நான் நுழைவாயிலில் நின்று கொண்டிருப்பேன். 'நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்' என்ற வார்த்தையுடன் அந்தக் காலையில் நான் உங்களைச் சந்திப்பேன், பழைய உறவுகள் புதுப்பிக்கப்பட்ட எடுத்துக்கொள்ளப் படுதலோடு நாம் ஆற்றினருகே அமர்ந்திருப்போம், நான் கொண்டிருக்கும் புன்னகையினால் அக்காலை என்னை அறிந்து கொள்வீர்கள் நான்கு சதுரமாய் கட்டப்பட்ட அந்தப் பட்டணத்தில், அந்தக் காலை நான் உங்களை சந்திப்பேன். 85பிதாவாகிய தேவனே, அவர்கள் இப்பொழுது உம்முடையவர்களாகவும், தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் முத்திரையிடப்பட்டவர்களாகவும், பரிசுத்த ஆவியானவர் அவர்களோடு தொடர்பு கொண்டவர்களாகவும் இருக்கிறார் கள். துன்பங்கள் எல்லாம் கடந்து போகும்போது, அதோ அங்கேயுள்ள அந்த ஒளிமயமானதும் பிரகாசமானதுமான (ஆற்றின்) கரையில் அக்காலையில் அவர்கள் - நான் அவர்களைச் சந்திக்க வேண்டுமென்று இப்பொழுது நான் ஜெபிக்கிறேன். பிதாவே, அது அற்புதமானதாக இருக்காதா? சந்தோஷ மணிகள் ஒலிக்க, இருதயங்கள் யாவும் (அவ்)வெளிச்சத்தில் பாடிக்கொண்டிருக்க, அது ஒரு மகிமையான நேரமாக இருக்கும். அவர்கள் உம்முடையவர் களாக இருக்கிறார்கள். இப்பொழுது, அந்தக் காலையில் நாங்கள் அந்த ஆற்றண்டை சந்திக்கும் வரையில் உம்முடைய கிருபையால் அவர்களை நீர் காத்துக்கொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆமென். 86இப்பொழுது, நீங்கள் நன்றாக உணரவில்லையா? அது உங்களை மிகவும் நன்றாக உணரச் செய்யவில்லையா?'சகோதரன் பிரன்ஹாமே...' என்று கூறுங்கள். மனந்திரும்பிய வாலிப ஜனங்கள் இப்பொழுது அப்படியே இராஜ்ஜியத்திற் குள் வருகிறார்கள், பிதா ஏதோவொரு காரியத்தைச் செய்வாரா என்று நான் அவரைக் கேட்கப் போகிறேன். இப்பொழுது அவரிடம் கேட்பதற்கு எனக்கு உரிமை உண்டு. பாவிகள் வந்தார்கள். நாம் அவரிடம் தயவைக் கண்டுகொள்கிறோம் என்று நம்புகிறேன், நீங்கள் அவ்வாறு நம்பவில்லையா? எத்தனை வியாதியஸ்தர்கள் அங்கே வெளியே இருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள், அப்படியே வியாதிப்பட்டும், தேவையுள்ளவர்களுமாய் இருப்பவர்கள். சரி. நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம் என்பதை உங்களுக்குக் காண்பிப்பதற்காக நான் என்னுடைய முதுகைத் திருப்பப் போகிறேன். நம்முடைய பாடங்களை எத்தனை பேர் ஞாபகம் வைத்துள்ளீர்கள்? எவ்வாறு கர்த்தருடைய தூதன்... தேவன் இறங்கி வந்து மானிட சரீரத்தில் வாசம் செய்து, இறைச்சியைப் புசித்து, வெறுமனே ஒரு சாதாரண மனிதனாக, அதைப் போன்று பேசிக்கொண்டிருந்தார். இன்னும் சோதோம் சுட்டெரிக்கப்படுவதற்கு சற்று முன்பாக தேவன் மானிட சரீரத்தில் இருந்தார். மனுஷகுமாரன் வரும்போதும் அதேவிதமான ஒரு அடையாளம் சம்பவிக்கும் என்று இயேசு கூறினார். நாம் அதை விசுவாசிக்கிறோமா? அவர் என்ன செய்தார் என்பதைக் காண்பிக்கும்படியாக நாம் பாடங்களினூடாக எப்படியாகப் போயிருக்கிறோம். 87இப்பொழுது, எனக்குத் தெரிந்த ஒரு நபரும் இங்கில்லை. சரியாக இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்த வாலிபருடன் ஒரு சில வாரங்களுக்கு முன்பு வேட்டையாடிக் கொண்டிருந்தேன் என்று நம்புகிறேன். நீங்கள் என்னுடைய நல்ல நண்பருக்கு ஏதோவொரு உறவுமுறையா ராயில்லையா... இல்லையா... நீங்கள் சகோதரன் நார்மனின் மைத்துனர்; அது சரியென்று நான் நம்புகிறேன், இல்லையா? சரி. அந்த நபர் மாத்திரமே, மேலும் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் சகோதரன் மற்றும் சகோதரி ஸ்மித், சகோதரன் ஜீன், எனக்குத் தெரிந்ததெல்லாம் அத்தனை பேர்கள் தான். நான் திரும்பி (நிற்கப்) போகிறேன் மேலும் - ஆம், சகோதரி உப்ஷா, உங்களுடைய இருதயம் ஆசீர்வதிக் கப்படுவதாக, சகோதரி உப்ஷா. ஓ, நான் சகோதரன் வில்லி உப்ஷா அவர்களை எவ்வளவாக நேசிக்கிறேன். அந்த இரவில் நடந்த உங்களுடைய கூட்டத்தில், சகோதரன் கோப், நான் அங்கே நோக்கிப் பார்த்தபோது, நான் பேச முயற்சித்துக் கொண்டிருந்தேன், அந்த பாரவண்டியை விட்டு அவர் வெளியே விழுந்து, தன்னுடைய முதுகை காயப்படுத்திக் கொண்ட அவ்விடத்தில் அவரைக் கண்டேன், அவர்களால் அவருக்காக எதுவுமே செய்ய முடியவில்லை என்பதைக் கண்டேன். அவரைக் குறித்து என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் கேள்விப்பட்டதேயில்லை. அங்கே அவர் இருந்தார், வில்லி D. உப்ஷா இருந்தார். நான், 'எப்படி...' என்றேன். எர்ன் அவரிடம் வந்தார். 'அந்த மனிதனைக் குறித்து என்ன?' என்றார். நான், 'அவர் ஒரு சமயம் குடியரசு தலைவர் பதவிக்காக போட்டியிட்டார், அந்தத் தேர்தலையும் கொண்டிருந்தார், விஸ்கிக்கு எதிராகவும், தவறான காரியங்களுக்கு விரோதமாகவும் அவர் எதிர்த்து நின்ற அந்த தேர்தல் (எடுத்துக்) கொள்ளாதிருந்ததால். ஜனநாயக கட்சி (democratic party) அவரைத் தேர்ந்தெடுத்தது. ஆனால் அவர் - அவர் அதில் உறுதியாக இருந்தார். இந்த 66 வருடங்கள் முழுவதும் நீர் இந்த ஊன்றுகோல்களைக் கொண்டும், இந்த சக்கர நாற்காலியிலும் இருந்தீர். ஆனால் இப்பொழுதே தேவன் அதை விட்டு அவரை எடுத்துப் போடுகிறார்' என்றேன். எவ்வளவு இனிமையானது. நான் மறுபக்கத்தை அடையும் போது, அழகாக தோற்றமளிக்கிற ஒரு வாலிபன், 'சகோதரன் பிரன்ஹாம், உமக்கு என்னை ஞாபகம் உள்ளதா? நான் தான் சகோதரன் உப்ஷா' என்று சொல்லியவாறே, இறங்கி வந்து கொண்டிருப்பதைக் காண்பேன். அங்கே அவருடைய சிறிய இனிய இருதயத்தையும் காண்பேன், அவர்களனைவரையும் ஒன்றாகக் காண்பேன். சகோதரி உப்ஷா, அவர் எழுந்து, மேடைக்கு ஓடி வந்து, சுமார் 80 வயதில் தம்முடைய கரங்களால் அவருடைய கால்விரல்களைத் தொட்டதை நீங்கள் கண்ட போது, நீங்கள் அந்த இரவில் எப்படியாக கதறினீர்கள் என்பதை நினைவுகூருகிறேன். என்னே, தேவனால் எப்படியாக மகத்தான காரியங்களைச் செய்ய முடியும். 88சரி. கர்த்தருடைய தூதன் தம்முடைய முதுகைத் திருப்பினவராக உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இப்பொழுது, இப்பொழுது, நீங்கள் அனைவரும் இதைப் புரிந்து கொண்டீர்கள் என்று நம்புகிறேன். நான் கர்த்தருடைய தூதனல்ல; நான் வில்லியம் பிரன்ஹாம். பாருங்கள்? நான் உங்களுடைய சகோதரன். ஆனால் அப்போது அவர் தாமே சிருஷ்டித்த மானிட சரீரத்தில் அவர் வாசம்பண்ணி, அப்படியே மறைந்து போனார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, அது தேவன் என்று விசுவாசிக்கிறீர்களா? அது தேவன் தான் என்று வேதாகமம் கூறுகிறது. அது தேவன் என்று ஆபிரகாம் கூறினான். அது என்னவாக இருந்தது. கடைசி நாட்களில் ஒரு அடையாளமாக... இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், கர்த்தராகிய இயேசுவின் நாட்களில் அவர் வந்த போது, அவர் - தேவன் இயேசுவில் வாசம் செய்தார், நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? அது ஒரு கன்னிகை மூலமாக பிறந்த சரீரமாக இருந்தது, அவர் தாமே தேவனிடமிருந்து வந்த ஒரு வித்தாயிருந்தார். அந்த இரத்த அணுவில், அது நம்முடைய பாவங்களுக்காகக் கல்வாரியில் உடைக்கப்பட்ட போது, அது சபையைப் பரிசுத்தப்படுத்தி, பரிசுத்த ஆவியான வரால் சபையில் வாசம் செய்ய முடிந்து, தேவனுடைய கிரியைகள் தொடர்ந்து நடக்கும்படி செய்ய முடிந்தது. 'நீங்கள் வல்லமையைப் பெற்றுக்கொண்ட பிறகு, நீங்கள் என்னுடைய சாட்சிகளாய் இருக்கிறீர்கள்.' அது சரியே. 89இப்பொழுது, இது - நான் உங்களிடம் சத்தியத்தைக் கூறியிருந்தால், இன்றிரவு பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் பேசட்டும். நான் என்னுடைய முதுகைத் திருப்பிக் கொள்வேன்; நீங்கள் ஜெபியுங்கள். இது அதே பரிசுத்த ஆவியா என்று பாருங்கள். இப்பொழுது, அவர் என்னோடு கிரியை செய்வது போலவே அதேவிதமாக அவர் உங்களோடும் கிரியை செய்ய வேண்டும். இங்கே வெளியேயிருக்கும் ஊழியக்காரர்களும் மற்ற சகோதரர்களு மாகிய உங்களில் சிலர் அங்கே வெளியேயுள்ள கூட்டத்தினரில் இருப்பவர்களுக்காக ஜெபியுங்கள். ஊழியக்காரர்களே, நமக்கு நேரமிருக்கும். பெந்தெகோஸ்தே சபையானது தேவனை விட்டு விலகிச் சென்று விட்டது என்று நான் பிரசங்கித்த அந்த வார்த்தையானது இந்நாளில் சபையில் வெளிப்பட வேண்டும் என்பதற்கே அன்றி, வேறு எந்த நோக்கத்திற்காகவும் நான் இதைச் செய்யவில்லை என்பதை பரமபிதா அறிவார். அது திரும்பவும் வந்தாக வேண்டும். இது லவோதிக்கேயா காலம். மேலும், தேவனே, நான் யாருக்கு விரோதமாகவும், யாருக்காவது தீங்கு ஏற்படும்படி, நீர் என்னிடம் கூறாத எதையாவது கூறியிருந்தால், கர்த்தாவே, நீர் என்னை மன்னியும், ஆனால் நீர் என்னிடம் அதைக் கொடுத்த விதமாகவே நான் அதைச் செய்தேன். எனவே பிதாவே, நீர் அது சரியென்று நிரூபிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நான் உம்மைக் குறித்துப் பேசினேன்; கர்த்தாவே, நான் சத்தியத்தையே கூறினேன் என்று இப்பொழுது பேசும். நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் உம்மிடம் அதை ஒப்புவிக்கிறேன். அநேக நூற்றுக்கணக்கான ஜனங்கள் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர், அவர்களில் அநேகர் வியாதியஸ்தரா யுள்ளனர். நான் அவர்களில் ஒருவரையும் அறியேன், உமக்குத் தெரியும். நீர் உமது வார்த்தையை நிறைவேற்ற வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நீர் இங்கே பூமியில் வந்த போது, மேசியா என்ன செய்வார் என்று ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டவைகள் நிறைவேற வேண்டும் என்று நீர் அதைச் செய்ததாக சொன்னீர். இப்பொழுதும், பிதாவே, அது மீண்டும் நிறைவேறுவதாக, நீர் அதை வாக்குத்தத்தம் பண்ணியுள்ளீர். அதன் காரணமாகத் தான் நீர் அதை அனுமதித்திருக்கிறீர், கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 90இப்பொழுது, அங்கே அநேகர் ஜெபித்துக் கொண்டிருக்கின்றனர். என்னால் கூடுமானால்... அந்த சிறிய ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட முடிந்தது போல, யாராவது ஒருவர்... ஆம், இப்பொழுது சரியாக எனக்கு முன்னே ஒரு தரிசனம் வந்து கொண்டிருக்கிறது, அது ஒரு ஸ்திரீயாக இருக்க நேரிடுகிறது; நான் இப்பொழுது நின்று கொண்டிருக்கிறவிதமாக எனக்கு வலது பக்கத்தில் இந்த வழியில் அவள் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். பித்தப்பை கோளாறினால் அவள் அவதிப்படுகிறாள். அவளுக்கு இருதயக் கோளாறும் கூட உண்டு. என்னுடைய முதுகு திரும்பின நிலையில் இருக்க, நான் அவளுடைய பெயரை அழைத்தால், ஒருவேளை அவள் புரிந்து கொள்ளலாம். திருமதி. ஹான்சன், எழுந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். இப்பொழுது, நான் இன்னும் ஒருபோதும் சுற்றி நோக்கிப் பார்க்கவில்லை. இப்பொழுது, நீ விசுவாசிக்கிறாயா? வெறுமனே விசுவாசத்தைக் கொண்டிரு. அந்தச் சீமாட்டி எங்கேயிருந்தாள்? அவள் பின்னால் இந்த வழியில் எங்கோ ஓரிடத்தில் இருக்கிறாள். சரியாக அங்கே தானா? அந்தக் காரியங்கள் உண்மைதானா, சீமாட்டியே. நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்கள் தானே? நாம் அந்நியர்களாயிருந்தால், உன்னுடைய கரத்தை இவ்விதமாக அசைத்துக் காட்டு. அவையெல்லாம் உண்மை தானே? அப்படியானால், சோதோம் எரிந்து போவதற்கு சமீபமாயிருந்த அந்த வேளையில் ஆபிரகாமுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுக்கும்படிக்கு, அங்கே சோதோம் கோமோராவில் உட்கார்ந்து கொண்டு இருந்த அதே தேவனுடைய தூதனானவர் தான் இன்றிரவும் இங்கே இருக்கிறார். என்னைத் தானே தளர்த்தும்படி செய்வதற்கு ஒரு வரம்... 91வேறு யாரோ ஒருவரின் மேல் அவர் இருப்பதை நான் காண்கிறேன். நான் நம்புகிறேன்... இப்பொழுது, நான் அதிக நேரம் தங்கியிருக்கச் செய்ய வேண்டாம். அப்படியே ஒரு தரிசனத்தைக் காண்கிறேன், ஒரு ஸ்திரீ இங்கே உட்கார்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு சர்க்கரை நோய் உள்ளது. செல்வி. ஃபின்ச், தேவன் உன்னைச் சுகமாக்குவார் என்று நீ விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசித்தால், எழுந்து நின்று உன் கரத்தை உயர்த்து. எனக்கு உன்னைத் தெரியாது, அது சரி தானே? அது சரியென்றால், உன் கரத்தை அசைத்துக் காட்டு. உன்னிடமுள்ள கோளாறு அது தானே? என்ன? சரி. நீ ஏதோவொன்றைத் தொட்டாய், இல்லையா? என்ன... நீ என்னைத் தொடவில்லை, அப்படித்தானே? நீ - நீ தேவனைத் தொட்டாய் - தொட்டாய்... தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. 92உன்னுடைய மூக்கை துடைத்துக் கொண்டிருக்கும் வாலிபனே, நீ என்ன எண்ணுகிறாய்? உனக்கும் கூட தேவன் அவசியமாயுள்ளது. நீ விசுவாசிக்கிறாயா? உன்னுடைய பிரச்சனை என்னவென்று தேவன் என்னிடம் விளக்கிக் கூறுவார். உன்னிடம் ஜெப அட்டை இல்லை, நான் யூகிக்கிறேன்... இல்லை, அங்கே இல்லை... அது சரியே. அங்கே எந்த ஜெப அட்டையும் இல்லை. நான் அவருடைய தீர்க்கதரிசியென்று அல்லது அவருடைய ஊழியக்காரன் என்று நீ - நீ விசுவாசிக்கிறாய், நான் (அதைச்) சொல்ல நினைக்கிறேன். நான் அதை சொன்னதற்காக என்னை மன்னித்துக் விடு; நான் ஒரு தீர்க்கதரிசி அல்ல; நான் வெறுமனே அவருடைய ஊழியக்காரன் தான். நீ நரம்புத்தளர்ச்சியினால் தொல்லைப்படுகிறாய், நீ உன்னைத் தானே அமைதிப்படுத்தி கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாத (அளவுக்கு) மிகவும் அதிகமாய் பயப்படுகிறாய். அது சரியல்லவா? அது சரியென்றால், உன்னுடைய கரத்தை உயர்த்து. நான் சொன்னவைகள் வந்து சம்பவிக்கும் என்று நீ விசுவாசிக்கிறாயா? நீ அதை விசுவாசிக்கிறாயா? நான் அ வ ரு டை ய தீ ர் க் க த ரி சி எ ன் று நீ எ ன க் கு க் கீழ்ப்படிவாயா? அப்படியானால் நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உன்னை விட்டு அந்த நரம்புத்தளர்ச்சியை எடுத்துப் போடுகிறேன். இனிமேல் ஒருபோதும் அதைக் குறித்துப் பேசாதே. போய் சுகமாயிரு. நம்முடைய கர்த்தர், 'நீ இந்த மலையைப் பார்த்து, 'தள்ளுண்டு போ...' என்று சொன்னால்' என்று சொல்லவில்லையா. உன்னால் விசுவாசிக்கக் கூடுமானால்... 93அங்கே சரியாக பின்னால் உட்கார்ந்து கொண் டிருக்கும் மனிதர் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் இங்கே மேலே வரும்படி விரும்புகிறார்; நான் அவர் மேல் கரங்களை வைக்கும்படி அவர் விரும்புகிறார். அது சரியே. சரியாக நீர் உட்கார்ந்து கொண்டிருக்கும் இடத்திலேயே நீர் விசுவாசித்தால், இரத்தக்குழாய்கள் கடினமாகியிருக்கும் (பிரச்சனை) உன்னை விட்டுப் போய் விடும். நீர் அதைச் செய்வீரா? அங்கே மிகவும் பின்னால் உட்கார்ந்து கொண்டு, ஒருவிதமான சாம்பல் நிறமான கண்ணாடிகளை அணிந்து கொண்டிருப்பவர், அங்கே மிகவும் பின்னால் உட்கார்ந்தவாறு என்னையே பார்த்துக் கொண் டிருக்கிறார். நீர் உமது முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், சந்தேகப்படாதீர்... நீர் அதை விசுவாசிக்கிறீரா? 94இப்பொழுது, கவனியுங்கள், சரியாக அந்த மனிதனிலிருந்து சுற்றி சுற்றி வட்டமிடுகிறது, அவர் அதைக் காணாதிருக்கிறார். உம்முடைய கண்களைத் துடைத்துக் கொண்டு, அந்தச் சிறு... சுற்றிலும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர். அதுதான் அது. சரியாக இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் சீமாட்டியே, அது சரியாக இருதயக் கோளாறோடிருக்கும் உன்மேல் இருக்கிறது, நீ அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாய். சரியாக அந்த இடத்திலேயே தேவன் உன்னைச் சுகப்படுத்துவார் என்று நீ விசுவாசிக்கி றாயா? ஆம். சரி. நீ சுகத்தைப் பெற்றுக் கொள்கிறாய்; அது உன்னுடையது. சரி. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. 95விழிப்பாயிருங்கள்; எந்த நிமிடமும் அதை பிடித்துக் கொள்ள ஆயத்தமாயிருங்கள். நீ மிகவும் இனிமையான நபராக இருக்கிறாய், நீ அதிக விசுவாசத்தைப் பெற்றிருக் கிறாய், நீ தேவனுடன் நல்ல தொடர்பில் இருக்கிறாய். எனக்கு உன்னைத் தெரியாது, ஆனால் உன்னிடமும் கூட உள்ள அந்த இருதயக் கோளாறை தேவன் சுகப்படுத்துவார் என்று நீ விசுவாசிக்கிறாயா? உனக்குக் காலிலும் கூட கோளாறு உள்ளது, உன்னுடைய மூட்டில் நீ அதைக் கொண்டிருக்கிறாய், இல்லையா? ஆம், இரட்சிக்கப்படாத ஒரு மகள் உனக்கு இருக்கிறாள், நீ அவளுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாய். அது சரியே. நீ இங்கிருந்து (வர)வில்லை; நீ வடக்கு ஹோலிவுட்டிலிருந்து வருகிறாய். இப்பொழுது நான் யாரைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பது உனக்குத் தெரியுமா? நான் உன்னுடைய பெயரை அழைக்க நீ விரும்புகிறாயா? செல்வி. பியட் (Miss Beard), உன்னுடைய காலூன்றி எழுந்து நின்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அதை ஏற்றுக்கொள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, அது என்ன, நண்பர்களே? சீமாட்டியே, அந்தக் காரியங்கள் உண்மை தானா? அது உண்மையென்றால், உன் கரத்தை அசைத்துக் காட்டு. பாருங்கள், அது சரியே. பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் அந்த ஸ்திரீயை என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் கண்டதேயில்லை. இப்பொழுது, பாருங்கள், கட்டிடம் முழுவதும்... இப்பொழுது, அவர்கள் - அவர்கள் என்னைத் தொட்டார்கள் (பாருங்கள்?); இப்பொழுது அது அப்படியே போதுமானது என்று நான் அறிவேன். நான் போதுமானதைக் கொண்டிருக்கும் போது, அவர்கள் என்னைக் கவனிக்கிறார்கள், உங்களுக்குத் தெரியும். 96இப்பொழுது, என் நண்பனே, நான் உன்னிடம் கூறட்டும்; நான் உன்னிடம் சத்தியத்தைக் கூறியிருக்கிறேன். நான் உங்களிடம் சத்தியத்தைக் கூறியிருக்கிறேன் என்பதை தேவனே நிரூபித்தார். இந்த இதே வார்த்தையைப் பிரசங்கித்து, இந்தக் காரியங்களைக் கூறுகிற அதே தேவனுடைய அபிஷேகமே தேவன் இங்கேயிருந்து அதே காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறிவிக்கிற அதே அபிஷேகமாக உள்ளது. நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? உங்களில் எத்தனை பேர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள், உங்கள் கரத்தை உயர்த்தி, 'நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்' என்று கூறுங்கள். அங்கே கீழே ஒரு அறை உள்ளதென்றும், யாராவது ஜெபிப்பதற்காக இறங்கி வரும்படி - உள்ளே போகும்படி காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் மேய்ப்பர் என்னிடம் கூறுகிறார். நீங்கள் ஏன் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை? அங்கே கீழே போய் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஒரு விசை நாம் அனைவரும் நம்முடைய கால்களை ஊன்றி நிற்போம். நாம் நம்முடைய கரங்களை உயர்த்தி, தேவனுக்கு துதி செலுத்துவோம், ஒவ்வொருவரும் உங்களுடைய சொந்த வழியில் அதைச் செய்யுங்கள். வேண்டாம்... வெறுமனே அதை விசுவாசியுங்கள். பரலோகப் பிதாவே, நீர் செய்திருக்கிற வல்லமையான எல்லா கிரியைகளுக்காகவும், அந்த எல்லா காரியங்களுக் காகவும் நான் உமக்கு துதியையும் மகிமையையும் செலுத்து கிறேன். நீர் தவறாத தேவனாயிருக்கிறீர். நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராகவும், ஒருபோதும் தவறாதவராகவும் நீர் இருக்கிறீர். இப்பொழுது, நீங்கள் ஒருவர் மற்றவர் மேல் உங்களுடைய கரங்களை வையுங்கள். சுகமடையவும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளவும் ஒருவர் மற்றவர் மேல் உங்கள் கரங்களை வையுங்கள். இப்பொழுது, அந்த நபருக்காக ஜெபியுங்கள். ஒருவர் மற்றவருக்காக ஜெபியுங்கள். மேலே பால்கனியில் இருப்பவர்களும், அங்கே மேலே இருப்பவர்களும், ஒருவர் மற்றவர் மேல் உங்களுடைய கரங்களை வையுங்கள்; ஒருவர் மற்றவருக்காக ஜெபியுங்கள், நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் சந்தேகப்படாமலிருந்தால், தேவன் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை உங்கள் ஒவ்வொருவருக்கும் தந்து, ஒவ்வொருவரையும் சுகப்படுத்துவார்.